தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

ஏய் குழந்தாய்…!

ஜே.ஜுனைட்

Spread the love

பூவில் ஒருபூவாய்
அழகிற்கோரணியாய்
அடியோ தாமரையிதழாய்
அகம்பாவம் அறியாதவளாய்
குணம் வெள்ளை நிறமாய்
குறுநகையால் வெல்வாய்…!

மகிழ்ந்தால்
மங்கலப்புன்னகையாய்…
மதியால்
மாநிலம்
காப்பவளாய்…
அழுதால்
ஆற்றிடை ஆம்பல் மலராய்…
அதிர்ந்தால்
நாற்றிடை நாதஸ்வரமாய்…
அயர்ந்தால்
தென்னங்கீற்றிடைப் பூவாய்
உறைவாய்.

சீருடைச் சிப்பிக்குள்
முத்தாய்…
தேரிடைப் பூவுக்குள்
தேனாய்…
நேர்த்தியாய்
பாடசாலையில் பயில்வாய்
சீரிய குழந்தாய்
சுறுசுறுப்பாய்..!

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationஅழகியல் தொலைத்த நகரங்கள்இயற்கை

Leave a Comment

Archives