This entry is part 15 of 17 in the series 1 பெப்ருவரி 2015

 

மழையின்

நீர்க் கால்கள் நிலத்தில் தொடும்.

 

மழை

வலுத்தாலும்

வலுக்கலாம்.

 

பிசு பிசுத்தாலும்

பிசு பிசுக்கலாம்.

 

அது

அதன் இஷ்டம்.

 

வலுத்தாலும்

வலுக்கட்டாயமில்லை.

 

நீ

நனையலாம்.

 

நனையாமலும் இருக்கலாம்.

 

உனக்கென்ன

கவலை?

 

உனக்குப் பதில் நனைய உன் வீடிருக்கும்.

 

இல்லையானால்

ஒதுங்க ஒரு கூரையிருக்கும்.

 

ஒரு

மரத்தடியாவது இருக்கும்.

 

ஓடிப் போக முடியாமல்

ஒற்றைக் காலில் மரம் தான் நனையும்.

 

மழை மேல் மழை வீழ்ந்து

மழை நனையும்.

 

ஒரு சொட்டுமில்லாமல் ஓயும் வரை ஒரு பற்றுமில்லாமல்

சித்தம் போக்கில் பெய்யும்.

 

மழையின் சித்தம் முதலிலிருந்து கடைசி வரை நனையும்

மரத்திற்கே தெரியும்.

 

கு.அழகர்சாமி

Series Navigationஅவள் பெயர் பாத்திமாஇலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்