தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 நவம்பர் 2018

கனவுகள்

ஜே.ஜுனைட்


அழகான சிறகு முளைத்து
இதயம்
அண்டவெளியில் பறக்கும்…
அருகே ஒரு வானம் உருவாகும்,
உனக்கும் அது பிடிக்கும்…
இந்த வெளிகளெல்லாம் கடந்து
காட்சிகள் புலனாகும்…
மொத்தத்தில்
மனம் தூய்மையாகும்…
காலம் அல்லாத காலம் உருவாகும்…
காகிதமில்லாமல்
புத்தகம் உண்டாகும்…
மரம் செடி கொடிகளில்லாமல்,
உனக்காய் காற்றுக் கூட வரும்
சுவாசிக்க…
உடல் நொந்திடாமல்
தென்றல் வீசிடும்
இதமாக…
மனிதரில் பல ரகம்,
உனக்காய் தனியொரு கிரகம்
உருவாகும்…
உள்ளம் தனி உருவமாக
வெளியே வந்து தோன்றிடுமே…
மொத்தத்தில்
தொல்லையில்லா உலகு ஒன்று
உனக்காய்
தோன்றி வந்திடுமே…
ஜுமானா ஜுனைட், இலங்கை.
Series Navigationஇன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்பட்டறிவு – 1

One Comment for “கனவுகள்”

  • rishvan says:

    தொல்லையில்லா உலகு ஒன்று
    உனக்காய்
    தோன்றி வந்திடுமே…

    அழகான ஆழமான வரிகள்… நன்றி பகிர்விற்கு…


Leave a Comment

Archives