எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் தான் என்று எண்ணி விடாதீர் கள். எந்த ஒரு படைப்பும் ஒரு பக்கத்துக்குள்ளே இருக்க வேண்டும் என்பது வரையறை.
வெள்ளைத் தாளில் 24 பக்கங்கள் கொண்ட இதழ். ஒரே ஒரு விளம்பரம் மட்டும் உள் அட்டையில். விருதுநகரிலிருந்து ஜெ. விஜயலட்சுமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் என்றாலும், முழுமையாக பின்னாலிருக்கும் சூத்திர தாரி செண்பகராஜன்.
முக்கால் பக்க தலையங்கம் ( மீதி இடம் இதழ் விவரங்களுக்கு ), இரண்டு பக்கங் களுக்கு பல்வேறு சாதனையாளர்களைப் பற்றி புகைப்படங்களுடன் செய்தி, ஒரு பக்கத்துக்கு ‘ பவுனு பாட்டி ‘ என்று ஒரு சிறுகதை, நிறைய துளிப்பாக்கள், கவிதை கள்,  மூன்று பக்கங்களுக்கு(!) ஒரு நேர்காணல். நூல் அறிமுகம், நூல் நயம், அறிவிப்புகள், வாசகர் எண்ணங்கள் என முடிகிறது இதழ்.
ஒரே விளம்பரம் என்றாலும், இரண்டு இடங்களில் இரு நூலாசிரியர்களின் தொகுப்பு கள் பற்றிய விவரமும், விலையும், கிடைக்குமிடமும் அதனை விளம்பரம் என்றே எண்ண வைக்கின்றன.
கனமான படைப்புகள் ஏதும் இல்லையெனினும், தொடர்ந்த இலக்கிய முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.
தொடர்புக்கு:
நீலநிலா செண்பகராஜன், 23, க.யி.ச. கிட்டங்கி தெரு, விருதுநகர் – 626 001.
செல் : 94880 01251.
0
- பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
 - ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்
 - ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)
 - குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை
 - சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘
 - வளவ.துரையனின் நேர்காணல்
 - சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்
 - ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
 - பழமொழிகளில் நிலையாமை
 - சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை
 - சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்
 - நினைவுகளின் சுவட்டில் – (84)
 - வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…
 - கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது
 - புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1
 - நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…
 - இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு
 - முன்னணியின் பின்னணிகள் – 25
 - சுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9
 - காமம்
 - கவிதை கொண்டு வரும் நண்பன்
 - சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்
 - உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்
 - பேஸ்புக் பயன்பாடுகள் – 1
 - தற்கொலை
 - கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8
 - மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா