ஏ. ஆர். கமாலுதீன்,சென்னை காலச்சுவடு அக்டோபர் இதழில் கடிதம் பகுதியில் வந்துள்ள செந்தியின் கடிதம் பற்றிச் சில உண்மைகளை தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. செப்டம்பர் இதழில் வெளியான ‘அவர்களுடைய விருப்பங்களே எமக்குச் சட்டங்கள்’ ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ ஆகிய இரு கட்டுரைகளையும் இணைத்துப் பார்ப்பது அறியாமையின் உச்சகட்டம். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவன் அருளித்தந்த வேதமான குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்லலாஹி அலைவஸல்லம்) அவர்களின் வாழ்க்கையுமே சட்ட மூலாதாரங்கள். இதற்கு முரண்படும் எல்லாமே […]