திரையுலகின் அபூர்வராகம்

This entry is part 4 of 22 in the series 28 டிசம்பர் 2014

balachander

 

1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம்.

இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை

பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு.

படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில்.

விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள்

உண்டு. கோடை விடுமுறை தவிர மற்ற விடுமுறைகளின் போதும் பெற்றோர்

மும்பையில் வ்சித்ததால் என் போன்றவர்களும் சில மலையகப்பகுதி

மாணவிகளும் விடுதியிலேயே இருப்போம். அப்படி இருந்த ஒரு விடுமுறை.

எப்படியொ விடுதி வார்டனிடம் பாதி பொய்யும் பாதி உண்மையுமாக

காரணங்கள் சொல்லி தோழியருடன் விடுதியிலிருந்து எஸ்கேப். நேராக

திரையரங்குப்போய் படம் பார்த்துவிட்டு வரும்போது பெரிய சாதனை

செய்துவிட்டதாக நினைப்பு.

ஆனால் எங்களைத் திரையரங்கில் பார்த்த ஏதோ ஒரு பேராசிரியை

இதை வார்டனிடம் சொல்ல மாட்டிக்கொண்டொம்.

இரவு பிரேயருக்கு முன் வார்டன் அழைத்தார். கண்டிப்பானவர் அப்பெண்மணி,

அதே நேரத்தில் ரொம்பவும் அன்பானவர்.

 

இனி உண்மையை அப்படியே சொல்லிவிட வேண்டியது தான் என்று முடிவு

செய்துவிட்டு ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் பார்த்ததை ஒத்துக்கொண்டோம்.

இந்தப்படம் பார்க்கனும்னு யாரு ஐடியா என்று கேட்க தோழியர் அதிலும்

உண்மை சொல்லி என்னைக் காட்டிக்கொடுத்தாள். வார்டன் முன்னால்

நின்றேன். தலையைக்குனிந்துக் கொண்டு.

முட்டுப்போட்டு பிரார்தனை ஆரம்பித்தது…”ஏசுவே… இதோ …என்னருகில்

நிற்கும் உம் மகள் அறியாது செய்த இக்குற்றத்தை மன்னியும் பிதாவெ..

இவளுடைய பெற்றோர்கள் என்னை நம்பி இவளை என்னிடத்தில் விட்டு

சென்றிருக்கிறார்கள். நான், பிதாவே, அக்குழந்தையை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

நீரே இவளை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.. இன்று இவள் அறியாமல்

தவறு செய்துவிட்டாள்.. கெட்ட எண்ணங்கள் இவள் மனதில் வந்துவிடாமல்

காத்தருளும் பிதாவெ… ” வார்டன் மேடம் இப்படியாக எனக்கும் என் தோழியருக்கும்

அன்றைய தினம் பாவமன்னிப்பு கேட்டு பிரார்தனை செய்தார்கள். அவர் முன்னால்

கண்ணை மூடிக்கொண்டு நின்ற நான் அடிக்கடி திரும்பி பார்த்து என்னுடன்

வந்த தோழியர் சிலர் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு பேர்

கண்களில் கண்னீருடன். எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

இப்போது நினைத்தாலும் அக்காட்சி அப்படியே கண்முன் விரிகிறது.

இதுதான் அபூர்வராகங்கள் திரைப்படம் வந்தக் காலத்தில் இருந்த

கல்லூரி நிலை. ஓரளவு படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் அபூர்வராகத்தை

சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறினார்கள்.

 

மக்கள் திலகம் எம்ஜியார், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்ற பெயர்களுடன்

மட்டுமே திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தக் காலக்கட்டம்.

எம்ஜியார், சிவாஜியை வைத்து எத்தனை எத்தனையோ வெற்றி படங்களைக்

கொடுத்த இயக்குநர்கள் யார் யார்? என்று எவரிடம் கேட்டாலும் தெரியாது.

இந்தக் காலக்கட்டத்தில் தான் கதை வ்சனம் டைரக்ஷன் கே.பாலசந்தர்

என்ற திரைப்படத்தின் உண்மையான அடையாளம் முன்னிறித்தப்பட்டது.

ஒரு திரைப்படத்திற்கு இயக்குநர் எவ்வளவு முக்கியம் என்பதை தமிழ்

திரை ரசிகர்கள் புரிந்து கொள்ள கேபி மிக முக்கியமான ஒரு காரணமாக

இருந்தார்.

 

படகோட்டி என்ற எம்ஜியாரின் வெற்றிப்படம் மீனவர்களின் எந்தப் பிரச்சனையை

பேசி இருக்கிறது? இக்கேள்வியை படகோட்டி படம் எடுக்கும் போதே விமர்சிக்கப்பட்டது.

அதெல்லாம் தேவையில்லை… எம்ஜியார் மீன்வர் உடையில் வந்து ஆடிப்பாடினால்

போதும். எம்ஜியார் ரிக்ஷாக்காரன் உடையில் வந்து ரிக்ஷாவை மிதிக்கிற மாதிரி

நடித்தால் போதும். மீனவ்ர் பிரச்சனையோ ரிக்சாக்காரர்கள் பிரச்சனையோ பேசப்பட

வேண்டும் என்ற அவசியமில்லை… இப்படி இருந்த தமிழ் திரையுலகில்

பிரச்சனைகளின் மையப்புள்ளியைத் தொட்டு அதைச் சுற்றி மட்டுமே கதையை

நகர்த்திச் சென்றவர் கே.பி. தமிழ் திரையுலகில் நடந்த மவுனமான புரட்சி இது.

 

கே.பி அருவருப்பான அரசியல் அநாகரிகங்க்ளை தன் திரைப்பட வசனங்களில்

புகுத்தியதே இல்லை. அவர் பேசிய கதைகளின் கதையோட்டங்களில் அதற்கான

புள்ளிகள் கொட்டிக்கிடக்கின்றன். ஆனால் அவர் தன் தனித்தன்மையை

கடைசிவரைக் காப்பாற்றிக்கொண்டார்.

 

கே.பியின் இன்னொரு புரட்சி அவர் காட்டிய பெண்ணியம். அவர் மட்டும்தான்

திரைக்கதையை பென்ணைச் சுற்றி அவள் சார்ந்த பிரச்சனைகள், அவள் பார்வைகள்,

அவள் காதல், காமம், சமூக ஒழுக்க விதிகளை மீறும் தருணம், இப்படி

முழுக்கவும் பெண்ணிய முகங்களை அவர் காட்டினார். அவரைத் தன

குருநாதர் என்று சொல்லிக்கொள்ளும் திரைநட்சத்திரங்க்ள் எவருக்குமே

அவருக்கிருந்த இந்த துணிச்சல் இல்லை.

பெண்ணின் பிரச்சனைகள் எல்லாம் பெண்ணியமாகவும் ஆணின்

பிரச்சனைகள் எல்லாம் சமூகப்பிரச்சனைகளாகவும் இன்றுவரை

வரையரை செய்யப்பட்டிருக்கின்றன என்பார் எழுத்தாளர் அம்பை.

பெண்ணின் பிரச்சனைகளை இச்சமூகத்தின் பிரச்சனைகளாக

திரையுலகில் காட்டியதில் முதலும் கடைசியுமான வெற்றியைப்

பெற்றவர் கே. பாலசந்தர்.

 

பாலசந்தர் ஓர் அபூர்வராகம்.

 

.

Series Navigationஎன்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
author

புதிய மாதவி

Similar Posts

17 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    A fitting tribute to K Balachandar from a fan!

    But I am not a fan. A simple film-goer only. அவரின் கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்து இரசித்ததண்டு. வியப்படைந்ததுமுண்டு. எனினும், சில படங்கள் too much intellectual posturing. பாலச்சந்தர் படம் பார்ப்பவர்கள் தங்களை மற்றவர்களின் இரசனையை விட இன்டெலெசுவல் இரசனையுடையவர்கள் என்று ஒரு இருமாப்பை பாலச்சந்தரின் பிற்காலப் படங்கள் கொடுக்க ஆரம்பித்தனவெனலாம்!

    Frame to frame I am presenting an intellectual film to you ! என்று சொல்வதைப்போல இருந்ததால் சில படங்களின் பாதியில் நான் வீட்டுக்கு வந்தததுண்டு. Films should be intellectually stimulating but entertaining. KB’s certain films forgot that.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    விடுதி காப்பாளி அபூர்வ இராகங்கள் திரைப்படத்தைப் பார்த்த மாணவிகளுக்காக‌ தேவனிடம் மன்னிப்புக் கேட்டது சரிதான். இத்திரைப்படம் பொருந்தாக்காமத்தை காதல் என்ற பேரில் காட்டுவது இளவயதினரை தீயதை நல்லது என நினைக்கவைக்கும். வயதில் குறைந்த ஒருவன், தன் தாயின் வயதை ஒத்த பெண்ணை காமுகிறான. அவளை எவரும் பார்க்காத சமயத்தில் கட்டித்தழவுகிறாள். அவள் அவனைத்தள்ளி விட்டு, எச்சரிக்கிறாள். மெல்ல மெல்ல செடூஸ் அவளைப்பண்ணுகிறான். அவள் அவனுக்கு பாட்டு ஆசிரியையும் கூட. வயதுப்பெண்கள் – ஒருத்தி விடாமல், நோட் திஸ் ப்ளீஸ்! – உடனேயே அவன் உடலழகில் மயங்கி காதல் கடிதம் இரகசியமாகக் கொடுக்கிறார்கள்.

    ஆக. ஆசிரியைக் காதலிக்கும் மாணவன்; அனுமதியில்லாமல் தன் தாயின் வயதை ஒத்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் பண்ணுபவன், பெண்களுக்கு மானவுணர்வே கிடையாது. பார்த்ததும் பாய்ந்துவிடுவார்கள் என்ற கருத்து – இவை இளங்கலை மாணவிகளை ஈர்த்திருக்கிறது என்றால் அவர் எவ்ளோ பெரிய இயக்குனர்!
    பெண்ணியத்தைப் போற்றும் இயக்குனரின் படம்.

    படத்தை ஒருவேளை அந்தக்காப்பாளி பார்த்திருந்திக்கலாம்; அல்லது கதைச்சுருக்கத்தைக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே //தேவனே இவர்களை அப்படம் தவறான வழியில் கொண்டுபோகாதிருக்க// என்று வேண்டி தன் தாயுள்ளத்தைக் காட்டியிருக்கிறாள். அக்கல்லூரிக்கு இப்படிப்பட்டவர்களால் இன்றும் நற்பெயர்.

    அபூர்வ இராகங்களுக்குப் பதிலாக, புதிய மாதவி, //அவள் ஒரு தொடர்கதை// யைப்பார்த்து வந்திருந்தால், அக்காப்பாளி இப்படி வேண்டியிருப்பாள்:

    //தேவனே, இப்படத்தை இவர்க்ளைப்பார்க்க வைத்ததில் நன்றி. பிறகாலத்தில் எவருக்கும் அஞ்சா மானவுணர்வுடன் இவர்கள் வளர்வார்கள் அல்லவா?//

  3. Avatar
    pravda says:

    திரு பாலசந்தர் திரைப்படங்கள் யாவும ஒருவித நாடகத் தன்மையுடன் அமையப்பெற்றவை.அதுவே தீவிரவிமரிசகர்களின் கருத்துமாகும்.திரு மகேந்திரன் மற்றும் சமீபத்தில் மறைந்த ருத்ரய்யா ஆகியோருடைய திரைப்படங்களுடன் ஒப்பிட்டால் இவ்வுண்மை விளங்கும்.இவருடைய திரைப்படங்களில் துருத்திக்கொண்டிருக்கும் மேட்டிமைத்தனம் எதார்த்த உலகியல் பார்வைக்கு புறம்பானது. மேலும் பாலசந்தர் அவர்களுடைய திரைப்படங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக வக்கிர காட்சியமைப்புகளை கொண்டவை. சமூகத்தின் விதிவிலக்குகளையே ஏதார்த்தநடைமுறை போல் சித்தரித்து சென்றவை.
    தேர்ந்த எழுத்தாளரான புதியமாதவி அவர்கள் சரியான அவதானிப்புடன் இக்கட்டுரையை எழுதாமல் வெகுசன அனுதாப உணர்வலையில் தீட்டியுள்ளார்.

  4. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    பாலசந்தருக்கு கடைசி நாள் வரை சினிமா என்றால் என்ன என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது திரைப்படங்கள், நாடகங்கள் கூட இல்லை. அபத்தமான, செயற்கையாக திணிக்கப்பட்ட சம்பவங்கள் கொண்ட, அபத்தமான வசனாங்கள், (இதெல்லாம் இண்டெலெக்சுவல் சமாசாரம், தீவிர புரடசி அம்சங்கள் கொண்டது) எ3ன்ற ஏமாற்று வேலை யாக எழுதப்பட்டவை) பாமரன் என்பவர் “நீங்கள் எப்போது நாடகங்களை விட்டு சினிமா எடுக்கப்போகிறீர்கள்? என்ற ஒரு கேள்வியை கேட்டது, அது வெளிவந்த குமுதம் பத்திரிகை பயமுறுத்தப்பட்டு, பாமரனின் எழுத்து நிறுத்தப்பட்டது. ஆக, பாலசந்தருக்கு காவலாக, பாதுகாப்பாக ஒரு ரவுடி கூட்டம் எப்போது உண்டு போலும். உலகநாயகன் கமல் சார் மேடை வசனங்களை விட்டு, உண்மையாக மனதில் உள்ளதி எழுதப் போக, குமுதம் பத்திரிகை அந்த தொடரையே பாதியில் நிறுத்திவிட்டது. அதிலிருந்து உலக நாயகன் கமல் சாரின் பாலசந்தர் ஸ்தோத்திரம் இன்னும் பலமாக ஒலிக்கத் தொடங்கியது. விவஸ்தை கெட்ட, முதுகெலும்பற்ற உலகம். கருணாநிதியின் ஓடினாள் ஓடினாள் வசனங்கள் கொண்ட படங்களைப் பார்த்துத்தான் உலக நாயகன் கமல் சார் சினிமாவே என்னவென்று கற்றுக்கொண்டதாக மேடையில் கலைஞர் பெருமான் அமர்ந்திருக்கு திருவாய் மலர்ந்தருளியதை நான் தொலைக்காட்சியில் கேட்டேன். வேறெனன வேண்டும். கழகங்களின் கட்டுப்பாடும் தொழுகைப் பண்பாடும் இயக்குனர் சிகரம் பாலசந்தருக்குக்கூட வாய்த்துள்ளது எப்படி என்பது தெரியவில்லை.

    1. Avatar
      BS says:

      பாலச்சந்தர் செய்த – //தப்பு // – என்னவென்றால், அவர் ஓபனாக திராவிட இயக்கத்துக்குக் கொள்கைகளையோ, தலைவர்களையோ எங்கேனும் விமர்சிக்கவில்லை. கதையில் வரலாம். ஆனால் பட்டவர்த்தனமாக வரவில்லை. சுருக்கமாக, அவர் பிராமணராகப் பிறந்தாலும், வளர்ந்திருந்தாலும், பிராமணரல்லாதோரால், குறிப்பாக, அவ்வியக்கத்துத் தலைவர்களாலும், தொண்டர்களாலும், அனுதாபிகளாலும் (இக்கட்டுரையே ஒரு அநுதாபியால் எழுதப்பட்டிருக்கிறதல்லவா?) பெரிதும் நேசிக்கப்பட்டார். அக்ரஹாரத்து அதிசய மனிதர் என்று வ.ரா வை அண்ணா அழைத்தார். ஏனென்றால் வ.ரா தன் நிலைபாட்டை தன் சுயவிருப்பு வெறுப்புக்களோடு கலந்து விரவிவிடாமல் பாதுகாத்து, பொது உண்மைகளைத் தனக்குத் தோன்றியமாதிரி முன் வைத்தார். அவரைப்போல பாலச்சந்தர் பெரியளவில் போகவில்லையென்றாலும் தன்னளவில் சரி. எனவேதான் கருநாநிதி தள்ளுவண்டியில் வந்து இறுதி மரியாதை செய்தார். எனவேதான் ஒரு திராவிட இயக்கத்தைச்சார்ந்தவரோடு இணைந்து பல படங்களை உருவாக்கினார் (இராம அரங்கண்ணல்).

      பாலச்சந்தரை ஒரு திரைப்பட இயக்குனர் என்ற நிலையில் வைத்து எப்படி விமர்சனம் கூர்மையாகப் பண்ண முடியும் என்பதை ப்ராவ்டா என்பவர் மேலே எழுதியிருப்பதிலிருந்து அறியலாம்.
      The persopn Pravda is not writing here much. But if he writes, he will be veritable intellectual feast. Fantastic observations !

      It is a good lesson to the essayist also: how not to write estimates emotionally! Emotions rob you of your vision and wisdom Madam!

    2. Avatar
      BS says:

      //கழகங்களின் கட்டுப்பாடும் தொழுகைப் பண்பாடும் இயக்குனர் சிகரம் பாலசந்தருக்குக்கூட வாய்த்துள்ளது எப்படி என்பது தெரியவில்லை.// என்று வெ சாமிநாதன் எழுதியதற்குத்தான் என் பதில். ஆனால் திண்ணை ஆசிரியர் குழு அதை எடிட் பண்ணி வேறு மாதிரி மாற்றிவிட்டார்கள். Editing should be such as not to change the main message in the post. My main message was that Ve. Saminathan does not like anyone who is close to Dravidian movement, leaders etc. Hence, his negative views on KP.

      ஏன் இவ்வளவு அக்கறை அவர் மேல்? வயதின் காரணமோ? (இதையும் சென்சார் பண்ணிவிடுவார்கள்) :-(

  5. Avatar
    paandiyan says:

    எல்லிஸ் டங்கன் அவர்கள் முன்னால் ஒரு இயக்கத்தில், MGR, கத்தி கத்தி camera பார்த்து பேச , அவர் சொன்னாராம், இது நாடகம் இல்லை கடைசி பென்ச் வரை கேக்க, இது cinema என்று. இப்படிதான் நாடகம் , cinema வித்யாஸம் தெரியாமல் ரொம்ப பேர் இருக்கின்றார்கள்.

  6. Avatar
    BS says:

    என் பதில் எல்லீஸ் டங்கனுக்கு இப்படி அமையும்:

    இது ஹாலிவுட்டோ ஐரோப்பிய மொழிப்படமோ இல்லை. தமிழ்ப்படம். அங்கே விஷபரில் பேசவேண்டுமென்றால், அப்படித்தான் பேசுவார்கள். ரியலிசம். நேட்சுரல் வே. இங்கே விஷபரில் பேசவேண்டியது கூட கொஞ்சம் சத்தமாகத்தான் இருக்கும். அங்கே வாழைப்பழத்தைக் காட்டினால் போதும், அவர்கள் தாங்களோ போய் எடுத்து தோலை உரித்துச்சாப்பிடுவார்கள். இங்கே அப்படி முடியாது. வாழைப்பழத்தைக் கையிலெடுத்துக்கொடுத்தாலும் ரெஸ்பாண்ட் பண்ணமாட்டார்கள். உரித்து வாயில் தள்ள வேண்டும். இது தமிழர் கலாச்சாரம். வாழ்க்கை முறை. சத்தம், ஆரவாரம், அட்டஹாசம் இவை நம்பப்படுகின்றன. எனவே சிவாஜி கணேசன் நடிப்பு உயர்ந்த நடிப்பு என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அங்கே அவர் நடிப்பைக் கேலி பண்ணுவார்கள். எல்லிஸ் டங்கன் அமெரிக்கர்.கலாச்சாரத்துக்குத் தக்க கேளிக்கை ஊடகஙகளும் இலக்கியத்தின் தரமும் அமையும்.

    PS: Still there were films in which Ganesan acted under tight self or directorial control. For e.g. Deepam and KP’s only film with him: ETHIROLI. KP had the reins in his hands and the horse was under his control throughout the film.

  7. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    முன்னால் காவ்யா என்று ஒருவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய பொளந்து கட்டுவார். பின்னால் அவர் காணாமல் போய் IIT Ganapathi raaman என்ற பெயரில் காவ்யா செய்த காரியத்தையே செய்து வந்தார். இபோது IIT Ganpathiraman-ஐக் காண்பதில்லை. BS வந்திருக்கிறார். எல்லாம் ஒரே ரகம்.
    இவர்களுக்கு ஏதும் shift duty என்னவோ. ட்யூட்டி ஒன்று தான். ஆனால் ஷிஃப்ட்டுக்கு ஷிஃப்ட் ஆள் மாறுகிறார்களோ என்னவோ. இல்லை ஒரே ஆள் புதிய பெயர் தாங்கி வருகிறாரோ என்னவோ.
    எதுவாக இருந்தால் என்ன. இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் குணங்கள் ஆங்கில வசனம் “ what I am trying to say is என்று வசனம் ஆரம்பித்து, “நான் இப்போ என்ன சொல்ல வரேன்னா..” என்று உடனே தமிழ் மொழிபெயர்ப்போடு அந்த வசனம் தொடரும்.
    இன்னொரு குணம். இயக்குனர் சிகரத்துக்கும் சரி, இந்த ஷிஃப்ட் ட்யூட்டிக் காரர்களுக்கும் சரி, தெரியாத விஷயங்கள், புரியாத சமாசாரங்கள், subtlety, artistic sensibility, suggestion, understatement இத்யாதி.
    ஆகையால் நான் சொல்வதைச் சொல்லிவிட்டு நகர்வது தான் என்னால் சாத்தியமானது. இந்த இவர்களுக்கு எட்டாத சமாசாரங்களில் நான் பாடம் நடத்த முடியாது. முந்தைய ஷிஃப்ட் ட்யூட்டிக் காரர்களுக்கும் சரி, இப்போதை BS- க்கும் சரி.

  8. Avatar
    paandiyan says:

    I think BS got confused and registering comment here instead of other article it seems. all his statement says KP..
    eg;
    Deepam and KP’s only film with him: ETHIROLI. KP had the reins ….

    here we are discussing about K. Balachandar (KB)
    or I might be wrong?

    1. Avatar
      BS says:

      Yes here we are discussing KP as a director. In Jyotirlatha Girija’s article in Thinna, KP is discussed as an individual and the relationship between the writer and the TV serial director or maker.

      ஒரு நபர் இறந்த பின் அவரைப்பற்றிய நினைவுகள் அஞ்சலிகள் ஆகும். அந்நினைவுகள் எதிர்மறையாகக்கூட இருக்கலாம் ப்ராவிடா எழுதியதைப்போல. ஆயினும் அஞ்சலிகள். இங்கு எழுதப்படும் கட்டுரை அஞ்சலியே. புதியமாதவி போன்றவரை இயக்குனர் எப்படி ஈர்த்தார் ஒரு திரைப்படத்தால் என்ற நினைவு.

      திண்ணைத் தளத்தாரே இதை செய்திருக்க வேண்டும். கேபி மாதிரி ஒருவர் இறந்த போது, திண்ணை உடனேயே நினைவு கூர்ந்து அன்னாருக்கு தங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள் என்று போட்டிருந்தால் வாசகர்கள் அங்கு தங்கள் அஞ்சலிகளைப்பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே இக்கட்டுரையே வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

      பல ப‌த்திரிக்கைகளில் ஒன்றைச் சொன்னார்கள் அவரின் சாதனையாக: இருபெரும் நாயகர்கள் தமிழ்த்திரைப்படங்களை ஆக்கிரமித்த காலத்தில் மக்கள் அவ்விருவருக்காகவே கொட்டகைகளுக்குப் போகும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கே பி வந்து அதை மாற்றிக்காட்டினார். அதாவது, இயக்குனருக்காக திரைப்படங்களுக்குச் செல்லும் வழக்கத்தை உருவாக்கினார். இங்கு எவரும் அச்சாதனையை எடுத்துக்காட்டவில்லை.

      அவ்விருகதாநாயகர்களுள் ஒருவரின் படத்திற்கு திரைவசனம் எழுதினார் (தெயவத்தாய்). அவரைப்போன்றோருக்கு கேபியால் கதை பண்ணமுடியாது. இரண்டாவது கதாநாயகனுக்கு கதை எழுதி இயக்கவும் செய்தார். ஆயினும் ஒரேஒரு படம்தான். எதிரொலி. நாயகனை இயக்குவோர் நாயகனின் நடிப்பை அவன்போக்கில் விடுபவராகவே இருக்க வேண்டும். அப்படி எவரையும் அண்டவிடாமல் அகலக்கால்களை வைத்தவன் அவன். ஆனால் கே பி நாயகனைத் தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கிய படம் எதிரொலி. கணேசனின் நடிப்பு அபாரம். கதை மாபசான்டின் நெக்லஸை நினைவுபடுத்தும். முதலிலிருந்து இறுதிவரை குற்ற உணர்வில் புழுவாத்துடிக்கவேண்டிய பாத்திரம். கணேசன் விட்டிருப்பாரா? விழுந்துபுரண்டிருப்பார் ! கே பி அவர் போக்கில் விடாமல் தன்போக்கில் இயக்கிய படம் என்பதை டி வி டி போட்டுப்பார்த்துக்கொள்ளவும். இது என் அஞ்சலி.

  9. Avatar
    BS says:

    Jan 5: 5.14 AM datelineல் வெ சாமிநாதன் எழுதிய கே.பியைப்பற்றிய கருத்துகள் அன்னாரின் திரைப்படங்களைப்பற்றி இல்லையே! அவரின் திரைப்படங்களின் subtlety, artistic sensibility, suggestion, understatement பற்றியெல்லாம் இல்லையே!

    கே பியைப்பற்றி இந்த பின்னூட்டங்களில் ஆழ்ந்த பார்வையை வைத்தவர் ப்ராவ்டா என்பவரே. But his views are debatable! No one has cared to take up that view for debate. அவர் தூரத்துக்கு உங்களாலோ, புதிய மாதவியாலே போக முடியாத காரணம் – self-consciousness for Pudhiya Maadavi; self-consciousness and self-conceit for you.

    எல்லா விமர்சனங்களிலும் – அது நாவலைப்பற்றியோ, திரைப்படத்தைப்பற்றியோ – எதைப்பற்றியிருந்தாலும், அங்கே உள்ளுழைக்கப்படுவது உங்களின் சுய விருப்பு, வெறுப்புக்களே. ஒரு அப்ஜக்டிவ் விமர்சனம் உங்களால் எழுதவியலாது. நூறு நாவல்கள் பட்டியல் ஒருவர் போட்டபோது, அதைப்பற்றி கருத்து சொல்ல பாண்டியன் என்பவர் உங்களைக்கேட்டார். நீங்களோ உங்கள் எழுத்துக்கள் எவ்வாறு மார்க்ஸ் போன்றோரால் அலட்சியப்படுத்தப்பட்டன என்று எழுதுகிறீர்கள். எப்படி?

    ப்ராவிடா கேபியைப்பற்றிச்சொல்லும்போது ஒன்றைச்சொல்கிறார்: அதிர்ச்சி மதிப்பீடு. அது பலருக்குப் பொருந்தும். சென்சேஷலாக ஏதாவது பண்ணிவிட்டால் எல்லாரும் பார்ப்பார்கள். குழந்தை அம்மாவின் கவனத்தைக்கவர‌ வேண்டுமென்றே தப்பு செய்யும்.

    இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பானிலாலும் கெடும். அந்த இடிப்பார் நம் தொடக்கக்காலத்திலேயே வந்திருக்கவேண்டும். நம் தவறுகளை மாற்றிக்கொள்ள முடிந்திருக்கும்.

    (க்ருஷ்ணகுமாருக்குச் சொன்ன பதில்தான் வெ சாவுக்கு. என் புனைப்பெயர்கள் மாறக்காரணம் அவற்றை நான் மதிப்பதேயில்லை. 2015 டிசம்பர் 31வரைக்கும் பி.எஸ் தான். என் கருத்துக்கள் படிக்கப்படவும் சிந்திக்கப்படவும்தான் நான் எழுதுகிறேன். நான் ஒரு ஆளுமையாக, அல்லது எல்லாரும் என் பெயரைச்சொல்லி விழாமேடைக்கு அழைத்துப்பரிசுகள் கொடுக்க நான் எழுதவில்லை. I am a self-effacing type. புரிந்ததா? ஆட்களைப் பார்ப்பதை விட்டு என்ன எழுதப்படுகிறது என்பதைப்படித்தால் நன்று.

    If this forum admn insists on a single name for ever, I shall either write or quit. (They insist only on real email id) Because, a single name slowly grasps and traps you and overwhelms you. You become identified with that so much so that you can’t even reverse your views if you find it wrong later on. You are lost !

    I recall a philosopher – I cant remember his name at once – who once said //I disown my persona every five years.// We need not go to that short period. But we should be able to disown if and when we need it. Even politicians do; but we don’t. But they do for their selfish interests. We should do for public interest.

    இங்கு கே பியைப்பற்றி நான் எழுதிய கருத்துக்களேகூட முரண் தோன்றுகிறது எனக்கு. எது சரி? எது தவறு?

    Between the idea
    And the reality
    Between the motion
    And the act
    Falls the Shadow”

    – T S Eliot.

    இந்த உணர்வுதான் எனக்கு. Nothing is certain. It is arrogance to feel you have said the last word on the subject.

  10. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    Jan 5: 5.14 AM datelineல் வெ சாமிநாதன் எழுதிய கே.பியைப்பற்றிய கருத்துகள் அன்னாரின் திரைப்படங்களைப்பற்றி இல்லையே! அவரின் திரைப்படங்களின் subtlety, artistic sensibility, suggestion, understatement பற்றியெல்லாம் இல்லையே!

    இது BS என்னும் இப்போதைய புனைபெயர்க்காரர் (அடிக்கடி இவருடைய கருத்தும் புனைபெயரும் மாறுமாமே) சொல்லியிருப்பது. சரி. நான் என் முந்தைய பின்னூட்டத்தின் ஆரம்பத்திலேயே எழுதியிருப்பது என்ன?

    பாலசந்தருக்கு கடைசி நாள் வரை சினிமா என்றால் என்ன என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது திரைப்படங்கள், நாடகங்கள் கூட இல்லை. அபத்தமான, செயற்கையாக திணிக்கப்பட்ட சம்பவங்கள் கொண்ட, அபத்தமான வசனாங்கள், (இதெல்லாம் இண்டெலெக்சுவல் சமாசாரம், தீவிர புரடசி அம்சங்கள் கொண்டது) எ3ன்ற ஏமாற்று வேலை யாக எழுதப்பட்டவை) பாமரன் என்பவர் “நீங்கள் எப்போது நாடகங்களை விட்டு சினிமா எடுக்கப்போகிறீர்கள்? என்ற ஒரு கேள்வியை கேட்டது, அது வெளிவந்த குமுதம் பத்திரிகை பயமுறுத்தப்பட்டு, பாமரனின் எழுத்து நிறுத்தப்பட்டது. ஆக, பாலசந்தருக்கு காவலாக, பாதுகாப்பாக ஒரு ரவுடி கூட்டம் எப்போது உண்டு போலும்.

    இது பாலசந்தரின் மன்னிக்கவும், இயக்குனர் சிகரத்தின் திரைப்படங்கள் பற்றியில்லாமல் வேறு என்ன வெங்காயம் புண்ணாக்கு பற்றி?

    மறுபடியும் BS என்னும் இப்போதைய புனைபெயர்க்காரர்,இங்கிலீஷில் பொளந்து கட்ட ஆரம்பிச்சாச்சு
    இந்த புனைபெயர்/உணர்வு/க்ருத்து மாறும் ஜீவனுடன் விவகாரம் எதுவும் வைத்துக்கொள்வது இயலாத காரியம். இப்போது மட்டுமல்ல. இனி எந்த புனைபெயருடன் வந்தாலும் சரி, என்ன கருத்து/உணர்வு மாறுபட்டு வந்தாலும் சரி.

  11. Avatar
    BS says:

    //இயக்குனர் சிகரத்துக்கும் சரி, இந்த ஷிஃப்ட் ட்யூட்டிக் காரர்களுக்கும் சரி, தெரியாத விஷயங்கள், புரியாத சமாசாரங்கள், subtlety, artistic sensibility, suggestion, understatement இத்யாதி.//

    இயக்குனர் கே பியை இவ்வளவு மட்டமாக எடை போட்டு பார்த்ததில்லை. கே பிக்கு சினிமா என்றாலே என்ன என்றும் தெரியாது என்றும் சொல்வார்கள். காழ்ப்புணர்ச்சி நன்றாக வேலை பார்க்கிறது.

    வெ சா- அவள் ஒரு தொடர்கதையைப் பார்க்கவில்லை போலும்.subtlety, artistic sensibility, suggestions, understatements எல்லாமே இருக்கும். It is his masterpiece.

  12. Avatar
    BS says:

    //அவரது திரைப்படங்கள், நாடகங்கள் கூட இல்லை. அபத்தமான, செயற்கையாக திணிக்கப்பட்ட சம்பவங்கள் கொண்ட, அபத்தமான வசனாங்கள், (இதெல்லாம் இண்டெலெக்சுவல் சமாசாரம், தீவிர புரடசி அம்சங்கள் கொண்டது) எ3ன்ற ஏமாற்று வேலை யாக எழுதப்பட்டவை) பாமரன் என்பவர் “நீங்கள் எப்போது நாடகங்களை விட்டு சினிமா எடுக்கப்போகிறீர்கள்? என்ற ஒரு கேள்வியை கேட்டது, அது வெளிவந்த குமுதம் பத்திரிகை பயமுறுத்தப்பட்டு, பாமரனின் எழுத்து நிறுத்தப்பட்டது. ஆக, பாலசந்தருக்கு காவலாக, பாதுகாப்பாக ஒரு ரவுடி கூட்டம் எப்போது உண்டு போலும்.//

    அவர் திரைப்படங்கள் நாடகப்பாணியைக் கொண்டவை என்று அவரெடுத்த அனைத்து படங்களுக்கும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட நான் அவைகளைப் பார்த்திருக்கிறேன். நகைச்சுவைப்படங்கள் உட்பட. டி விடியில் எல்லாமே தற்போது கிடைக்கின்றன.

    அப்படியே அனைத்திலும் இருக்கின்றன என்பது ஒரு விமர்சனப் பார்வையே. எல்லாருமே அப்படிச்சொன்னார்கள் என்றில்லை.

    அப்படியே சொன்னதையும் இப்படியும் கொள்ளலாம்: கணேசனின் நடிப்பைக் காணும் தமிழரல்லாதோர் அது வெறும் நாடக நடிப்பு என்று மட்டும் சொல்வார்கள். கணேசன் நடித்ததைப்போன்ற பல பாத்திரங்கள், பால்ராஜ் சஹானியும் செய்திருப்பார். அதைப்பார்ப்பவர்களுக்கு கணேசனது எவ்வளவு நாடகத்தன்மையுடையது எனப்புரியும். இருப்பினும் அவர் நடிப்பு அனைத்தையும் நாடகப்பாணி என்றொதுக்கிவிட முடியாது. பல வேறானவை.

    தமிழ் சினிமா, நாடகத்திலிருந்து பிறந்த குழந்தை. நம் காலத்தில்தான் அது தாயின் கற்பக்கொடியிலிருந்து அறுத்துக்கொண்டது. கே பி, கணேசன் காலங்களில் ஒட்டித்தான் இருந்தன. நாடகங்களைப்பார்த்த அதே மக்களே பாகவதர், சின்னப்பா போன்றோரின் படங்களையும் பார்த்தனர். அவர்களைப் பொறுத்தவரை ஒரே செயல்: ஊடங்கள் மட்டுமே மாற்றம் என்று கொண்டு மகிழ்ந்தார்கள்.

    இயக்குனர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் பிற கலைஞர்களும் நாடகத்திலிருந்து சினிமாவுக்குத் தாவியர்களே. உடையும் கப்பலை விட்டு உயிர்காக்க இன்னொரு கப்பலுக்குத் தாவுவதைப்போல. பணம் இங்கே. மக்களும் இங்கே வந்து விட்டார்கள். நாடகம் பின்சென்றது. நாடகப்பாணி உடன் வந்தது.

    தமிழ்மக்களுக்கும் நாடகப்பாணியே இன்றும் உயர்ந்தது. மக்களின் அடிப்படைக்கலாச்சாரம் வேஷ‌ங்களை எவர் சிறப்பாகக் கலர்புல்லாக அணிகிறாரோ அவரே நமக்கு இன்பம் தருபவர்கள் என்று ஆராதனை செய்வது தமிழியல்பு. They like noise and over acting. In general life, if some one speaks in a low voice, he is suspect in the eyes of Tamilians. They bring the same mindset to every walk of life almost. Subtlety, artistic sensibility, suggestions, understatements என்பன சினிமா தரும் இன்பத்திற்கு இடையூறுகள்.

    …தொடரும்

  13. Avatar
    jeyakumar says:

    முதலில் கே.பாலசந்தருக்கு அஞ்சலிகள். நாடகத்தனமான சினிமாக்களும், சமூகத்தில் விதிவிலக்குகளை மட்டுமே சராசரி நிகழ்வாக காட்டி அதிர்ச்சி மதிப்பீடுகளின் மூலம் பிரபலமானவர் பாலசந்தர். சிந்து பைரவியும் வழக்கமான எக்ஸ்ட்ரா ஆர்டரி கேரக்டரைசேஷந்தான் என்றாலும் நல்ல படமாக அமைந்தது. உன்னால் முடியும் தம்பியும் அவர் எடுத்த நல்ல படங்களில் ஒன்று.

  14. Avatar
    BS says:

    // “நீங்கள் எப்போது நாடகங்களை விட்டு சினிமா எடுக்கப்போகிறீர்கள்? என்ற ஒரு கேள்வியை கேட்டது, அது வெளிவந்த குமுதம் பத்திரிகை பயமுறுத்தப்பட்டு, பாமரனின் எழுத்து நிறுத்தப்பட்டது. ஆக, பாலசந்தருக்கு காவலாக, பாதுகாப்பாக ஒரு ரவுடி கூட்டம் எப்போது உண்டு போலும்.//

    பாமரன் குமுதத்தில் எழுதினார்.
    குமுதம் பத்திரிக்கை பயமுறுத்தப்பட்டது.
    அவர் எழுத்து நிறுத்தப்பட்டது.
    பாலச்சந்தர் தன்னைச்சுற்றி ஒரு ரவுடிக்கூட்டத்தை வைத்திருந்தார்
    —என்று எழுதுவதையெல்லாம் ஆதாரங்களோடுதான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *