உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்

This entry is part 27 of 31 in the series 5 பிப்ரவரி 2012

எனது எழுத்துக்களை கொலை செய்வதற்குஆயுதங்களோடு எப்போதும் துரத்தி வருகின்றனர்.

அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைக்கின்றனர்.எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால் எழுத்துக்கள் எலிகளாய் செத்துக் கிடக்கும் என நம்புகின்றனர்.

தீவிர எழுத்தின் இறுதி லட்சியமென்பதே சினிமாவுக்கு கதை பாட்டு எழுதவும்,பிரபல இதழ்களில் பத்தி எழுதவும், வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்று அரட்டை செய்யவும், சொகுசாக உட்கார்ந்து பிளாக்கிலும்,பேஸ்புக்கில் எழுதுவதும் என்பதாகிவிட்ட சூழலில் எழுத்து சந்தர்ப்பவசமாக சிலரது வாழ்வின் இருப்பையே தகர்த்திருக்கிறது.

பெரும்பானமை, சிறுபான்மை என்றெல்லாம் அடிப்படைவாதத்திற்கு முகமில்லை என்பதை அனுபவபூர்மாக உணர்ந்திருக்கிறேன். ஜனநாயகவாதிகளும் தமக்கேயான முகமூடிகளோடேயே எப்போதாவது அதிகாரத்திற்கு எதிரானவர்களாக தங்களையும் காட்டிக் கொள்கிறார்கள்.கடந்த பத்தாண்டுக்கு முன்வந்த மைலாஞ்சி கவிதைநூலுக்கு பிறகு எழுதுவதற்கு உருவான மனத்தடை கடந்த நான்காண்டுகாலமாக மிகவும் அபாய நிலைக்கு போயுள்ளது.கவிதையைத்துறந்துவிட்டு ஆய்வுலகத்திற்குள் நுழைய நேர்ந்தது.அங்கும் அபுஜஹில்களும் நம்ரூதுகளும் கொலைக்கார ஆயுதங்களோடு எழுத்துக் குழந்தைகளை கொன்று தீர்த்தனர்.

வர்க்கப் போரென்றோ,இனப் போரென்றோ,தலித்தியப் போரென்றோ இதைச் சொல்ல முடியாததுதான். இந்த ஒடுக்குமுறையை வேறெந்த சொற்களால் நீங்கள் அழைக்கப் போகிறீர்கள். என்னிடம் இந்த கவிதைகளைத் தவிர வேறெந்த ஆயுதங்களும் இல்லை.இந்தக் கவிதைகளில் என் பிள்ளைகளின் கண்ணீரும் கலந்திருக்கிறது.

ஒரு நள்ளிரவின் மெளனத்தில்

ஹெச்.ஜி.ரசூல்,

21/105 ஞானியார்வீதி,தக்கலை-629175 செல்லிடை பேசி: 9443172681

நூல் விவரங்கள்:

கவிதை நூல்: உம்மா:கருவண்டாய் பறந்து போகிறாள்

ஆசிரியர்: ஹெச்.ஜி.ரசூல் பக்கங்கள்:142 விலை: ரூ 90/ வெளியீடு கருப்புபிரதிகள்பி55 பப்பு மஸ்தான் தர்காலாயிட்ஸ் சாலைசென்னை – 600005பேச: 9444272500மின்னஞ்சல்:karuppupradhigal@gmail.com

Series Navigationசமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்பேஸ்புக் பயன்பாடுகள் – 1
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

6 Comments

  1. Avatar
    SOMASUNDARAM says:

    There IS A WORLD TO WIN.Be confident.We know you.We read your poems with utmost interest.We, the peaple of Thamizh Naadu, are stood behind you.you are not alone.Proceed further.Vaazhththukkal kavignare.

  2. Avatar
    admin says:

    கருத்துத் தெரிவித்து பின்னூட்டம் இடும் வாசகர்களுக்கு சில வேண்டுகோள்கள்:

    1.படைப்புகளின் மையக் கருத்தை ஒட்டியே உங்கள் விமர்சனம் அமைய வேண்டும்.

    2. தயவு செய்து கருத்துகளை முடிந்த வரையில் தமிழில் இடவும்.
    Firefox உலவி(browser)ல் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள்
    பொதுவாகவே Epic உலவியில் default ஆக google transliteration addon நிறுவப்பட்டிருக்கும்(install). ஆனால் Firefox உலவி(browser)ல் google transliteration addon ஐ நிறுவ (install) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். இதன்மூலம் நாம் அதே இணையப்பக்கத்தில் இருந்தபடியே தமிழில் தட்டச்சு செய்யலாம்.

    1. Kindly navigate this page https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-transliteration-formerl/versions/

    2. Kindly click the button ‘Add to Firefox’. (Refer 2.png)

    3. Kindly click ‘Allow’ button (Refer 3.png)

    4. Kindly click ‘Install Now’ Button. (Refer 4.png)

    5. Kindly click ‘Restart Now’ Button. (Refer 5.png)

    6. Kindly go to ‘Tools’ on your browser menubar and click ‘Transliterator Preference’ (Refer 6.png)

    7. A popup will be opened. After that, kindly select the checkbox ‘Enable Transliterator for Textboxes’, select the checkbox ‘Enable Transliterator for Rich text editing’, select ‘Tamil’ option from ‘Default Language’ selectbox (Refer 7.png)

    8. Refresh the page by pressing F5 or restart your browser.

    9. If you type a word in english and hit space button, it will be automatically converted from english to tamil. (Refer 8.png)

    Using this addon, we can type in tamil within a same webpage.

    (முனைவென்றி நா சுரேஷ்குமார் அளித்த ஆலோசனை)

  3. Avatar
    Dr.G.Johnson says:

    To The Admin, Dears Sirs, I tried to install Tamil following your instructions, but failed miserably. Could not find ADD TO FIREFOX, ALLOW, INSTALL NOW ETC…It would be better if you could arrange to install automatic conversion to Tamil if we type in English. This is available in THANGAMEEN from Singapore. It is very convenient for the readers to write comments. Kindly do the needful. Thanking You, Yours Sincerely. Dr.G.Johnson.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    To the Administration THINNAI…Dear Sirs, THINNAI is a popular weekly widely read bt Tamilians all over the world. We agree that this is a TAMIL weekly and that deliberations should be done in Tamil. Unfortunately some of us are facing difficulty in installing Tamil in our lap-tops.Hence we resort to the use of English. Even the popular writers in THINNAI often use English when they quote references. English is an universal language. Indians can easily master English. There are many internationally famed Indian writers who write in English. Some of them have won BOOKER PRIZE! Except ARUNDATHI ROY almost all of them are from North India. Sadly there is no one from Tamil Nadu! Our writers confine themselves to Tamil and as their works are not translated. They are unknown to the world. I look forward for Tamils to write in English to gain international fame. Hence writing in English should be encouraged. It is an added benefit for a writer to be bilingual. Therefore I request the administration of THINNAI to allow the readers to write their comments in TAMIL and ENGLISH. Thanking You, Yours Sincerely, Dr.G.Johnson.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    Some of the popular Indian writers in English:
    1.V.S.NAIPAUL
    2.SALMON RUSHDIE
    3.VIKRAM SETH
    4.ARUNDHATI ROY
    5.ROHINTON MISTRY
    6.AMITAR GHOSH
    7.SHASHI THAROOR
    8.UPAMANYU CHATTERJEE
    9.JUMPA LAHIRI
    There are none from Tamil Nadu who can write in English and sell their books world- wide. Our thoughts and works should go to the world.In this era of globalisation the we should foster and master ENGLISH so that our ideas an culture and ways of life could be propagated around the globe. The works of popular TAMIL WRITERS should be made available throughout the world. Our works should be considered for NOBEL PRIZE FOR LITERATURE in the future!…Dr.G.Johnson.

  6. Avatar
    punai peyaril says:

    அங்கீகாரத்திற்காகவோ, பரிசிற்காகவோ தமிழர்கள் மாறலாம்… தமிழ் மாறவேண்டியதில்லை… நல்ல வேளை , திருவள்ளுவர் காலத்தில் இவர் இருந்திருந்தால், ஏன்யா தமிழ்ல எழுதுற… ஆங்கிலத்தில் திருக்குறள் எழுதினால் நோபல் வாங்கலாமில்லையா என்று கேட்டிருப்பார்… எண்ணங்கள் தத்துவங்கள் தோன்றும் மொழிலேயே எழுதட்டும்.. வேண்டுவோர் மொழி பெயர்க்கட்டும் எனும் மாறா மனநிலை சான்சனுக்குப் புரியாது… சந்தைப் பொருளாதாரம் தாண்டியது இலக்கியங்கள்…. திண்ணை வியாபார நோக்கு நிலை கொண்டால், அப்புறம் என்ன அம்லா பாலின் கருத்துக்கள் தான் வரும்… சான்சன் விருப்பப்படி ஆங்கிலத்திலேயே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *