தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

சாலைக் குதிரைகள்

சூர்யா நீலகண்டன்

சூர்யா

 

சாலையில் சிங்கமாய் சீறி

இயந்திரக் குதிரைகளில்

பறந்தவர்களை

காவல் துறை

கேமிராக் கண்களில்

பார்த்து கைகளில்

விலங்கை மாட்டியது.

 

சிறையின் கம்பிகளுக்குள்

இருந்து கண்ணயர்ந்தவர்களின்

கனவில் ஒரு தேவதை வந்து

சொன்னாள்..

 

போட்டிகளுக்கென்றே

களங்கள் இருக்கின்றன..

திறன்களையெல்லாம்

அங்கே கொட்டினால்

கோப்பைகளெல்லாம்

வீட்டில் குவியுமே என்று.

 

 

Series Navigationஇது மருமக்கள் சாம்ராஜ்யம்நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்

Leave a Comment

Archives