தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

கடைச்சொல்

ரவி உதயன்

Spread the love

கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி

ஒரு வேளை
துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்
ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான

கடைசிச்சொல்

Series Navigationஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!

Leave a Comment

Archives