காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்று
ஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் சற்று நேரம் பயணித்துவரலாம் என நினைத்து விண்கலத்தில் கிளம்புகிறீர்கள். சரி போதும் என நினைத்து புறப்ப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்தால் அதிர்ச்சி. உங்கள் கடிகாரத்தில் அரைமணி நேரம்தான் கடந்துள்ளது. நீங்கள் புறப்பட்ட இடத்திலோ ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. கலாச்சாரம் , தேச எல்லைகள் என எல்லாம் மாறிவிட்டன
ஆக , காலம் என்பது நெகிழ்வுத்தன்மை கொண்டது. எதிர்காலத்துக்கோ , கடந்த காலத்துக்கோ பயணிப்பது தியரட்டிக்கலாக சாத்தியமே
ஆனால் ஒரு குழப்பம்லா
கடந்த காலத்துக்கு பயணிக்கிறீர்கள். அங்கே உங்கள் தாத்தா சின்ன பையனாக இருப்பதை பார்த்து, தவறுதலாக கொன்று விட்டீர்கள். ஆக , உங்கள் தாத்தா என்ற கேரக்டரே வரலாற்றில் இல்லாமல் போய் விட்டது. தாத்தா இல்லாமல் நீங்கள் எப்படி பிறந்திருக்க முடியும் ? பிறந்திராத நீங்கள் தாத்தாவை எப்படி கொல்ல முடியும் ?
அதாவது காலப்பயணம் மூலம் நாம் கடந்த காலத்துக்கு பயணிக்க முடியாது , பயணித்தாலும் நம்மால் கடந்த காலத்தில் எதுவும் செய்ய முடியாது என்பதை இந்த paradox மூலம் நிராகரிக்கிறது மேலை நாட்டு தர்க்கம்
காலப்பயணம் அறிவியல் பூர்வமாக சாத்தியமா என்ற கேள்விக்கு அறிவியல்தான் பதிலளிக்க முடியும்சோதனைச்சாலைகளில் அணுத்துகள்கள் அன்றாடம் காலத்தின் முன்னும் பின்னும் அலைகின்றன. காவமற்று உறையவும் செய்கின்றன. ஆனால் மனிதன் காலப்பயணம் செய்வது இப்போதைக்கு சாத்தியமில்லை என ஸ்டீவன் ஹாக்கிங் போன்றோர் சொல்கின்றனர்
எனவே அறிவியல் ரீதியாக இப்போதைக்கு பேசாமல் தத்துவ ரீதியாக கவனிப்போம்
கீழை சிந்தனையை பொருத்தவரை , காலப்பயணம் என்பது மேலை சிந்தனை கூறும் grandfather paradox என்பதை ஏற்கவில்லை
காரணம் , கீழை சிந்தனை முறையை பொருத்தவரை கடந்த,காலம் , நிகழ்காலம் எதிர்காலம் என அனைத்தும் இப்போதே , இங்கேயே இருக்கினறன
ஜெயமோகன் கரு என்ற குறுநாவலில்இதை சித்தரித்துள்ளார்.
இன்னும் பிறந்தே இராத மனிதனால் காப்பாற்றப்படுகிறாள் ஒரு பெண் என காப்பாற்றப்படுகிறாள் என்றொரு சித்தரிப்பு வருகிறது. அவன் இன்னும் பல ஆண்டுகள் கழித்துதான் பிறந்து வளரப்போகிறான். அவனால் காப்பாற்றப்படுகிறாள்.
ஶ்ரீமத்பாகவத்தில்வருமக புராண கதை ஒன்று
ககுத்மி என்றொரு அரசன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். தன் மகள் ரேவதிக்கு உரிய மாப்பிள்ளை தேடும் பொருட்டு , பிரம்ம லோகம் சென்றான்.பிரம்மா சற்று வேலையாக இருந்ததால் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று
பத்து நிமிடங்கள் கழித்து பிரமனை சந்தித்த அரசர் தன்னிடம் இருந்த சில மணமகன்கள் ஓவியங்களைக்காட்டி , உரிய மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கச் சொன்னார்
பிரம்மா நகைத்தார்
இந்த ஓவியங்களில் இருக்கும்யாரும் இப்போது இல்லை. நீஙகள் காத்திருந்த பத்து நிமிடம்என்பது பூமியில் பல்லாயிரம்ஆண்டுகளாகும். நீஙகள் மீண்டும் பூலோகம் சென்றால் , உங்களது சமகாலத்தவர் யாரும் இருக்கமாட்டார்கள். பலராமன்என்பவனை மணமுடியுங்கள் என சொல்லி அனுப்பினார் பிரம்மா
அதாவது பலராமன் மணமுடித்த இளம்பெண் , தனது பா..ட்….டி கால தலைமுறையை சேர்ந்த பெண்ணைத்தான்
காலம் என்பது ரிலேட்டிவ் ஆன ஒன்று என்ற கருதுகோள் மனித மனதில் எப்போதுமே இருந்து வருகிறது
காலம் குறித்த அறிவியல் ஆய்வுகளுக்கு நிகராக , தத்துவம் கலை இலக்கியம் ஆன்மிகம்என அனைத்திலும் இந்த சிந்தனை இருப்பது வியப்புக்குரியது
மனம் என்பது காலம்தான். மனம் அழியின் காலமழியும் என்கிறார் ஜே கிருஷ்ணமூர்த்தி
காலம் அனுமதித்தால் (!!??) காலம் குறித்து நிறைய பேசலாம்