காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும். வித்தியாசமாய் டாக்டர்.இளமாறன்.?. அவங்கப்பா தமிழ் வாத்தியா இருந்திருக்கணும்..இளமாறன் தான் .. டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜெனெட்டிக் ரிசர்ச் அண்டு அனலைஸஸ் என்கிற எங்கள் துறையின் தலைவர்.. .நிறைய மூளை,நிறைய படிப்ஸ்.—மாலிக்யூலர் பயாலஜியில் போஸ்ட் கிராஜுவேட், ப்ளஸ் கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிலையத்தில், ஜீன் ம்யூட்டேஷனில் நான்கு வருட ஆராய்ச்சி டாக்டரேட். அதைவிட நிறைய முன்கோபம், கொஞ்சம் தூக்கலாய் கர்வம், கொஞ்சம் எக்ஸெண்ட்ரிக் .( கிறுக்கு ) இவ்வளவுதான் டாக்டர்.இளமாறன். மனுஷன் ஆராய்ச்சி பண்றேன் பேர்வழின்னு தடால்புடால்னு ஜீன்களில் விளையாடி, தினசரி எலிகளையும், குரங்குகளையும் பரலோகம் அனுப்பிக்கிட்டு இருப்பவர். வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்கிற ரகம்.
நான்..? நரேன். இளமாறன் சாரின் ஆய்வக உதவியாளன்., எடுபிடி, ஆல் இன் ஆல். .படிப்பு—-எம்..எஸ்.ஸி விலங்கியல். வயசு– முப்பத்தி ஐந்து. திருமணம்..?.இன்னும் இல்லை.ஸோ என்னுடைய இன்னொரு முகத்தில், கலர்களைப் பார்த்துப் பார்த்து குமைந்து, கொஞ்சம் சைட், கொஞ்சம் கடலை,நிறைய ஜொள்ளு,சொல்லமுடியாத ஏக்கங்கள்,கொஞ்சூண்டு அரசியல்,மத்திமமாக சினிமா, என்று திரிந்து, அரசு போடும் இலவசங்களுக்கும், மக்களின் தினசரி சாலை மறியல் இம்சைகளுக்கும் பழகிப்போய் நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலபிஷேகம்,மோர் அபிஷேகம் என்று குடங்குடமாய் ஊற்றி ஜென்மசாபல்யம்அடைந்துக் கொண்டு, பணத்துக்காக ஓட்டை விற்றுவிட்டு, பின்னால் ஊழல் ஊழல் கோஷம் போட்டுக் கொண்டு, என்று வந்தாரை வாழவைத்து தான் வாழாத சராசரி தமிழர் கும்பலில் ஒருவன்.
”ஏய் நரேன்! சீக்கிரம் வந்து தொலைய்யா.முக்கியமான டிஸ்கஷன் இருக்குன்னு சொன்னேன் இல்லே?யூஸ்லெஸ்!..”
கிழவன் கத்துகிறான்.. அட போய்யாங்! என்று இப்படியே அம்பேல் ஆகியிருப்பேன். என்னை கட்டியிழுப்பது டாக்டர் இல்லை,அவருடைய பி.ஏ. மஹிமா என்னும் மஹி.. ஆளை கலங்கடிக்கும் அனாட்டமி.ஐயோ! கூர்மையான அந்த சாம்பல் கண்கள், நாற்பத்தியெட்டு கிலோ பூப்பொதி, பூக்குவியல்,அத்தனையும் வெளிர் ரோஸ்’ எஸ்! 36—24–36 ல் ஒரு சொர்க்கம்..சிரிக்கும்போது கன்னங்களில் விழற அந்த குழிக்கே நீங்க ஃப்ளாட் ஆயிருவீங்க.சார்! ஷ்யூர்! நான் கியாரண்டி.
நான் போனபோது டிஸ்கஷன் இன்னும் ஆரம்பிக்கவில்லை..டாக்டர்.டேனியலும்,மஹிமாவும் மட்டும்தான் இருந்தனர்.. பாஸ் சீரியஸ்ஸாக எதையோ படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். மஹி அங்கிருந்தே என்னைப் பார்த்து சிரித்தாள். ஜிவ் வென்றிருந்தது.
’ஹேய்! நரேன்! ஏன் மேன் இவ்ளோ…இவ்ளோ லேட்டு பண்ணே.? பாஸ் திட்டுது பாரு.”—என்றாள் மஹிமா
நம்புங்கள் சார்! சுத்தமான தமிழ் பெண்ணின் இலக்கண சுத்தமான தமிழ் உச்சரிப்புதான் சார் இவ்ளோ ..இவ்ளோ…மஹிமா கூட தமிழ் பெயர்தான் சார். ஆமாம். சத்தியம் கூட பண்ணுவேன். இப்பல்லாம் காலேஜ் பொண்ணுங்களுடைய பேச்சுகளை கேட்டுப் பாருங்க தமிழை இவ்ளோ..இவ்ளோன்னுதான் பேசுதுங்க. அப்புறம் வார்த்தைகளின் ஊடே,நிறைய ஸ்.ஸ்னு -S- சத்தம் வரணும்..
என்னை பார்த்துவிட்டு பாஸ் முறைத்தார்.. அடுத்த நொடி என்னை மன்னித்து விட்டவராய்
” ஏய்! நரேன்! ஐ காட் இட் மேன். எஸ்! சக்ஸஸ்…சக்ஸஸ்யா. இன்னும் கொஞ்ச நாளில் ஒரு முக்கியமான செய்தியை இந்த உலகத்துக்கு டிக்ளேர் பண்ணப் போறேன். அப்புறம் பாரு இந்த உலகம் முழுக்க ஜெபிக்கப்போகிற மந்திரம் என் பெயராத்தான் இருக்கும்..”
போ! கிழிஞ்சிது கிருஷ்ணகிரி. அவருடைய உற்சாகம் எனக்கு வரவில்லை.இது போல அவர் குதித்து, பின்னால் அவர் பரிசோதித்த எலியோ, குரங்கோ செத்துக் கிடந்ததை பலதடவைகள் அப்புறப் படுத்தியிருக்கிறேன்..
”ஐயோ! இப்ப என்ன பண்ணிட்டீங்க சார்/.”
“ கேன்ஸரை ஒழிக்கும் வழியை கண்டுபிடிச்சிட்டேன்டா..பாவி. அப்ப்பா! எவ்வளவு பெரிய வெற்றி?,எத்தனை வருஷ போராட்டம்?.மரபணு மாற்று சிகிச்சையை. எலிக்கு செஞ்சி பார்த்துட்டேன் . ஜெயிச்சுட்டேன்டா.. சக்ஸஸ் ஹ..ஹ..ஹா!.”—முஷ்ட்டி உயர்த்தி சின்ன பிள்ளை மாதிரி குதித்தார்.
“நேத்து லேப்ல நாலஞ்சி எலி செத்துக் கிடந்ததே அது உங்க வேலைதானா?.”
டாக்டர் டேனியலும், மஹியும் சிரித்து விட்டார்கள்.டாக்டர் இளமாறன் அட அற்பப் புழுவே! என்பதைப் போல என்னை பார்த்து விட்டு
”ஃபூல்! இது நடந்து ஆறு வருஷம் ஆச்சிடா.. அடுத்த ஸ்டெப் சிம்பன்ஸி குரங்கிடம் டெஸ்ட் பண்ணணும்.அதையும் ப்ண்ணிப் பார்த்துட்டேன் தெரியுமா?..பெஸ்ட் ரிஸல்ட்.”
” எல்லாந் தெரியும் சார்..முன்னே ஒரு தடவை அப்பிடித்தான் குரங்குகிட்ட ஜீன்ல என்னவோ பண்ணிப்புட்டு பெஸ்ட்னு குதிச்சீங்க, என்னாச்சி?. அந்த குரங்கு உடம்பு ஊதிப் போயி செத்துப் போச்சு., இன்னொண்ணு என்னா பிரச்சினைன்னு தெரியாமலே உயிரை விட்டுச்சி.. சொல்லிட்டேன்.`எல்லாம் காலி இன்னும் ரெண்டே ரெண்டு குரங்குங்கதான். உசுரோட இருக்கு பார்த்துக்கோங்க.. நம்மூர்ல சிம்பன்ஸி குரங்கு எங்கே விற்கும்னு கூட தெரியாது.”
“யூஸ்லெஸ்! அதிகப்பிரசங்கி. ஆராய்ச்சின்னா அப்படி இப்படித்தான் இருக்கும் ஜெனட்டிக் கோட்ல நமக்கும் சிம்பன்ஸிக்கும் ஒரேஒரு குரோமோசோம் தாண்டா வித்தியாசம். அதனாலதாண்டா.”
“சந்தோஷம். அதனாலதான் மனுஷன் பொழைச்சான்.”
அதற்குள் பாஸ்ஸினுடைய நண்பர் டாக்டர் சுனில் ஷெட்டியும் வந்து சேர்ந்தார்.
“இளமாறன்!ஜீனோம்ல கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் என்பது பாறை மேல விதைச்ச மாதிரி .வேஸ்ட்.’”
இளமாறன் அலட்சியப் படுத்திவிட்டு நகர
“அது என்னா மேன்! பாறை மேல வெதச்சா மொளைக்காதா என்ன?.”—மஹிமா.
“மொளைக்கும், அது வேற வெதைப்பு.”
“என்னா அது?.”
“அதுக்கு நீயும் நானும் ஒரு ராத்திரி பாறை மேல தங்கணும்.”
”தங்கினா?.”.
வெதச்சி காட்டுவேன்.”
“ஏய்!”
அதற்குள் திருமாறன் சீரியஸாக பேச ஆரம்பித்து விட்டார்.
“நண்பர்களே!
ATGC என்ற நான்கு ஜீன் எழுத்துக்களைக் கொண்டு மும்மூன்று சொல் பதமாக திரும்பத் திரும்ப முந்நூறு கோடி தடவைகள் எழுதப் பட்ட மனிதன் என்ற இந்தப் புத்தகம், இயற்கையின் மிஸ்ட்ரி.. படிக்கப் படிக்க சுவாரஸ்யமானதும், ஆச்சர்யமானதுவும் ஆகும். எவ்வளவு ரகசியங்கள்? பெரிய செய்திக் கடல் அது. அதில் நான் இறங்கி .மனிதனை வதைக்கும் கேன்சர் ஸெல்கள் உற்பத்தியாவதின் சூட்சுமத்தை ஓரளவு தெரிந்துக் கொண்டு விட்டேன்..நம் உடம்பு ஸெல்களில் உள்ள ஜீன்களில் இரண்டேஇரண்டு ஜீன்கள்தான் கேன்சரை ஆக்குவதும் ,அழிப்பதும்.எஸ்!
நாங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.டாக்டர்.ஷெட்டி கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தார்.
P16– என்கிற புரத உற்பத்தியைத் தூண்டும் ஜீனும், FAS– என்கிற ஜீனும் தான் நம் உடலில் கேன்ஸர் செல் உண்டாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.. நீரழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப் பட்ட எட்டு எலிகளை தேர்ந்தெடுத்தேன். அவைகளின் செல்லில் இருந்து P-16– ஜீனை நீக்கிவிட்டேன், கொஞ்ச காலம் கழிச்சி பார்த்தபோது, அவைகளின் சர்க்கரை வியாதி முழுசாய் குணமாகியிருந்தது…செக் பண்ணிப் பார்த்தபோது, அவற்றின் கணையத்தில் இன்சுலினை சுரக்கும் பீட்டா ஸெல்கள், அதாவது ஒருதடவை அழிந்தால் திரும்ப முளைக்காத குணமுடைய பீட்டா ஸெல்கள் அதிசயமாய் திரும்ப முளைத்திருந்தன. அந்த எட்டு எலிகளுக்கும்.”
சொல்லிவிட்டு பெருமிதத்துடன் பார்த்தார்.
“டாக்டர்! இதில நீங்க பெருமைப் பட்டுக்கிறதுக்கு என்ன இருக்கு?. இதையெல்லாம் நார்மன் ஷார்ப்லெஸ் 2006-லேயே கண்டுபிடிச்சிட்டார்.”—-என்றார் டக்டர் டேனியல்.
“தெரியும். அவரு கண்டுபிடிச்சா என்னய்யா?நம்ம நாட்ல நான் கண்டுபிடிச்சிருக்கேன்.. தெரியுதா?..யூஸ்லெஸ்! கட்டின வீட்டுக்கு முட்டக்கலி பேசறதுன்னா முன்ன முன்ன வந்துடுவீங்களே..
டேனியல் அடிக்குரலில் என்னிடம்
“உங்க பாஸ் என்ன காமெடி பீஸா? இல்லே மறை கழண்டுக்கிச்சாய்யா?.”
”ரொம்ப ஆர்கியூ பண்ணாதீங்க. சப்புனு அறைஞ்சிடுவார்.”—டேனியல் நிஜமாகவே பயந்துவிட்டார்.பாஸ் தொடர்ந்தார்.
“ஆனால் P-16 ஜீன் துண்டிக்கப் பட்டவுடன் அதிக அளவில் கேன்சர் ஸெல்க..-”
‘தெரியும் டாக்டர்! எக்கச்சக்கமாய் கேன்சர் ஸெல்கள் உற்பத்தியாகியிருக்கும்.அதான? தெரியும். இதையும் நார்மன் ஷார்ப்லெஸ் சொல்லி…”
“ஷட் அப்! நார்மன்..நார்மன்.. அவன் அங்க சொன்னான், நான் இங்க சொன்னேன்.புரிஞ்சிதா? சொல்றதை மட்டும்கவனிச்சா போதும்…அதனால கேன்சர் ஸெல்களுக்கு நிறைய எரி பொருட்களை அனுப்பி அவைகளின் வளர்ச்சியைத் தூண்டுகிற FAS–ஜீனையும் இப்போது துண்டித்து விட்டேன்.”.
”ஐயோ!அப்புறம்?.
“அப்புறம் என்ன? கேன்சர் ஸெல்கள் உணவும் ,ஆக்ஸிஜனும் கிடைக்காம கொஞ்சம் கொஞ்சமாய்அழிந்து ஒரு ஸ்டேஜில் கேன்சர் செல்கள் காணாமலே போய்விட்டன. ஸோ கேன்சர் நோயாளியின் உடம்பிலிருந்து P–16 ஜீனையும்,,FAS ஜீனையும் நீக்கிவிட்டால் கேன்சரை குணப் படுத்திவிடலாம்…”
அப்போது டாக்டர் ஷெட்டி குறுக்கிட்டு
‘”டாக்டர்!கோவிச்சிக்காதீங்க, இதுவரைக்கும் நீங்க சொன்னதையெல்லாம் பெர்னார்டு க்ரெஸ்பியும், நார்மன் ஷார்ப்லெஸும் எலியிடம் எப்பவோ செஞ்சி பார்த்துட்டாங்க.”
“அதனால என்ன?.”
“என்னவா?அப்ப சரி. .ரிலேட்டிவிட்டி தியரியைக் கூட ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கல, நான்தான் கண்டுபிடிச்சேன்னு. பீலா வுடுவீங்க போலிருக்கே.”
பாஸ் அவரை கடுப்புடன் முறைத்தார்.
“கவனியுங்க. இப்ப நான் சொல்லப்போற விஷயத்தை கவனியுங்க.. மரபணு சிகிச்சையை மனுஷனுக்கு செய்யப் போகிறேன்..”
“ஐயோ1டாக்டர்1 ப்ளீஸ்! வேணாம். அவசரப்படாதீங்க என்னாகுமோன்னு ,பயந்துக்கிட்டுத்தான் இன்னும் மனுஷன் கிட்ட ட்ரை பண்ணாம இருக்காங்க.. .வேண்டாம். விட்ருங்க. பெரிய வம்பாயிடும் இன்னும் நிறைய ஸ்டடி பண்ணணும் பின் விளைவுகளைப் பற்றி ஸ்டடி பண்ணாம மனுஷ உயிரோடு விளையாடாதீங்க.. பின் விளைவுகளைப் பற்றி தொடர்ந்து சில வருஷங்கள் கண்காணிக்கணும்.வேணாம் மனித உரிமை இயக்கம் உங்களை சும்மா விடாது.,”—எல்லோரும் கோரஸ்ஸாக கத்தினோம்.
“முடியாது இது என்னுடைய ஆறேழு வருஷ முயற்சி. நிச்சயம் ஜெயித்துக் காட்டுவேன்..”
“டாக்டர் டேனியல் கடுப்புடன் பார்த்தார்.
“டாக்டர்! உயிருள்ள மனித உடலின் கட்டமைப்பின் உள்ளே கை வைக்கறீங்க,.பிரம்ம ரகசியத்தை உடைத்து உள்ளே போய், திருத்தி, அதனால் எதிர்பாராத பின் விளைவுகள் எதுவும் வந்து விட்டால்..? என்ன பண்ணுவீங்க?. ஜாக்கிரதை. எங்களுக்கெல்லாம் ரொம்ப சீனியர்..நீங்க உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.”
பாஸ் எனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல மந்தகாசமாய் புன்னகைத்தார்.
“ஒரு திருத்தம் நான் மரபணு சிகிச்சையை மனுஷனுக்கு செஞ்சிமுடிச்சி இன்றுடன் இரண்டு வருஷங்கள் முடிஞ்சிடுச்சி….”
அடப் பாவி கெடுத்தானய்யா..எனக்கே பொறுக்கல இந்த அரை லூஸு என்ன பண்ணிச்சோ?, அந்த ஆளு யாருன்னு தெரியலியே.அவன் கதி என்னாச்சோ தெரியலியே..
”யார் அந்த மனுஷன்?.”
“ பெயர்—வேணு செட்டியார் ,வயசு—60,, டி.கே.டி.கேன்சர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வந்த நோயாளி..இதே ஊர்தான் கடுமையான நீரழிவு வியாதி.. சர்க்கரை அளவு P.P—450. .மி.கி. அதில்லாம மூணு வருஷங்களாக வயிற்றில் புற்றுநோய் வேறு ,( கார்ஸினோமா ஸ்டமக்.).மூன்றாவது நிலை..நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்..”
“ உன்கிட்ட மாட்டியாச்சில்ல?. சீக்கிரமே செட்டியார் எண்றதை நிறுத்திடுவாரு..”—நான் மஹியிடம் ரகசியமாகச் சொல்ல,அவள் சிரிப்பை அடக்க சிரமப் பட்டாள். அந்த செட்டியாரை எனக்குத் தெரியும். மனுஷன் செம குண்டு,பப்ளிமாஸ் முகம்.. காலையில் கர்புர் ரென்று மூச்சிரைக்க வாக்கிங் போவார்.
“டாக்டர் அவருக்கு என்ன பண்ணீங்க?.”
”சிம்பிள். அந்த ரெண்டு .ஜீன்களையும் நீக்கிவிட்டேன்.”
டாக்டர் ஷெட்டிக்கு ஆத்திரம் எல்லைமீறிவிட்டது உரிமையுடன் கத்த ஆரம்பித்தார்..
”அட பைத்தியக்காரா! எலிக்கு செஞ்சி பார்த்துட்டு மனுஷனுக்கு செஞ்சேன்றீயே நாமளும் எலியும் ஒண்ணா? எலி ஒரு ஈத்துக்கு பத்து குட்டி போடும், நாம ஒண்ணு போடுவோம் எப்பவாவது ரெண்டு….நம்முடைய பரிணாம வளர்ச்சி வேறு, எலியின் பரிணாம வளர்ச்சி வேறு. FAS–ஜீன்களின் செயல் நமக்கு பொருந்தும்,எலிக்குப் ”பொருந்தாது. இது தெரியாது உனக்கு? சிம்பன்ஸிக்கும் நமக்கும் கூட சில அடிப்படை வித்தியாசங்கள் இருக்கு. சே!..”.
’”நண்பா!ஆத்திரப்படாதே.இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னா இப்ப சொல்ற?.ஓகே! நல்லது நடந்து விட்டது. செட்டியாருக்கு எல்லா மாற்றங்களும் சரியா ஒர்க் அவுட் ஆயிடுச்சிப்பா..”
“ஒத்துக்க முடியாது. நாங்க பார்த்து தரோவா செக் பண்ணணும். அதுவரைக்கும் உலகத்திற்கு .எதையும் டிக்ளேர் பண்ணி அசிங்கப் படாதே இளமாறன்.”
அடுத்த வாரத்தில் செவ்வாய் கிழமை அன்றுடாக்டர் ஷெட்டியும், டேனியலும், மேலும் மூன்று டாக்டர்களும் கொண்ட குழு ஒன்று வந்தது . பரிசோதனை செய்வதற்கு வசதியாக,. வேணு செட்டியார் வரவழைக்கப்பட்டிருந்தார்.., கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையறையில் செட்டியார் கிடத்தப் பட்டிருந்தார். நாங்கள் போனபோது படுக்கையில் கிடந்தார். பார்த்த பார்வையில் இன்னமும் மரணக்களை இருந்தது. P-16 ஜீன் நீக்கப்பட்டதின் உபயமாக .எடை குறைந்து ஆள் சற்று இளமையாகத் தெரிந்தார். புற்றுநோயினால் உப்புசமாயிருந்த மேல் வயிறு இப்போது இல்லை. அப்டாமென் ஸ்கேன் ரிப்போர்ட் நார்மல் என்றது..பையாப்ஸி ரிப்போர்ட்டும் கேன்சர் ஸெல்கள் இல்லை என்று சான்றளித்தது.. எல்லோரும் அவர் வயிற்றை அழுத்தி பரிசோதித்தார்கள்..இன்னொரு ரிப்போர்ட் ரத்தத்தில் சர்க்கரை அளவுவெறும் வயிற்றில் 110மி.கி, பி.பி.—140 மி.கி.என்றது,அவைகள் ஆரோக்கியமான அளவுகள்தான்….. ப்ளேட்லெட்ஸ் கவுண்ட்டிங் முதற்கொண்டு மரபணு கோளாறுகளினால் வரக்கூடிய எல்லா தவறுகளையும் சோதித்து முடித்தார்கள். பர்ஃபெக்ட்,அருமை..டாக்டர்.டேனியல் சந்தோஷ மிகுதியில் ஓடிப் போய் பாஸ் ஐ கட்டிக் கொண்டார்.. டாக்டர்.ஷெட்டி கிட்டே போய் மகிழ்ச்சியுடன்
“ மிர்ரக்கிள், கங்கிராட்ஸ்பா, உன் ஒருத்தனால் இந்தியாவுக்கே பெருமை வரப் போகிறது.”—என்றார். எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினோம்.
”இதை இப்பவே டிக்ளேர் பண்ணிடாதே. குறைஞ்சது ஒரு பத்து கேன்சர் நோயாளியையாவது குணப்படுத்திவிட்டு அப்புறம் டிக்ளேர் பண்ணு, பேடண்ட் ரைட்டுக்கு அப்ளை பண்ணு…”—என்றார் ஷெட்டி.. .
.” நம்ம பாஸ் ஐ கிண்டல் சொன்னியே பார்த்தியா மேன்!.”– என்று மஹிமா என் தோளில் இடித்தாள். .நிஜத்தில் எனக்கே வெட்கமாக இருந்தது.எவ்வளவு நக்கல் பேச்சு பேசியிருப்பேன்.ரியலி ஹீ ஈஸ் எ ஜீனியஸ்.. அதை தெரிஞ்சிக்கிற அறிவுதான் எனக்கில்லை..”
“ அடுத்ததாக செட்டியாரிடம் அவர் உடல் நலன் பற்றி, எதுவும் தொந்தரவு உண்டா? என்பது பற்றி, பசியின் தன்மை, காய்ச்சல் வருவது பற்றியெல்லாம் குடைந்தெடுத்து விட்டார்கள். பூரண திருப்தி..உண்மையில் டாக்டர்.இளமாறனுடைய வெற்றியில் இந்தியா பெருமிதம் கொள்ளப் போகிறது. வியாதிகளில் எமன் என்கிற புற்றுக்கு எங்க டாக்டர் சமாதி கட்டிட்டார். எல்லோருக்கும் பெருமையாய் இருந்தது. கிளம்பும் நேரம் செட்டியார் கவலையுடன் இளமாறனிடம் முறையிட்டார்
“டாக்டர்! உடம்பு சொஸ்தமாயிடுச்சின்னு தெம்பாயிருந்தேன், இப்ப என் இடுப்பில புதுசா ஒரு கட்டி எழும்பியிருக்கு. டாக்டர்.”
“ என்னய்யா உளற்ற.?இம்பாஸிபிள். எங்க காட்டு.”—எல்லோரும் கிட்டே சென்றோம். செட்டியார் வேஷ்டியை தளர்த்திக் கொண்டு கவிழ்ந்து படுத்தார். இளமாறன் துணியை விலக்க,..! பின்புறம் பிருஷ்டத்தில் ஒரு அரைசாண் நீளத்தில் ஒரு தசை துண்டு புடைத்துக் கொண்டு எழும்பியிருந்தது.
“ இதென்னய்யா அரைசாண் நீட்டுக்கு பின்னால?.கேன்சர் வளர்ச்சியா இது?.
“ அப்படித்தான் தெரியுது.. பையாப்ஸி எடுத்து பார்த்திடுவோம்…”—இது டாக்டர் ஷெட்டி
”சார்!…அது வால் மாதிரி இருக்கலாமோ?… சார்1..சார்!..செட்டியார் அதை ஆட்றார் பாருங்க..”—கத்தினேன்.
“இல்லை..இல்லை..அதுவாக ஆடுது, நான் ஆட்டல.”—என்றார் செட்டியார் பயத்துடன்.
”எழும்பியிருக்கிறது வால்மாதிரிதான் தெரியுது.. .”—என்றார்..டாக்டர் ஷெட்டி எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ ஐயய்யோ! வாலா…?”— கத்திவிட்டு செட்டியார் மயக்கமாகிவிட்டார்.
” டாக்டர் இளமாறன்! ஒரு தப்பு பண்ணிட்டீங்க குரங்கிலிருந்து மனிதன் பிறந்த அந்த பரிணாம வளர்ச்சியை தூண்டுகிற ஜீனும் இதே FAS—ஜீன்தான் என்பதை யோசிக்கத் தவறிட்டீங்க… ஸோ FAS- ஜீன் துண்டிக்கப் பட்டவுடனே பரிணாமம் பின்னோக்கிப் பாய்ந்து, உடல்கூற்றில் குரங்கின் சில அம்சங்களை மட்டும் இப்ப கொண்டுவந்து விட்டது போல. முக்கியமா வாலு… பின் விளைவுகளை ஆராயணும்னு அடிச்சிகிட்டேனே கேட்டியா?..இப்ப இவரை ஓ! சாரி..சாரி..இதை எந்த காட்டில கொண்டு போய் விட்றதுன்னு தெரியலியே..”
”அது இருக்கட்டும்,இம்மாம் பெரிய சைஸ் குரங்கைக் கொண்டு போய் காட்ல விட்டா, மத்த குரங்குங்க கதி என்னாகும்?. பார்த்துட்டு பயத்தில ஒவ்வொண்ணும் ஒண்ணுக்குப் போயிடும
”மஹி! செட்டியார் வெளியே தலை காட்டினால் என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சிப் பாரேன்.”
“என்னாகும் மேன்?.”
“கட்டுமஸ்தான உடம்பு, ப்ளஸ் ,நீளமான வாலு,.புரியல?.ஜனங்க பக்தி சிரத்தையா கன்னத்தில போட்டுக்கிட்டு, ரெண்டு கையையும் மேலே தூக்கிடமாட்டாங்க.ஜெய்! வீர ஆஞ்சினேயா! ஜய..ஜய ஹனுமான்!..ஜயராம ஹனுமான். ஜய..ஜய ஹனுமான்…ஜயராம ஹனுமான்!—-டிக்கெட் போட்டா கலெக்ஷன் அள்ளிடலாம்..பப்ளிசிட்டிக்கு கவலையே படாதே இந்து முன்னணி இயக்கங்கள்லாம். வாலாண்டியரா வந்து செட்டியாரை ராம தூதனாக்கி அருமையா இந்தியா பூரா பரப்பிடுவாங்க. சென்சேஷனல் நியூஸ். ஜனக்கூட்டம் வந்து புரளும்,அஃப்கோர்ஸ் பணமும்தான்..இத வெச்சி செண்டர்ல ஆட்சியே மாறிப் போறதுக்குக் கூட சான்ஸ் இருக்கு. .”
“ தோன்றி இன்றைக்கு பத்து லட்சம் வருஷங்கள் பாரம்பரியத்தைக் கொண்டது.இந்த மனித இனம்… FAS ஜீன் எப்படி இரண்டே வருஷத்தில பரிணாம வளர்ச்சியை பேக் அடிச்சி வாலு முளைக்கிற ஸ்டேஜுக்கு கொண்டு போயிடுச்சோ தெரியலியே. எங்கியோ தப்பு நடந்து போச்சிய்யா“—- புலம்புவது டாக்டர் இளமாரன்.
***************************************************************************************
- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை
- வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
- சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
- சங்க கால சோழநாட்டு ஊர்கள்
- முள்வெளி- அத்தியாயம் -1
- என் சுவாசத்தில் என்னை வரைந்து
- ‘பெற்ற’ மனங்கள்…..
- பழமொழிகளில் அளவுகள்
- ஜீன்கள்
- நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை
- இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ
- தில்லையில் கள்ள உள்ளம்…
- சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
- வெறும் தோற்ற மயக்கங்களோ?
- பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
- குளவி கொட்டிய புழு
- அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
- காரைக்குடியில் கம்பன் விழா
- சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16
- ஆணவம்
- தேவனும் சாத்தானும்
- சொல்லாமல் போனது
- காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
- கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…
- உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
- ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘
- ரஸ்கோல்நிக்கோவ்
- இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்
- பேனா பேசிடும்…
- என்னவென்று அழைப்பது ?
- ”கீரை வாங்கலியோ…கீராய்…!”
- கலாசாரத் தொட்டில்
- “ஊசியிலைக்காடுகள்”
- முன்னணியின் பின்னணிகள் – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5