தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

பிறப்பிடம்

கயல்விழி கார்த்திகேயன்

Spread the love

வெள்ளையர் வேட்டி சேலையிலும்

நம்மவர் ஜீன்சிலுமாய்

நீறு மணமும்

மக்களின் வேண்டுதல்களும்

கமழும் நம் ஊர் கோவில்..

 

ஊர்களின் பெயர்களும்

விற்கப்படும் பொருட்களும்

ஒலித்துக்கொண்டிருக்கும்

முகம் தெரியா மக்கள்

நிறை பேருந்து நிறுத்தம்..

 

அதிகபட்ச அலங்கோலத்தில்

வீசப்பட்ட புத்தகங்கள்,

துவைத்த துவைக்காத

துணிகளின் அணிவகுப்பு

கொண்ட விடுதி அறை..

 

என்று எங்கும்

பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்..

என் கண்கள் நோக்கும் உன் கண்கள்

பார்க்கும் போது மட்டும்

மௌனமே தவழ்கிறது சுற்றிலும்..

பேச முடிந்த கவிதை அத்தனையும்

உன் கண்களே பேசிவிடுவதால்..

 

Series Navigationவேரற்ற மரம்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

Leave a Comment

Archives