தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

பேச மறந்த சில குறிப்புகள்

திலகபாமா

தூக்கிப் போட்ட சிகரெட்டுக்காக
கைதட்டத் துவங்கியதிலிருந்து

ஊழலுக்கெதிராக போராடுபவர்களை
நிராகரிக்கவும்
குற்றங்களுக்கெதிரான தண்டனைகளை
தவிர்த்துவிடபோராடவும்
தானே கற்றுக் கொள்ளுகிறது
பின்னவீனத்துவ சமூகக் குழந்தை

இனப்பற்றுக் கான போராட்ட அடையாளம்
மொழியைக் காப்பாற்றுவதில் தொடங்கி
குற்றங்களுக்காதரவாக
போராடுவது வரை நீளுகின்றது.

உணர்வாளர்களை அறிவுத் தளத்தில் யோசிக்க விடாமலிருப்பதை முன்பெல்லாம் இந்தியாவை வெல்ல நினைத்தவர்கள் செய்தார்கள். இப்பொழுது நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கின்றோம்

பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்
தனித்த அடையாளங்களுக்காக பொதுமை நியாயங்களை நிராகரிப்பவர்கள்

Series Navigationகேள்வியின் கேள்விஅதீதம்

Leave a Comment

Archives