ஆப்பிள் பெருநகர். பெரிய ஆப்பிள் என்று அழைக்கப் படும் நியு யார்க். ஒரிஜினல் தூங்கா நகரம். காலை இரவு என்று வேறுபாடில்லாமல் விளக்குகள் ஒளிர, மக்கள் நகரும் நகரம். சப்வே என்று அழைக்கப் படும் பாதாள ரெயில்கள். பாதாள என்பது வெறும் பெயரளவில் தான். தனக்கென்றே அமைந்த பாலங்களில் மேற்பரப்பிலும் நகரும் மின்வண்டிகள். இது ஒரு தனி உலகம். இரண்டே கால் டாலரில் நியு யார்க் நகரமெங்கும் சென்று வரலாம். பெருநகரங்களின் வெளியே இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் கார் […]