தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

வாசிக்கஇயலாதவர்களுக்கு

ரவி உதயன்

Spread the love

இன்றைய நாளிதழ் செய்தியில்
நேற்று இறந்து இருந்தான்

இன்று அதிகாலை வரை
உயிரோடு இருந்தவன்
வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து
சிறிது சிறிதாக
இறக்க தொடங்கியிருந்தான்

அன்றைய நாளிதழ் செய்திகளை
அன்றைக்கே வாசிக்க
இயலாதவர்களுக்காக
இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

பின்னொரு நாளில்
அவர்கள்அச்செய்தியை
வாசிக்கநேரும் தருணம்
மீண்டும் அவன்
இறக்க வேண்டியிருந்ததது.

ரவிஉதயன்
raviuthayan@gmail.com

Series Navigationஇதுவும் ஒரு சாபம்தெய்வத்திருமகள்

One Comment for “வாசிக்கஇயலாதவர்களுக்கு”


Leave a Comment

Archives