அ. ஜெயபால் தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த நூல்களை தமிழுலகிற்கு கொடுத்திருக்கின்ற வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006 ல் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) என்ற ஓர் ஆழமான நூலை தந்திருப்பதன் மூலம் தன்னுடைய இருப்பை வெளிபடுத்தியிருக்கிறது. இந்நூல் நாட்டார் வழக்காற்றியலின் சிரத்தையான ஆய்வாளர் ஆ. தனஞ்செயன் அவர்களின் பனிரெண்டு கட்டுரை தொகுப்புகள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற ‘Folklore’ […]