Articles Posted by the Author:

 • தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்

  தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்

   (குட்டி திருவிழா) 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது பெறுபவர்: லீனா மணிமேகலை. நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோவின் 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதையொட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 5 (05-08-2013, திங்கள்) ஆம் தேதியிலிருந்து 11 (11-08-2013, ஞாயிறு) ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் வெவ்வேறு ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடல் நடைபெறவிருக்கிறது.  05-08-2013, திங்கள் – “பீ” ஆவணப்படம் – R.P. அமுதன் (இதனுடன் ஒரு குறும்படம்) 06-08-2013, செவ்வாய் – ஒருத்தி […]


 • லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை

  லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை.இடம்: தி புக் பைன்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை (தினமலர் அலுவலகம் அருகில்) நேரம்: மிக சரியாக மாலை 5 மணிக்கு. (5 PM Sharply)நண்பர்களே எதிர்வரும் வியாழக்கிழமை (சுதந்திர தினத்தன்று) சென்னையில் லெனின் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. உங்கள் அனைவரையும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள்.  ————————————————————— தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது – 2013 […]


 • உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு

  உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு

    உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு ஆக்ஸ்ட் 3ஆம் நாள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் மூத்தவர்கள், பெய்ஜிங்கிலுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள், இந்தியச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், சீனாவுக்கான இந்தியா மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களின் அலுவலர்கள், நேயர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதில் கலந்து கொண்டனர். நேயர்களின் ஈடுபாடு, பல்வேறு சர்வதேசச் செய்தி ஊடகங்களில் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி, சீன வானொலி தமிழ்ச் சேவையின் […]


 • குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது

  குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது

  நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்று நூலுக்கான டி.வி.ராமசுப்பையர் இலக்கிய விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணனுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான முரசொலிமாறன் இலக்கிய விருது ந.கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது என்று கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவையின் மேலாண் இயக்குநர் கவிஞர் தியாகி தெ.வெ.பகவதிப் பெருமாள் தெரிவித்துள்ளார்.


 • வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :

    வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர […]


 • தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.

  தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.

  நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது […] • தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.

  தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.

    நாள்: 22-07-2013,திங்கள் (பௌர்ணமி)நேரம்: இரவு 9 மணிக்கு. இடம்: The Spaces, Besant Nagar Beach (தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அருகே) திரையிடப்படும் படம்: உதிரிப்பூக்கள். நண்பர்களே நீண்ட காலமாக தடைபட்டிருந்த தமிழ் ஸ்டுடியோவின் பௌர்ணமி இரவு திரையிடல் நிகழ்ச்சி இடம் இல்லாத காரணத்தால் சில இடையில் தடைபட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடங்குகிறோம். திரையிடலில் நிலாச்சோறும் வழங்கப்படும். நிலாச்சோற்றோடு தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான மகேந்திரனின் “உதிரிப்பூக்களை” பார்த்து மகிழுங்கள். திரையிடல் முடிந்ததும், இரவு […] • ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்

  ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்

  அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இத்துடன் ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம் பற்றிய ஓர் அறிவிப்பை இணைத்துள்ளேன்.தயவு செய்து இதைத் தங்கள் இணைய இதழில் ‘அறிவிப்புகள்’ பகுதியில் வெளியிட்டு எங்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ‘தளம்’இதழ் சார்பாகவும், ஆசிரியர் பாரவி சார்பாகவும், தங்கள், எஸ்.எம்.ஏ.ராம்.    ‘தளம்’-மின் பதிப்புத் துவக்கம் பற்றிய அறிவிப்பு ‘தளம்’-கலை இலக்கியக் காலாண்டிதழ் சென்ற ஜனவரி,2013- இலிருந்து வெளிவருவது குறித்து வாசக நண்பர்கள் அறிந்திருப்பார்கள். முதல் இதழ் சி.சு.செல்லப்பா  நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாகவும், இரண்டாம் இதழ் […]