தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

வெறுமன்

சு.மு.அகமது

Spread the love

பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன்

நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில்

அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான்

அதீத ஞானம்பெற்றவன் போல்

போதியின் நிழலில் நின்று

எதேதோ பிதற்றுகிறான்

இலையுதிர்த்த விருட்சத்தின்

கடைசி இலையை கையிலெடுப்பவன்

இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான்

போலப் பொழிதலும்

ஆகச் சிறப்பதுமாய்

பயணத் தொடர்கையில்

மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான்

கவலையால் நிரம்பியவனின் ஓலம்

கவிதையாயின் அவன் கவிஞன்

பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன்

தத்துவமெனில் ஞானியாகிறான்

ஏதுமற்று போனால்…

வெற்றுவெளியில் உலவும்

’வெறுமனா’ய் போவான் அவன்!?

-சு.மு.அகமது

Series Navigationஜென் ஒரு புரிதல் – 27ஞானோதயம்

2 Comments for “வெறுமன்”

  • இளங்கோ says:

    வெறுமைதானே நிரந்தரம்…கவிதையை படித்து முடித்தவுடன், யாருமற்ற வனத்தில், தனியாக நிற்பது போல் ஒரு உணர்வு.. வாழ்த்துக்கள் அகமது !

  • சு.மு.அகமது says:

    நன்றி இளங்கோ கவிதையின் ஊடாய் பயணித்து கருத்தை பகிர்ந்தமைக்கு.வாழ்த்துக்கள்.
    – சு.மு.அகமது


Leave a Comment

Archives