வெறுக்கப்பட்ட அத்தியாயங்களின் வழியே ஊடுருவும் ஒரு வெறுப்பு இன்றைய பொழுதினை நிலைகொள்ளாமல் செய்யும் வலிமை கொண்டது. மேலெழும் உவர்ப்பின் சுவையை ருசிபார்க்க ஆவல் கொள்கிறது கண்கள்,காரணம் அறிந்த மனமும் அதி தீவிரமாய் எதையெதையோ, மற்றவர்கள் சுடும் சொற்களுக்கு இடையே அமைதியாய் நகர்கிறது நாட்கள் ,இடையேனும் நற்செய்தி கிடைக்குமா என்று செவிப்பறைகள் தங்களின் கூர்மையை சோதித்து கொள்கின்றன. எதிர்பார்ப்பின் தீவிரம் தன் இருப்பை ஒரு பொழுதேனும் மாற்ற முயற்சிக்கிறது , விடைகள் அனைத்தும் ஏமாற்றம் எனும் முடிவை மட்டுமே […]
தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும் நதியை போலவே அது ,என்றொருநாள் அது நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின் ஓசைகளும் கேட்பாரற்றே கிடக்கின்றன ஊடுருவும் ஒலிகளுக்காக ஏங்குகின்றன செவிப்பறைகள் தினம், தினமும் . பிறப்பின் கண் பிரிக்கப்படும் சாதிகளும் கள்ளிப்பால் கொலைகளும் அணு தினமும் நிகழ்கிறது எங்கோ ஓரிடத்தில் நாமறிந்து நம்மை அறிந்து சில […]
தினம் தினம் தேடப்படும் நினைவுகளின் வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள் அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன. கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில் தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை போலவே இருக்கின்றன கனவா எனும் சொல்லை கூட யோசிக்க நேரமில்லாமல் அவளை பார்கிறேன் மெய்மறப்பது என்பது இதுதானோ., அவள் அருகில் இருப்பதாக பெறப்படும் கற்பனையே அன்றி இது வேறு என்னவாக இருக்ககூடும். இருப்பினும் பார்வைகள் அடிக்கடி அவளை நோக்கியே செல்லும் இது விசித்திரமான நோயாக இருக்க கூடாதென்பதற்காகவே […]