உண்மையே உன் நிறம் என்ன?

பொதுவாக வெகு ஜன ஊடகத்தில் இயங்குபவர்களும் சரி, சாதாரணர்களும் சரி வாழும் முறையை இரு கூறுகளாக பிரித்துக்கொள்கிறார்கள். தனக்கு என்று வரும்போது ஒரு நிலையையும், சமூகம்/பொதுநிலை என்று வரும்போது ஒரு நிலையையும் எடுக்கிறார்கள். அதாவது யதார்த்தத்தை அணுகும்போது ஒரு வழிமுறையையும், அது…
வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்

வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்

மேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity…

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார். ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக…

பின்னூட்டம் – ஒரு பார்வை

திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு…

அப்பாவின் சட்டை

ஒரு மழை நாளின் மதிய வேளையில் தொலைந்து போன பொருளை பரணில் தேடிய போது கிடைத்து தொலைத்தது தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன அப்பாவின் கிழிந்து போன சட்டை   அ.லெட்சுமணன்

புத்தகம் பேசுது

சமீபத்தில் சென்னையில் உள்ள இந்திய அளவில் பிரபலமான சங்கிலி தொடர் கொண்ட (Chain of Book Stores) ஒரு புத்தக கடைக்கு செல்ல நேர்ந்தது. குளிரூட்டப்பட்டு மிக நேர்த்தியாக புத்தகங்கள் தலைப்பு வாரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையை சுற்றி சுற்றி வந்தேன்.…

இயலாமை

தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின் பின்னிரவு பொழுதில் மூன்றாம் வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம் ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால் யாருக்கோ மோசமான உடல்நிலை திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர ஜன்னலை சாத்தி போர்வையை இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம் ரெண்டு…

குடை ரிப்பேரும் அரசியல் கைதும்

சமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலையாக வெளியே செல்வதற்கு வர நேர்ந்தது. ஒரு குடை ரிப்பேர் செய்பவர் குடைகளை சரி செய்து கொண்டிருந்தார். சரி. மழை காலம் வந்து விட்டது, வீட்டிலிருந்த பழுது பட்ட குடைகளை எடுத்து வந்து சரி செய்து…

நிதர்சனம்

என்ன தான் தங்க கோவில் என்றாலும் இடிதாங்கி என்னவோ அலுமினியத்திலும் தாமிரத்திலும் தான் இருக்கிறது. அ.லெட்சுமணன்

தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்

சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை.…