தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

வரிகள் லிஸ்ட்

சின்னப்பயல்

Spread the love

கவிதை எழுத அமர்ந்த நான்
அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து
லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன்

முக்கியமானவை , உடனடித்தேவைகள்
முதலில் வைக்கப்பட்டன
கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள்
அடுத்து இடம் பிடித்தன

இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம்
தேவைப்படுபவை பின் தங்கின
எப்போதும் இடம் பிடிப்பவை
என்னாலேயே வரிசையின்
கடைசியில் எழுதப்பட்டன.

எழுதியவை அனுப்பப்படும் இடங்கள்
எப்படியோ தவறுதலாக மாறி விட்டது
உடனே ஒன்று திரும்ப வந்து விட்டது
இன்னொன்றுக்காக காத்திருந்தேன்
அது வெளிவந்து விட்டது.

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

Series Navigationதிருத்தகம்இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்

Leave a Comment

Archives