சமீப காலத்தில், ஜோஸப் ஸ்மித் ஜூனியர் உருவாக்கிய மார்மனிஸம் மதத்தை விட பெரிய மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரை குறிப்பிடலாம் என்றால், பஹாவுல்லா என்று அழைக்கப்படும் மிர்ஸா ஹூசைன் அலி நூரி என்ற ஈரானியரை குறிப்பிடலாம்
மிர்ஸா ஹூஸைன் அலி நூரி நவம்பர் 12 ஆம் மாதம் 1817இல் , பெர்ஷியா (ஈரானின்) தலைநகரான டெஹ்ரானில் கதிஜா கானும் என்ற அம்மையாருக்கும், மிர்ஸா புஸுர்க் என்பவருக்கும் பிறந்தார்.
இவரது வரலாற்றை கூறுமுன்னர், பாப் bab என்று தன்னை அழைத்துகொண்ட ஈரானியரது வரலாற்றை அறியவேண்டும்.
1844 ஆம் வருடம் ஷிராஜ் நகரத்தை சேர்ந்த சையத் மிர்ஸா அலி முகம்மது என்னும் 25 வயது இளைஞர் தன்னை இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கும் மெஹ்தியாக அறிவித்துகொண்டார். இவரது ஆதரவாளர்களாக உருவான மக்கள் இயக்கம் வெகு வேகமாக பெர்ஷிய பேரரசில் பரவியது. இது இஸ்லாமிய முல்லாக்களின் எதிர்ப்பை சம்பாதித்துகொண்டது. இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இவரது 30 ஆம் வயதில், 1850இல் தாப்ரிஸ் நகர மையத்தில் போர்வீரர்கள் வரிசையாக நின்று இவரை சுவரோரம் நிறுத்தி பலருக்கும் முன்னிலையில் சுட்டு கொன்றனர். அதன் பின்னர் இவரது ஆதரவு இயக்கம் ஏறத்தாழ முழுக்க அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறலாம்.
தன்னிடம் இறைவன் பேசினார் என்று இந்த பாப் கூறிக்கொண்டாலும், தன்னிடம் கூறியதே இறைவனின் கடைசி வார்த்தை என்று கூறிக்கொள்ளவில்லை. இவரது பெரும்பான்மையான எழுத்துக்களில் “இறைவன் இன்னும் வரப்போகும் ஒருவர்” என்பவரை பற்றி குறிப்பிடுகிறார். இவ்வாறு வரப்போகும் அவர் உலகத்தில் பழைய மதங்களை எல்லாம் அழித்து, கடவுளின் ராஜ்ஜியத்தை அமைப்பார் என்று கூறுகிறார். தன்னை பின்பற்றுபவர்களையும் வரப்போகும் ஒருவரை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். தனக்கு பின்னால் தனது இயக்கத்துக்கு தலைமை யாரும் இல்லை என்றும், வரப்போகும் அவர் கூறுவதே இறுதியாகும் என்றும் கூறுகிறார்.
மிர்ஸா ஹூஸைன் அலி நூரி தனது 27ஆம் வயதில்தான் பாப் என்ற மேற்கண்டவரை பற்றி கேள்விப்படுகிறார். அதன் பின்னால், இவர் பாப்-இன் கருத்துக்களை ஏற்றுகொண்டு அவரது இயக்கத்தின் பிரதான நம்பிக்கையாளரானார். 1848இல் முக்கிய பாப் சீடர்கள் ஒன்று சேர்ந்து, பழைய இஸ்லாத்தை பின்பற்றவேண்டுமா அல்லது பிரிந்து தனி மதமாக தங்களை அறிவித்துகொள்ள வேண்டுமா என்று ஆலோசனை செய்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற பிரிவுக்கு தலைவராக மிர்ஸா ஆனார். இந்த மாநாட்டுக்கு பிறகு தனது பெயரை பஹா என்று மாற்றிகொண்டார்.
பிராந்திய கஜார் அரசாங்கத்துக்கும் பாப் சீடர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இவர் கைது செய்யப்பட்டார். பாப் சீடர்கள் நாடெங்கும் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்போதுதான் பாப் தன்னை கடவுளின் வெளிப்படுத்தலாகவும் Manifestation of God அறிவித்துகொள்கிறார்.
அதன் பின்னர் பாப் 1850இல் கொல்லப்பட்டதும், அதன் எதிர்வினையாக ஷா நாஸர் அல் தின் ஷா என்ற ஈரானிய அரசரை கொல்ல ஒரு சில பாப் சீடர்கள், திட்டமிட்டு அது கண்டுபிடிக்கப்பட்டு பாப் சீடர்கள் அவர்களது குடும்பங்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படலாயினர். பஹா என்று தன்னை அழைத்துகொண்ட மிர்சா உட்பட பலர் கைது செய்யப்பட்டு டெஹ்ரானில், பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர்
இவ்வாறு பாதாள சிறையில் இருக்கும்போதுதான் தனக்கு பல காட்சிகள் தோன்றின என்று பஹாவுல்லா கூறுகிறார். பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன என்று கூறுகிறார். இந்த சமயத்தில் இறைவன் அனுப்பிய பெண் maiden from God காட்சி தந்ததாக கூறுகிறார். இறைவனின் தூதுவராக வந்த இந்த பெண் இவருக்கு பல செய்திகளை தருகிறார். பாப் தீர்க்கதரிசனமாக கூறிய ”வரவேண்டிய கடவுளின் வெளிப்படுத்தல்” மிர்ஸாதான் என்று இந்த இறைவன் அனுப்பிய பெண் இவரிடம் கூறியதாக கூறினார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு ரஷிய தூதரின் தலையீட்டால், பாப் இயக்கத்தின் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவர்களை அரசாங்கம் நாடு கடத்தியது. பஹாவுல்லாவும் அவரது குடும்பமும் ஒட்டாமன் பேரரசின் கீழ் இருந்த ஈராக்குக்கு சென்றனர். இந்த காலகட்டத்தில் அவர் பாப் சீடர்களின் ஆன்மீக தலைவராகவும் பார்க்கப்பட ஆரம்பிக்கிறார். தன் குடும்பத்தை தனது சகோதரரிடம் ஒப்புவித்துவிட்டு குர்திஸ்தானில் இரண்டு வருடம் தனிமை வாழ்வு வாழ்கிறார். இந்த காலகட்டத்தில்தான் அவர்
“நான்கு பள்ளத்தாக்குகள்” போன்ற முக்கியமான புத்தகங்களை எழுதுகிறார்.
பாக்தாதுக்கு திரும்பி வந்த பஹாவுல்லா பாபி சமூகத்துக்கு புத்துயிர் அளிக்கிறார். இந்த காலகட்டத்தில் அவரை பின்பற்றுபவர்கள் அதிகரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பாப் நியமித்த தலைவரான மிர்ஸா யாஹ்யா என்பவருக்கும் பஹாவுல்லாவுக்கும் இடையே பிரிவு தோன்றுகிறது.
1863இல் பஹாவுல்லா பாக்தாதிலிருந்து நஜிபியா தோட்டத்துக்கு சென்று அங்கு பன்னிரண்டு நாட்கள் இருக்கும்போது தானே இறைதூதர் என்ற அறிவிப்பை செய்கிறார். இந்த 12 நாட்களை பஹாய் மதத்தினர் இன்றும் ரித்வான் என்ற திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இந்த நாளே பாபி சமூகத்திலிருந்து வேறுபட்ட ஒரு தனி மதமாக பஹாய் மதம் பிரிவதாக கருதுகிறார்கள்.
அதன் பிறகு பஹாவுல்லா கான்ஸ்டாண்டிநோபிள் செல்லும் வழியில் பாபி சமூகத்தின் தலைவராக இருக்கும் மிர்ஸா யாஹ்யா இவரை பலமுறை கொல்ல முயற்சிக்கிறார். அவை பலனளிக்கவில்லை. இறுதியில் அவருக்கு விஷம் வைப்பதில் வெற்றியடைகிறார். அதில் அவர் இறக்கவில்லை என்றாலும், அவருக்கு கை நடுங்குவது தோன்றி அவர் சாகும் வரை இருந்தது.
பாபி சமூகத்திலிருந்து ஆட்கள் பஹாய் பிரிவினராக ஆவதை பாபி சமூகத்தால் தடுக்கமுடியவில்லை. 1867இல் மிர்ஸா யாஹ்யா இவரை ஒரு மசூதிக்கு அழைத்து அங்கே போலி இறைதூதர் இறைவனால் கொல்லப்படட்டும் என்று சவால் விட்டார். பஹாவுல்லா ஒத்துகொண்டார். ஆனால், மிர்ஸா யாஹ்யா வரவில்லை. இதனால் பழைய பாபி சமூகம் அவமானமடைந்தது.
பஹாவுல்லாவை பின்பற்றுபவர்கள் தங்களை பஹாய்கள் என்று கூறிகொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
இதன் பிறகு பஹாவுல்லா தான் இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர் எனவும், தன் மதத்தை ஒப்புகொண்டு தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் எழுதிய பல கடிதங்களை பல அரசர்களுக்கு அனுப்பி வைத்தார். பழைய பாபி எதிரிகள் இதனை கொண்டு அவரை கைது செய்யவேண்டும் என்று ஒட்டாமன் அரசை கேட்டுகொண்டனர். பஹாய் மதத்தினரும் இவரது குடும்பமும் இவரும் அக்கா நகரில் சிறை வைக்கப்பட்டனர்.
பெயரளவுக்கே சிறையாக இருந்ததால், இந்த காலகட்டத்தில் இவர் ஆயிரக்கணக்கான நூல்களை பஹாவுல்லா எழுதினார்.
மே 9 ஆம் தேதி 1892இல் ஜூரம் வந்து தனது 74ஆவது வயதில் மறைந்தார்.
பஹாவுல்லா கூறியவை
தானே இறைவனின் வெளிப்படுத்தல் Manifestation of God என்று கூறிகொண்டார். இது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஒரு கருத்து என்றார்.
பல மதங்களில் எதிர்பார்க்கப்படும் இறுதி இறைவடிவம் தானே என்று கூறிகொண்டார். கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கும் கிறிஸ்துவின் மறு தோற்றம், ஷியாக்கள் எதிர்பார்க்கும் மூன்றாம் இமாம், ஜோராஸ்டிரியர்கள் எதிர்பார்க்கும் ஷா பஹ்ரம் வர்ஜவந்த், இமாம் ஹூஸைன், இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கும் இறுதி மெஹ்தி, பாப் சீடர்கள் எதிர்பார்க்கும் இறைவனின் வெளிப்படுத்தல் எல்லாம் தானே என்று கூறிகொண்டார்.
ஆப்ரஹாமின் மூன்றாவது மனைவி வழியாக தான் தோன்றியதாகவும் கூறிகொண்டார்.
இதுவரை 15000க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
–
இவருக்கு பின்னால் பஹாய் மதத்தின் தலைவராக தனது மூத்த மகனான அப்பாஸ் எஃபண்டி என்பவரை நியமித்தார்/ அப்பாஸ் எஃபண்டி தனது பெயரை அப்துல் பஹா என்று மாற்றிகொண்டார்.
—
இன்று பஹாய் மதம் ஒரு உலகளாவிய மதமாக வளர்ந்திருக்கிறது. சுமார் 200 நாடுகளில் இது மத நிறுவனங்களை கட்டியிருக்கிறது. சுமார் 7 மில்லியன் பஹாய்கள் உலகெங்கும் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தியாவே மிக அதிகமான பஹாய்கள் வாழும் நாடு. இங்கே 2.2 மில்லியன் பஹாய்கள் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஈரானில் 350000 பஹாய்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் 1.8 மில்லியன் பஹாய்கள் இருக்கின்றனர். பஹாய் மதமே உலகத்தின் இரண்டாவது அதிகமான வேகத்தில் மதமாக கருதப்படுகிறது.
பஹாய் நிறுவனரான பஹாவுல்லாவுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருப்பதற்கான அறிகுறிகள்.
http://bahai-library.com/walbridge_erotic_allegory
வலிப்பு நோய் என்றதும் நாம் வலிப்பு நோய் உள்ளவர்கள் கீழே விழுந்து கை கால் இழுத்துகொள்வதை கற்பனை செய்வோம்.
epilepsy என்பதை வலிப்பு என்று மொழிபெயர்ப்பதில் வரும் சிக்கல் இது.
epilepsy என்பது மூளைக்குள் நடக்கும் அசாதாரண மின் இணைப்புகளையே குறிக்கிறது. அது மோட்டார் (அதாவது கை கால்களுக்கு கட்டளை கொடுக்கும் மூளையின்) பகுதியில் இப்படிப்பட்ட அசாதாரண மின் அலைகள் தோன்றும்போது அது கை கால் இழுப்பதாக வெளிப்படுகிறது. அதுவே டெம்போரல் லோப் போன்ற சிந்தனையை அலசும் மையம், அல்லது காட்சிகளை அலசும் மையத்தில் தோன்றும்போது அது பிரமைகளையும் அசாதாரண காட்சிகளையும் தோற்றுவிக்கிறது.
சென்ற வார பகுதியில் (பகுதி ஐந்து) இறுதியில் வரும் ராமச்சந்திரனது வீடியோவின் ஆரம்பத்திலேயே டெம்போரல் லோப் எபிலப்ஸியை விவரிக்கிறார். இந்த வலிப்பு மூளைக்கும் நடக்கும் ஒன்று. இது உடல் ரீதியாக அதே போல வெளிப்படுத்த தேவையில்லை.
இது இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கலாம். ஒன்றில் ஒரு அளவுக்கும் மற்றொறு பகுதியில் வேறொரு அளவுக்கும் இருக்கலாம். ஆகவே பஹாவுல்லா கீழே விழுந்து கை கால் இழுத்துகொள்ளவில்லை என்பதால் அவருக்கு டெம்போரல் லோப் எபிலப்ஸி இல்லை என்று கூற முடியாது.
டெம்போரல் லோப் எபிலப்ஸிக்கு என்ன குணாதிசியங்கள் உண்டோ அவைகளில் பெரும்பாலானவை இவருக்கும் இருந்திருக்கிறது என்பதை அவரது வரலாற்றிலிருந்தே அறிந்திருக்கலாம்.
டெம்போரல் லோப் வலிப்புக்கு இருக்கும் சில குணாதிசியங்களை வகைப்படுத்தினால், அவை பஹாவுல்லாவுக்கும் இருக்கின்றன என்பதை பார்க்க்லாம்.
1) மிதமிஞ்சிய இறை உணர்வு.
2) பிரபஞ்சத்தின் உண்மையான பொருளை உணர்ந்துகொண்டதாக கூறுவது
3) காட்சிகள். யாரோ வந்து பேசுவது போன்ற உணர்வு. இறைவனோ இறைவனின் தூதரோ தன்னை வந்து சந்திப்பது போன்ற உணர்வு
4) மிகவும் விளக்கமான தெளிவான காட்சிகள்.
5) மிகவும் அதிகமாக சட்டங்கள், ஒழுக்க வரையறைகள், பற்றி பேசுவது.
6) ஏராளமாக எழுதுவது அல்லது பேசுவது அல்லது வரைவது.
7) தன்னை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது
பஹாவுல்லாவின் எழுத்துக்களில் அவருக்கு பெண் வடிவத்தில் காட்சிகள் இருந்திருப்பதை ஆவணப்படுத்துகிறார்.
http://en.wikipedia.org/wiki/Maid_of_Heaven
In his Súriy-i-Haykal (Tablet of the Temple) Bahá’u’lláh describes his
vision as follows:
“While engulfed in tribulations I heard a most wondrous, a most sweet voice, calling above My head. Turning My face, I beheld a Maiden – the embodiment of the remembrance of the name of My Lord – suspended in the air before Me. So rejoiced was she in her very soul that her countenance shone with the ornament of the good-pleasure of God, and her cheeks glowed with the brightness of the All-Merciful. Betwixt Earth and Heaven she was raising a call which captivated the hearts and minds of men. She was imparting to both My inward and outer being tidings which rejoiced My soul, and the souls of God’s honoured servants. Pointing with her finger unto My head, she addressed all who are in Heaven and all who are on Earth saying: “By God! This is the best beloved of the worlds, and yet ye comprehend not. This is the Beauty of God amongst you, and the power of His sovereignty within
you, could ye but understand.”[2]
ஷோகி எஃபண்டி இந்த சுவர்க்கத்தின் பெண்ணே கிறிஸ்துவர்கள் குறிப்பிடும் பரிசுத்த ஆவி என்கிறார்.
மோஸசுக்கு எரியும் செடியிலும், இயேசு கிறிஸ்துவுக்கு புறாவாகவும், முகம்மதுவுக்கு காப்ரியேல் என்ற தேவதையாகவும் வந்தது என்று கூறுகிறார்.
Shoghi Effendi compares the Maid of Heaven with the Holy Spirit as manifested in the burning bush of Moses, the dove to Jesus, the angel Gabriel to Muhammad. [3] She appears in several tablets of Bahá’u’lláh’s: Tablet of the Maiden (Lawh-i-Ḥúrí), Tablet of the Deathless Youth (Lawh-i-Ghulámu’l-khuld), Tablet of the Holy Mariner (Lawh-i-Malláhu’l-quds) and The Tablet of the Vision (Lawh-i- Ru’yá). The first three of these were written in Baghdad).[1]
இதனையே பஹாய் மதத்தின் அதிகாரப்பூர்வமான பக்கங்கள் எதிரொலிக்கின்றன.
http://www.bahaullah.com/
The year was 1852, and the man was a Persian nobleman, known today as Bahá’u’lláh. During His imprisonment, as He sat with his feet in stocks and a 100-pound iron chain around his neck, Bahá’u’lláh received a vision of God’s will for humanity.
The event is comparable to those great moments of the ancient past when God revealed Himself to His earlier Messengers: when Moses stood before the Burning Bush; when the Buddha received enlightenment under the Bodhi tree; when the Holy Spirit, in the form of a dove, descended upon Jesus; or when the archangel Gabriel appeared to Muhammad.
Shoghi Effendi was once asked about Joseph Smith, and he replied:
“Joseph Smith was a Seer, not a Prophet; neither major nor minor. He had a high standard, but the Baha’is have a higher standard coupled with God’s power that comes direct from God for this age.” (Memories of ‘Abdu’l-Baha, p.117)
பஹாவுல்லாவின் வாழ்க்கை ஆவணப்படம்
3.16இல் பஹாவுல்லா சிறையில் இருக்கும்போது காட்சிகள் தோன்றியது விவரிக்கப்படுகிறது
தொடர்ந்து இப்படிப்பட்ட காட்சிகள் பஹாவுல்லாவுக்கு வந்துகொண்டேயிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
அதே போல மிதமிஞ்சிய இறையுணர்வால் அவர் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை விடாது எழுதிக்கொண்டேயிருந்திருக்கிறார். இதுவும் hypergraphia என்னும் டெம்போரல் லோப் வலிப்பின் ஒரு பக்க விளைவே.
தானே இறைதூதர், இறைவன் தன்னிடம் வந்து சொல்லியிருக்கிறார் என்ற உச்சக்கட்ட நம்பிக்கை அவரிடம் இருந்திருக்கிறது.
உலகம் தனது இறை தூதர் தனத்தை ஒப்புகொள்ளவேண்டும் என்ற விடாத நம்பிக்கையின் காரணமாக பல அரசர்களுக்கு தனிப்பட கடிதம் எழுதியிருக்கிறார்.
உலகம் ஒன்றுபட்டு தனது மதத்தை ஒப்புகொள்ள வேண்டும் என்றும் அதன் பின்னால் எப்படி உலக அரசு இருக்க வேண்டும், அதன் சட்டங்கள் என்ன என்ன என்பது பற்றி பல புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இவை அனைத்துமே இவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கிறது என்பதற்கான தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன.
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-28
- அறியான்
- ‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’
- நழுவும் உலகின் பிம்பம்
- குசினிக்குள் ஒரு கூக்குரல்
- சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘
- லிங்குசாமியின் ‘ வேட்டை ‘
- மாநகர பகீருந்துகள்
- மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்
- நல்ல தங்காள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)
- ஒரு நாள் மாலை அளவளாவல் (2)
- சோ – தர்பார்
- மூன்று நாய்கள்
- உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்
- சந்திரலேகா அல்லது நடனம்..
- புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)
- இறந்து கிடக்கும் ஊர்
- பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 10
- திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் மு வ நூற்றாண்டு விழா
- ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்
- தனி ஒருவனுக்கு
- துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்
- முன்னணியின் பின்னணிகள் – 23
- பயணி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 6