தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

ஒன்றாய் இலவாய்

ரமணி

Spread the love

ஆரம்பம் அங்கு இல்லை எனினும்
பயணம் அங்குதான்
தொடங்கியது போலிருக்கிறது.

அரை இரவின்
முழு நிலவாய்
தயக்க மேகங்கள் தவிர்த்து
சம்மதித்த பின்னிருக்கைப் பயணம்
முன்னிறுத்திய காதலின் சேதி
இருட்டினுள் பொதிந்து
வாகனச் சக்கரத்தோடு சுழன்றது.

மௌனமே சங்கீதமாய் வழிந்து
சன்னமாய் எழுதிக் கொண்ட
சித்திரமாய் நீ…
முரணாய் அதிர்ந்து கொண்டிருந்த
வண்டியின் லயமாய் நான்…
எனப் பயணித்த அந்த வேளையின்
ஸ்ருதி கலையாது
இறங்கும் எல்லையை நீட்டி

ஆட்டமும் அதிர்வுகளுமற்ற
வாழ்க்கையின் ஒருமித்த பயணத்தின்
ஏக்கம் விதைத்த தருணத்தின் ஞாபகங்கள்
வளர்ந்து நிற்குது
தனித்த மரமாய்.

_ ரமணி

Series Navigationநான்(?)சிறு கவிதைகள்

Leave a Comment

Archives