சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் சமீபத்தில் ”ஸ்டாலின் பழமொழிகள்” என்று வகை வகையாய் எழுதப்பட்டு கிண்டலடிக்கப்படுவதை பார்த்திருக்கலாம். அறிமுகமில்லாதவர்களுக்கு ஒரு அறிமுகம் சமீபத்தில் ஸ்டாலின் தமிழ் பழமொழிகளை முன்னுக்கு பின் திருப்பி போட்டு பேசி கலகலப்பை ஏற்படுத்திவருகிறார். இவர் முன்னாலும் அப்படியே பேசியிருந்திருந்தாலும் அது இப்போதுதான் சமூக வலைத்தளங்கள் காரணமாக வெளியே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். ஸ்டாலின் முன்பும் இப்படித்தான் பேசி வந்திருக்கிறார் என்று ஆதாரம் காட்டும்வரைக்கும், இது தற்போதைய ஸ்டாலின் பேச்சில் வந்திருக்கிறது என்று வைத்துகொள்வோம். சமீபத்தில் […]
அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த சில வருடங்களில் ஆகியிருக்கிறது. இலுமினாட்டி என்று தமிழில் எழுதி கூகுளில் தேடினார் 32800 பதிவுகள் இருக்கின்றன என்று சொல்லுகிறது. இந்த இலுமினாட்டி என்பது அமெரிக்க புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பரப்பிய கட்டுக்கதை. முக்கியமாக உலகமயமாக்கப்படும் அமெரிக்க […]
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் செய்து காட்டியிருக்கிறார். தமிழக மக்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது காந்திஜியே தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றாலும் காசு கொடுக்காமல் ஜெயிக்கமுடியாது என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், (தவறாகவும் இருக்கலாம்) டிடிவி தினகரன் சுமார் 10000 ரூபாய் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதிமுக 6000 […]
சின்னக்கருப்பன் பிராந்திய வாதிகளின் அரசியல் பெரும்பாலும் போலி இனவாதத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அரசோச்சிக்கொண்டிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு போலி இனவாதம் நமக்கு எல்லாம் பழக்கப்பட்ட ஒன்று. இதன் உப விளைவாக கர்னாடகத்தில் வாட்டாள் நாகராஜின் கன்னட போலி இனவாதம் மொழிவாதமும் நாம் அறிந்ததே. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், கன்னடர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருந்த தமிழர்கள் எதிர்ப்பு போலி இனவாதத்தை அங்கிருக்கும் பெரும் கட்சிகள் கூட கண்டிக்காமல் இருந்ததுதான். மகாராஷ்டிரத்தில், பாஜகவால் ஓரம் […]
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள். அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட கட்சியின் இரண்டு பக்கங்களை மாறி மாறி தங்களை சுட அனுமதித்துகொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் வெறியர்கள் போல தேர்தல் செய்திகள் வெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வரும் கிரிக்கட் கோலாகலம் எனலாம். இந்த முறை […]
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஜெயித்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து பாஜக எதிர்ப்பு வாக்குக்களையும், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வாக்குக்களையும் இணைத்து அசுர வாக்கு பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறது. 32 சதவீத வாக்குக்களை பாஜக தக்கவைத்துகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 20 சதவீத வாக்குக்களை காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்திருக்கிறது. இதனால், 55 சதவீத வாக்குக்களை ஆம் ஆத்மி கட்சி பெற்றிருக்கிறது. இந்திய நடுத்தர வர்க்கத்தின் அரசியல்சாரா நிலைப்பாடுகள், கொள்கையில்லா நிலைப்பாடுகளின் இன்றைய அரசியல் உருவாக்கமே ஆம் […]
மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம், இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது. அங்கோர் வாட் என்னும் நகரமே மரம் செடி கொடிகளுக்கு இடையே காணாமல் போயிருந்தது. அந்த பிரதேசங்களில்தான் போல்போட் என்னும் […]
ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன். எதை விற்க வேண்டுமென்றாலும் குழந்தைகளை உபயோகப்படுத்தலாம் என்பது நவீன விளம்பர யுக்தி. குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், உடனே இரங்குவது மனித இயல்புதானே? அதனை வைத்து கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு பணம் வசூலிப்பதிலிருந்து, ஹமாஸுக்கு ஆதரவு திரட்டுவது வரை எல்லாமே நடக்கும். ஆகவே கட்டுரையும் இப்படி ஆரம்பிக்கிறது. // “இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்” […]
”பாலஸ்தீனத்தை கைவிடலாமா?” என்ற தி இந்து தலையங்கம் இவ்வாறு கூறுகிறது. ”பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. ” ஆங்கில தி இந்து வில் வெளியான தலையங்கம் இவ்வாறு கூறுகிறது However deplorable some of Hamas’ warfare techniques may be, there is a counter-view […]
தலைநகரில் நடந்த அவலம் இந்திய மக்களின் உள்ளங்களை உலுக்கியிருக்கிறது. அதுவும், இளைஞர்களையும் இளைஞிகளையும் அச்சத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றிருக்கிறது. அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், காங்கிரஸ் கட்சி தலைமை தவித்திருக்கிறது. இங்கே ஏராளமான தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக, இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்க கோரும் குரல்கள் உரத்து எழுகின்றன. தண்டனையை கடுமையாக்குவது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி வழக்கை முடித்து தீர்ப்பு தருவது ஆகியவை ஓரளவுக்கு பயன் தரும் என்றாலும் அது தும்பை […]