தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

நான் குருடனான கதை

எம்.ரிஷான் ஷெரீப்

Spread the love

தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து

மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக்

கண்களற்றுப் போயிற்று

காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக்

காதுகளற்றுப் போயிற்று

காணச் சகித்திடா அவலட்சணத்தை

தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது

புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு

யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில்

வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று

எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி

திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்

எனது விழிகளை உருவிக்கொண்டு

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationமுத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்குமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9

One Comment for “நான் குருடனான கதை”

 • Padmanabhapuram Aravindhan says:

  ரிஷான்,

  நல்ல கவிதை… ” வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று
  எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி

  திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்

  எனது விழிகளை உருவிக்கொண்டு” மிகவும் பிடித்தது.

  பத்மநாபபுரம் அரவிந்தன்


Leave a Comment

Archives