தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

வார்த்தையின் சற்று முன் நிலை

வளத்தூர் தி .ராஜேஷ்

Spread the love

இதுவரையிலும் உனக்கு

சொல்லப்படாத வார்தையை

என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன்

அவை உனக்கு பல ரகசியங்களை

சொல்ல கூடும் சற்று சந்தேகி .

 

சில பொய்மையும் அதன் கண்ணீரும்

வடிந்தோடி கொண்டிருக்கும்

அதில் சற்று மூழ்கி எழுந்து விடு .

 

அவைகளை ஒரு சொல்லாகவே

நீ எதிர்கொள்ளவில்லை என்பதை

சற்று நிம்மதி அளிக்கிறது .

 

வாழ்வியலின் அடிப்படை பதிவிறக்கம் போல

உனக்கு சொல்லப்பட்டதை தகர்க்க செய்யும்

வார்த்தையாய் அவைகளை மேலும்

நம்பிக்கையாக்குகிறாய் .

 

கூடுமானவரை அந்த வார்தைகளை

எந்த கணத்தில் உருவானதோ அதே நிலையில்

அதே உயிர்ப்பில் உன்னிடமே வந்து சேர்க்கும்

என் கட்டமைப்பின் மனதின் விதையில்

விதைக்கப்படுகிறது ,சொல்லப்பட்டிருக்கிறது.

இது வெறும் செய்தி மட்டுமல்ல உயிரின் பகிர்வு .

 

அன்பின் எண்ணங்களும் அதன் செயலும்

வீற்றுக்கும் பிரதிபலிப்பை உன் இயல்பில்

இருப்பதை உன் மவுனமும் புன்னகையும்

சற்று காட்டி கொடுப்பதில் அந்த வார்தையின்

பிரபஞ்ச பூரணத்துவமாய் முனைப்பாகிறது .

 

இனி வார்தைகளை வெறும் சொற்களால் ஆவதை

சற்றும் உன்னால்  பொருத்து கொள்ள முடியாது .

-வளத்தூர் தி.ராஜேஷ்

 

Series Navigationஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

Leave a Comment

Archives