தாலாட்டு நானும் பட தனிப்பாட்டு தேவையில்லை பாராட்டும் கடலை பார்த்து படகோட்டும் பகலவனாலே ஒளிபார்த்து உள்ளம் மகிழ ஒலிக்காதோ உயிரின் ஓசை ? கேட்காத காதும் இல்லை கிடைக்காத கவிதை சொல்ல பார்க்காத கனவில் ஒன்றை பசிக்காக நீ அழுதிருந்தாலும் பாலூட்ட நிலவு வருமே பகுத்தறிவால் புசித்திருப்பாயோ ? இதயத்தில் மலரினை பூக்க இறையிடம்தான் அடத்தினால் கேட்க கைகாலை நீ உதைத்து அழுதால் காரணம்தான் நான் கேட்க மாட்டேன் எனக்காக நீதான் அழுது இதற்காக அழுவேன் சொன்னால் […]
என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ மலையே ………. கல்குவாரியாக சிதறிவிடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ நதியே ……….. அணைபோட்ட நாணத்தை உடைத்து என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ காற்றே ………. மூச்சிலிருந்து பிரிந்து விடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ ஆகயாமே …………… எப்போது கரும்புகை கலைத்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ பறவைகளே ………… இரைகள் தொலைந்ததை மறந்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ மலர்களே ……… ஓ எப்போது சிரித்து கொண்டுதான் இருக்கின்றீர்களோ […]
விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் கால்களிலிருந்து என் கண்களுக்கு அ. இராஜ்திலக்
கரைகிறேன் தண்ணீரில் அழுவதை போன்றுதான் தனிமையில் நான் அழுவது என்னைத்தவிர எவருக்கும் தெரியபோவதில்லை தண்ணீரில் கண்ணீர் தன் சுவையிழப்பதை போன்று தனிமையில் நானும் சுயம் இழந்துவிட தனிமையும் கண்களும் தாமரையை இரசிக்க பழகட்டும் . அ.இராஜ்திலக்