தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 நவம்பர் 2018

சிப்பியின் ரேகைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்

கால் எவ்விப்
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்

கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை

அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்

உப்புப்படிந்த
காற்றோடு கலந்து
அப்பிக் கிடக்கிறது
அலர்ந்த கூச்சல்கள்

ஒற்றையாளாய்
சிப்பி பொறுக்கியபோது
ஒவ்வொருவர் காலடித்தடமும்
கையில் மிருது ரேகையுடன்.

நீலவானம் சேமித்துக்
கொண்டிருக்கிறது
ஒவ்வொருவர் தேடல்களையும்
மூழ்கியவர்கள் வரும்போது கூற.

Series Navigation(75) – நினைவுகளின் சுவட்டில்உரையாடல்.”-

2 Comments for “சிப்பியின் ரேகைகள்”

 • chithra says:

  நீலவானம் சேமித்துக்
  கொண்டிருக்கிறது
  ஒவ்வொருவர் தேடல்களையும்
  மூழ்கியவர்கள் வரும்போது கூற.

  — gr8 ,very nice :)

 • தேனம்மை says:

  நன்றி சித்ரா.


Leave a Comment

Archives