நானொரு மிகச் சாமானிய இந்தியன். நமது பிரதமந்திரி போன்று உலகப்பிரசித்தி பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயின்று அவர்களால், அளிக்கப்பட்ட பட்டம் பெற்றதில்லை. மேலும் நமது நாட்டின் ரிசர்வ் வங்கியின் தலைவராகி பதவி ஒய்வுபெற்று, ராஜ்ய சபா மூலமாகவே நாட்டின் நிதி மந்திரி, பிரதம மந்திரியானதும் கிடையாது; அல்லது ஹார்வர்ட் வணிகக் கல்லூரியில் (Harvard Business School) பயின்று, நிதித் துறை, உள் நாட்டு பாதுகாப்புத் துறை போன்று சகலகலா வல்ல, மந்திரியானதும் கிடையாது, அல்லது கான்வென்ட் பள்ளியில் ஆங்கிலத்தில் பள்ளிப் படிப்பு முடித்து, அரிதாரம் பூசி, நடிப்புத்துறை மூலமாக தமிழ் நாட்டின் முதல்வராக ஆகும் விருப்பக் கனவே எனக்கு நிச்சயமாகக் கிடையவே கிடையாது. ஆங்கிலத்திலும் தமிழிலும், கலந்து மணிப்பிரவாள நடையில், மணிக்கணக்காக விட்டு விளாசும் பெரிய பேச்சாளனுமல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம், என் போன்ற சாமானியர்களின் தினப் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரியும்.
இப்பிரச்னைகளுக்கான கேள்விகளில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்(திருத்திக் கொள்கிறேன்), அல்லது எனது கேள்விகள் சரியென உணர்ந்தால், அதற்குத் தக்க பதிலை, செயலில் செய்து காட்டவும். இங்கே, என் மனதில் பட்டதை அப்படியே எழுதியுள்ளேன். இவைகளை அவரவர்களுக்குத் தகுந்தவாறு, முன்னுரிமை (Priority) அளிக்க வேண்டியவை மாற்றி, அமைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக:
பொருளாதாரத்தில், ஒப்புமை சார்ந்த அடக்க விலை கருத்தியல் (Comparative Cost Theory) என ஒன்று இருப்பதால், அதன்படி யோசித்தேன். தன்னிச்சையாக இக்கேள்விகள் மனதில் எழுந்தன.
முதல் கேள்வி: மின்சாரத்தைப் பற்றி: சுட்டிக்காட்டிய இடங்களில் மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதால், நாட்டுக்கு எந்த கெட்ட விளைவும் ஏற்பட்டுவிடாது என என் எதிர்பார்ப்பு. மின்சாரத்தடை ஒவ்வொரு இடத்திலும் விதிவிலக்கின்றி எல்லோருக்கும் செயலாற்றப் படுகிறதா?
வண்ணவண்ண விளம்பரத்திற்காக இரவு முழுதும் வெளிச்சத்தைஉமிழும் படி அணையா விளக்குகளுக்காக மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில், உபயோகப்படுத்தப் படுவதற்கும்,
சினிமா தியேட்டரில் நான்கு காட்சிகளுக்காவும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் பேச்சு மேடைகளில்வீணாக உபயோகப்படுத்தப் படுவதற்கும்
மின்சாரத்தை மிச்சப்படுத்தி, (ஆம் ஆத்மி) சாமனியர் வீடுகளுக்கும் போக, [இலவசமாகவோ அல்லது மானியத்தில் குறைந்த கட்டண மாகவோ கூட வேண்டவே வேண்டாம், (குஜராத்தை பார்த்துக் கற்றுக்கொள்ளவும்)] காசுவாங்கிக் கொண்டு உழவுக்காகவும், அல்லது அத்தியாவசிய தொழிற்கூடங்கள்,பள்ளிகள் என மிகத் தேவையான இடங்களுக்கு நாள் முழுதும் அளிக்க வசதிசெய்து கொடுக்க இயலாதா?
இவைகளைத் தவிர, வருங்காலத்தில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைப்பதற்கான என்னென்ன உறுதியான நடவடிக்கைகள், துல்லியமான திட்டங்கள், மேற்கொள்ளப் பட்டுள்ளன என தெரிவிக்க முடியுமா? என் போன்ற சாமானியனும் தான் தெரிந்து கொள்ளட்டுமே!
இரண்டாவது கேள்வி:
பள்ளிகளில் பழைய காலத்தில் ஸ்லேட், பின்னர் காகிதத்தில் நோட்புக், எனஇருந்தது. அதனால், நல்ல கையெழுத்தும், சுய சிந்தனையும் தான்அதிகரித்ததே தவிர குறைவொன்றும் இருந்ததில்லை. இப்போது லாப்டாப்எந்த நோக்கத்தில், ஏன் கொடுக்கப் படுகிறது? இதனால் என்ன சாதனைபடைக்க முடியுமென அரசாங்கம் நினைக்கிறது?
மூன்றாவது கேள்வி:
பிரசாரத்திற்கு மட்டுமே சொல்லப்படும் கிராமப்புற மேம்பாடு, படிக்க வசதிஎனும் விஷயங்களைப் பற்றி அரசியல்வாதிகள் அடிக்கடி பேசும்போது,அரசாங்கமே நடத்தும் கார்பொரேஷன் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்அரசியல்வாதிகளின் பிள்ளைகளை படிக்காது, அவர்களை, ஏன் வெளி நாட்டுப்பள்ளிகளுக்கு அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமா? அல்லது அரசாங்க பள்ளிக்கூடங்கள் தரக்குறைவாக உள்ளது என முடிவு செய்யப்பட்டால், அதற்கான மேம்பாடு நடவடிக்கைகளை ஏன் எடுக்கக் கூடாது? அல்லது ஏன் இதுவரை எடுக்கவில்லை?
நான்காவது கேள்வி:
நம் நாட்டின் வரிப்பணத்தால், அல்லது சர்க்கார் கொடுக்கும் மானியத்தால்நடத்தப்படும் உயர்கல்வி படித்தவுடன் வெளி நாடுகளில் அதிக சம்பளம்ஈட்டுவதற்கு ஓடுபவர்களை ஏன் அனுமதிக்கவேண்டும்? இவர்களுக்குவேண்டிய வசதிகளை இந்திய அரசாங்கமே இந்திய நாட்டில் செய்யமுடியாதா? அல்லது அதற்குத் தக்கவாறு திட்டங்களை ஆரம்ப முதல் அமல் செய்ய இயலாதா? அல்லது அப்படித்தான் இந்திய நாட்டு வசதிகளில் படித்துவிட்டு வெளி நாடுகளுக்கு வேலைக்குப் போக விருப்பப் படுபவர்களிடமிருந்து அரசாங்கம் செலவு செய்த பணத்தோடு, அபராதமும் ஏன் வசூலிக்கக் கூடாது? அவர்கள் வருங்காலத்தில் அனுப்பும் அன்னிய செலாவணி பணத்தைக் காட்டி ஆசைகாட்ட வேண்டாம். நாட்டுக்கு இதனால் விளையும் தீமைகளென்னென்ன என தீர்மானிப்பது முக்கியமானது. வருங்கால விளைவுகளைப் பற்றியும் யோசிக்கவும். இவர்களால், நாட்டில் கிடைக்க வேண்டிய பொருட்களின் விலையேற்றங்களை கணக்கிடவும்.
ஐந்தாவது கேள்வி:
இந்திய நாட்டில் ஒரு வேளைக்குக் கூட சாப்பிடத் திண்டாடும் மக்கள்இருக்கும் போது, அப்படி உண்ணும் பொருட்களை ஏன் வெளி நாடுகளுக்குஏற்றுமதி செய்யவேண்டும்? உள் நாட்டுத் தேவைகள் போக, மிச்சமிருந்தால் தானே வெளி நாடுகளுக்கு அனுப்ப முடியும் எனும் வரையறையை ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? அப்படி நாட்டு உபயோகத்திற்கு மேல், மிச்சமிருந்தால் விற்கலாமே!
ஆறாவது கேள்வி:
உருளைக்கிழங்கு வற்றல்-நொறுக்குத் தீனிகள், தக்காளி சட்னி (கெச்சப்),ஆடிடாஸ்-ருப்போக் செருப்புகள், ஆகிய உயர்விலை சாமான்களைக் காட்டிலும்தரச் சிறப்பாக, ஆனால், விலை குறைவாக உற்பத்தி செய்யும் திறன் இந்தியநாட்டிலேயே இருக்கும் போது, அவைகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்காது, ஏன் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்? இந்திய நாட்டு உற்பத்தியை அதிகரித்தால், இந்திய நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கலாமே!
ஏழாவது கேள்வி:
நல்ல விளைச்சலை அளிக்கும் விவசாயம் செய்யும் நிலங்களைக் கூட ஏன்தொழிற்கூடம் நடத்த அல்லது பல மாடிக்கட்டடம், பொறி இயல் கல்லூரிகள்கட்ட, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை அளிக்க அரசாங்கமே வசதி செய்துகொடுக்க வேண்டும்? தரிசு நிலங்களுக்கா இந்நாட்டில் குறைவு? இத் தரிசு நிலங்களை ஒதுக்கும் போது கூட சுற்றுப்புற சூழ்நிலையையும், நாட்டு மக்களுக்கு இவைகளால் விளையும் தீமைகளையும் நன்றாக பரிசீலனனை செய்யவும். கண்டா கண்டபடி அதிகரித்துள்ள பொறியல் கல்லூரிகளில் என்னென்ன தீங்குகள் நடக்கின்றன, அவைகளின் தரமென்னவெனவும், இவைகள் பல பணம் ஈட்டும் பாஃக்டரிகளாக ஆகிவிட்டதாவது நம் அரசாங்கத்திற்குத் தெரியுமா?
எட்டாவது கேள்வி:
கணக்கில்லாத கோடி ரூபாய்களை, இந்தியர்களை சந்திரனில் நடக்கவிடுவதற்கு செலவழிப்பதை நாட்டுப்புறத்தில் வாழும் 80% இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்புக் கானவைகளுக்காக செலவழிக்கக் கூடாதா? (இதில் இந்திய நாட்டு பாதுகாப்புக்காக பாகிஸ்தானின் போர் மனப்பாங்கையும், பயங்கர தீவிரவாத வெடிகுண்டு கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டியநடவடிக்கைகளைச் சேர்த்து விட வில்லை. நாட்டு பாதுகாப்பு நம் சுதந்திரத்திற்கு அத்தியாவசியம்) ஆமாம்! சந்திரனில் கிடைக்கும் கற்களைவைத்துக்கொண்டு, தற்போது இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் ஆம்ஆத்மிக்கு என்னென்ன நன்மை உண்டாகப் போகிறது என விவரமாகதெரிவிக்க முடியுமா? விஷயம் தெரியாததால் விளைந்த கேள்வி இது. சற்றுவிளக்கமாக பதிலளிக்கவும்.
ஒன்பதாவது கேள்வி:
வியாதி என்பது மனிதர்களுக்கு ஒரேவிதமாகத் தான் இருக்கிறது; வருகிறது.அதில், பணக்காரர்கள் ஆஸ்பத்திரி என்றும், ஏழைகளுக்கான, சர்க்கார்ஆஸ்பத்திரிகள் என்றும் ஏன் சிகிச்சை முறையிலும், கட்டண வசூலிப்பும்இத்தனை ஏற்றத்தாழ்வு இருக்கத் தான் வேண்டுமா? இவைகளை எல்லா விதத்திலும் சரியாக மேம்பாடடையச் செய்து கட்டுப்பாட்டில் வைக்க முடியாதா?
பத்தாவது கேள்வி:
கொலைக் குற்றத்தால், ஒருவரோ, அல்லது ஒரு சிலரோதான், கொல்லப்படுகின்றனர். இக்கொலைகளைச் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைஅளிக்கப்படுகிறது. இதனால், சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கையும்(deterrent) விடப் படுகிறது.
இம்முறை நியாயமானது தான். இதைவிடக்கொடுமையான கோடிக்கணக்கில் பொருளாதாரக் குற்ற விளைவால்,கோடிக்கணக்கான நாட்டு மக்கள் பட்டினி, பசியால் கொல்லப் படுகின்றனரே,அக்குற்றங்களுக்காக, ஏன் எல்லா நிதிகளை (கவனிக்கவும்!) வெளி நாட்டிற்குஅனுப்பி அந்நிய செலாவணி அனைத்தையும் மோசடி செய்பவர்களுக்குத்தூக்கு தண்டனையோடு, அவர்கள் செல்வமனைத்தையும் கோர்ட் உத்தரவுப்படி பறிமுதல் செய்யக்கூடாது? இம்மாதிரி இக்குற்றம்செய்பவர்களுக்கு, இதுவும் ஓர் எச்சரிக்கையாகவும் அமையலாமே!
அடுத்த பத்து கேள்விகள், தொடரலாம்
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்