பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன்,வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் சென்ற ஆடுஜீவிதத்தமிழன் என எல்லோருக்குள்ளும் ஒரு ஒட்டுப்பொறுக்கி உண்டு. இப்போதும் கூட அமேரிக்காக்காரனுக்கு ராத்திரி இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தொண்டூழியம் பார்க்கிறவனும் ஒட்டுப்பொறுக்கி தான். எப்போதும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் அவனது ஆருடத்தில் நாடு கடத்தப்படும் யோகம் உண்டு என்பதே ஒரு சோகம். முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைசாமி அதைப் பெருமையாகச்(?)சொல்லுவார். […]
“படத்தில் வரும் காட்சிகள் இதுவரை நடந்தவை பற்றியோ , அவை சம்பந்தமான நிகழ்ச்சிகள்/நபர்கள் பற்றியதோ அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே” என்று ஆரம்ப எழுத்துகள் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இந்தப்படத்தின் முதல் எச்சரிக்கை அதிர்வையே தருகிறது. ஆக்ஷன் ஃபிலிம் எடுக்கிறதுன்னா இனிமேல் இதுக்குமேலே எடுத்தாதான் உண்டு. அருமையான நடிக/கையர் தேர்வு,அதற்கான களமும், அவர்களின் மொழியும் எல்லாமுமாகச்சேர்ந்து ஒரு விஷுவல் ட்ரீட் தமிழனுக்கு..எங்க ஊர்க்காரன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்துருக்கான்யா .என்று மெச்சிக்கொள்ள ஒரு படம். படத்தை மெதுவாகத்தள்ளிக்கொண்டும் , […]
பெங்களூர் கப்பன் பார்க் ப்ரஸ்கிளப்பில்’ தவிட்டுக்குருவி என்று விளம்பரத்துல போட்ருந்தது, சரி , எதோ புத்தக வெளியீடாச்சே அதனால ப்ரஸ்கிளப்பில வெச்சிருக்காங்க போலருக்குன்னு நினைத்துக்கொண்டு போனேன். கப்பன் பார்க்ல இறங்கினதும் திருஜிய கூப்பிட்டு , பாஸ் எங்க கூட்டம்னு கேட்டேன். நீங்க எந்த ஸ்டேச்சூ கிட்ட நிக்கிறீங்கன்னார், அப்டியே விக்டோரியா ஸ்டேச்சூகிட்ட வந்துருங்கன்னார். சரி இப்ப ,எப்பவும் போல சுத்தத்தான் போகுதுன்னு நினைத்துக் கொண்டு ,நடையா நடந்தேன். பெங்களூர்ல இப்ப கொஞ்சம் வெய்யில் அடிக்க ஆரம்பிச்சுருக்கு, அதனால […]
மேற்கத்திய ரசிகர்களின் இசைவுக்கேற்ப இசைத்து அவர்களிடம் தொடர்ந்தும் பெயரெடுக்க வேண்டிய சுயகட்டாயத்தில் சிக்கிக்கிடக்கும் நமது ரஹ்மானின் புதிய ஆல்பம் “கடல்“ அதே பாணியை நாமும் ரசித்துக்கொண்டிருக்கிறோம், என்று நினைத்துக்கொண்டு ரஹ்மானும் மணியும் கொடுத்திருக்கும் ஆல்பம் “கடல்”. இதில் எந்தத்துளி நம் மனதைக்கவர்கிறது ? எது நம் கைநழுவிச்செல்கிறது ?. பாடல்களைப்பற்றி பேசுமுன்னர் கொஞ்சம் இந்தக்கால இசைப்பாணிகளும் ரஹ்மானும் என்று கொஞ்சம் பேசி விட்டு பின்னர் செல்லலாம் என்று நினைக்கிறேன். Honest Opinion சொல்லணும்னா என்னைப்பொருத்தவரை ‘கடல்’ மிகப்பெரிய […]
யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, ‘ஆதிபகவன்’ என்று இடையே சில ஆல்பங்கள் யுவனிடமிருந்து வந்திருந்த போதும் அவற்றில் சில பாடல்களைத்தவிர மற்ற எவையும் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படி இந்த ஆல்பத்தில் எந்தப்பாட்டை விடுவது எதை ரசிப்பது என்று திக்குமுக்காடச்செய்திருக்கிறார் யுவன்.! ஆஹா காதல் கொஞ்சிக்கொஞ்சிப்பேசுதே வசீகரிக்கும் ஒரு குரலுடன் நந்தினி ஸ்ரீரிக்கர் (‘ஆப்பிரிக்கா காட்டுப்புலி’ […]
“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன் அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம் Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளோ பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளோ இல்லை..என்ன இது விஜய் படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்று எனக்கே ஆச்சரியம். முருகதாஸுக்குத்தான் நன்றி சொல்லணும். ‘கில்லி’க்குப்பிறகு , சொல்லிக்கொள்ளுமாறு வெற்றி பெற்றது ‘போக்கிரி’ தவிர வேறு எந்தப்படமும் […]
ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப்பின்னாலருந்த பால்கனிலருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி விழுந்துருக்கும்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன் எழுந்து பாக்காம. காலைல எழுந்து பாத்தா ஒரு பெரிய பூனை கொஞ்சம் வயிறு உப்பலா , கதவத்திறந்த என்னையே கொஞ்சம் பாவமா பாத்துது.சரி ஏதோ மழைக்கி ஒதுங்கிருக்கும் இருந்துட்டுப்போகட்டும்னு […]
Beautiful Comeback for Sasikumar!,தொடர்ந்து ரசித்து வந்த என்னை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டேயிருந்தார் நாடோடி’களுக்கப்புறம்.இப்போது திரும்பவும் நம்மை அவர் பக்கம் திருப்பியிருக்கிறார் சசி..! என்ன கொஞ்சம் சுப்ரமணியபுரம்/நாடோடிகள் சாயல் இருந்தாலும் அழகான காதல் கதை..! சுந்தரபாண்டி “பஸ்”பாண்டியாவே போய்ருமோ முதல் பாதி முழுக்க பஸ் பஸ் ..பஸ் மச்சி :-) # அழகுப்பாண்டி..! Friends களுக்காக எல்லாத்தையும் விட்டுக்குடுக்குறார்ப்பா நம்ம சசிகுமார். பகைவனுக்கும் அருள்கிறார் நம்ம சசி. கொஞ்சமா தலைய மட்டும் சாய்ச்சிக்கிட்டு தாடிய லேசா நீவிவிட்டுக்கொண்டு […]
இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து தாமும் […]
MS விஸ்வாநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-ல Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப்பார்த்து விட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து தலயக்காட்டிட்டு போறார் சில படங்கள்ல :-) […]