தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

கூடு

முத்துசுரேஷ்

தற்செயலாய்
ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன்
என் பிம்பங்களை
பிரித்து மேய்ந்துவிட்டது
நான்கு முட்டைகள்
ஒன்று உடைந்து பிறந்திருக்க
அதன் கண்கள் திறக்கவில்லை
இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை
மூக்கு இன்னும் வளரவில்லை
அதற்கு உணவூட்ட
துடித்த தாயின் அன்பை
அனுபவத்தை, ஆசையை
எந்த கடவுள்
கற்றுகொடுத்தான்?

முத்துசுரேஷ்

Series Navigationசகிப்புமறைபொருள் கண்டுணர்வாய்.

Leave a Comment

Archives