அருண் ஜெயிட்லி எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை “மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறைத் தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுக்கான அணுகல்) மசோதா 2011” பொதுத் தளத்தில் இடப்பட்டுள்ளது. இந்த மசோதா மத சம்பந்தமான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும், அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனை அளிப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சட்டமாக்கப்படவுள்ள மசோதாவின் நோக்கம் அவ்வாறு சொல்லப்பட்டாலும், அதன் உண்மையான நோக்கம் அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. இந்த மசோதாவானது சட்டமாக்கப்பட்டால், அரசின் அதிகாரவரம்பில் தலையிடுவதாகவும், ஒன்றிணைந்த அரசியல் சமுதாயத்தைத் […]