தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

வெளியே வானம்

ப மதியழகன்

மற்றுமொரு இரவு
உறக்கத்தை வரவழைக்க
முஸ்தீபுகளில்
ஈடுபட வேண்டியுள்ளது
மது புட்டிகளின்
சியர்ஸ் சத்தங்களைத் தவிர
இரவு அமைதியாக இருந்தது
அன்று பகலில்
சந்தித்தவர்களில்
சில நபர்களின் முகங்களே
ஞாபகத்தில் இருந்தது
படுக்கையை பகிர்ந்து கொள்ள
பணத்தை நீட்ட வேண்டியுள்ளது
எதையாவது செய்து
தன்னிலை மறக்க வேண்டும்
தன்னைப் பற்றிய சிந்தனை
தற்கொலைக்கு தூண்டுகிறது
அவமானங்களும்,
உதாசீனப்படுத்தல்களும்
குறுவாளால் வயிற்றைக்
கிழிக்கிறது
மரண சர்ப்பம்
வேகமாக என்னை நோக்கி
வந்து கொண்டிருக்கிறது
மது அருவியில்
என்னை நனைய விடுங்கள்
என்னை நான் தொலைக்கிறேன்
மீதமுள்ள நாட்களை
எப்படியோ கழிக்கிறேன்.

Series Navigationதவளையைப் பார்த்து…நிலாச் சிரிப்பு

Leave a Comment

Archives