தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

பம்பரம்

ரவி உதயன்

Spread the love

மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை
நடுநாக்கில் தொட்டெடுத்து
சொடுக்கிச்  சுழற்ற
தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி.

சாட்டைக் கையிற்றில்
எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான்.

அட்சய ரேகையிலிருந்து
இடம் மாறி
சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது
சுழலும் பூமிப்பம்பரம்.

Series Navigationசொர்க்கவாசிஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா

One Comment for “பம்பரம்”

  • B.CHRISTY says:

    பூமிப்பம்பரம்! அருமையான உருவகச்சொல்! படித்ததுமே என் சிந்தனையும் நனவுலகத்திலிருந்து கனவுலகத்துக்கு பயணிக்க ஆரம்பித்துவிட்டது.


Leave a Comment

Archives