தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

அம்மாவின் நடிகைத் தோழி

எம்.ரிஷான் ஷெரீப்

மூலம்இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

அம்மா சொல்வாள்

அந் நடிகையின் நடிப்பைப்

பார்க்க நேரும் போதெல்லாம்

 

‘பள்ளிக்கூடக் காலத்தில்

உயிர்த் தோழிகள் நாம்

அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்

ஒரே பலகை வாங்கில்

அந் நாட்களிலென்றால் அவள்

இந்தளவு அழகில்லை’

 

பிறகு அம்மா

பார்ப்பது தனது கைகளை

உடைந்த நகங்களை

காய்கறிகள் நறுக்குகையில்

வெட்டுப்பட்ட பெருவிரலை

 

அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்

எனது முகத்தை, தம்பியின் முகத்தை

கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்

அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

 


 

Series Navigationஓரு பார்வையில்விசையின் பரவல்

Leave a Comment

Archives