இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com திருக்குறள் உலகப் பொதுமறை எனத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகமாகத் திகழ்கின்றது. திருக்குறளை சட்ட இலக்கியம் என்று கூறலாம். மனிதன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பது இலக்கியத்தின் நோக்கம். மனிதனுக்கு வழிகாட்ட எத்தனையோ இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது “திருக்குறளே” ஆகும். திருக்குறள் மனித உரிமைகளைக் கூறும் மனித உரிமைப் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com தமிழில் தோன்றிய காப்பியர்களில் குறிப்பிடத்தக்க காப்பியம் சூளாமணியாகும், சிலம்பு, மேகலை, சிந்தாமணி என்பதைத் தொடர்ந்து இக்காப்பியமும் பெண்களின் தலையில் அணிந்து கொள்ளும் அணிகலனின் பெயரில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது. சமண சமயக் கருத்துக்களைக் கூறும் இக்காப்பியம் சுவைபட அமைந்து கற்பாற்கு இன்பமளிக்கின்றது. சூளாமணி -பெயர்க்காரணம் சூளாமணிக் காப்பியம் தோலாமொழித் தேவர் இயற்றியதாகும். இதன் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகும் (கி.பி. 925-950). காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இவ்யோகக் கலையாகும். விலங்கு போன்று வாழ்ந்த மனிதன் ஒவ்வொரு படிநிலையினையும் கடந்து இன்றுள்ள பண்பட்ட நிலைக்கு உயர்ந்துள்ளான். தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயருவதற்கு இவ்யோகநெிறயைக் கண்டறிந்து அதனைக் கைக்கொண்டான். இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோகநெறிகள் பலவாகும். […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நிகழும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. மனித மனம் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. அம்மனம் துன்பத்தைச் சந்திக்கும்போது துவண்டு போகின்றது. மனிதன் துன்பத்தில் உழலுகின்றபோது தன்னை இழந்துவிடுகின்றான். துன்ப முடிவினைக் கொண்டு முடியும் உலக இலக்கியங்கள் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகச்சிறந்த அவலக் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இக்காப்பியத்தில் அமைந்திருக்கும் அவலம்போன்று வேறு […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com காப்பிய நூல்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் என்னும் காப்பியமேயாகும். சிலம்புக் காப்பியம் தமிழகத்தின் மூவேந்தர்களாகிய சேரர், சோழர், பாண்டியர் என்பார் மூவர்க்கும் உரியதாகும். காப்பியத் தலைவியாகிய கண்ணகி சோழநாட்டில் பிறந்தாள். பாண்டிய நாட்டில் தன் கற்பின் பெருமையை நிறுவினாள். சேரநாடு சென்று வானகம் அடைந்தாள். இதனால்தான் காப்பிய ஆசிரியர் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்த மூன்று நாடுகளின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார். இதனை சீத்தலைச் சாத்தனார், ‘‘முடிகெழு […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதனை, “இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை நம்புவதுதான் சமயம் ஆகும்” என்கிறது வாழ்வியற் களஞ்சியம். அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது. இங்ஙனம் மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. அனைத்துத் தொழில்களும் உழவை மையமிட்டே அமைந்திருந்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புக்குரியவர்களாக வாழ்ந்தனர். இவ்வுழவுத் தொழல் குறித்தும் உழவர்கள் குறித்தும் பல்வேறு பதிவுகள் செவ்விலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இப்பதிவுகள் அவ்வுழவர் பெருமக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் அறவாழ்வையும் காட்சிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. உழவர்கள் நிலை மனிதன் விலங்குகளை […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வியலைக் கூறும் இலக்கியங்களாக மட்டுமல்லாது அறநெறி புகட்டும் அறவிலக்கியங்களாகவும் திகழ்கின்றன. அதனால்தான் அவை இன்றும் வாழுகின்ற இலக்கியங்களாக மிளிர்கின்றன. இச்சங்க இலக்கியங்களுள் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று கலித்தொகை அனைவராலும் போற்றப்படுகின்றது. இக்கலித்தொகை அக இலக்கியமாக இருந்தாலும் இதில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் அறங்கள் புலவர்களால் மொழியப்பட்டுள்ளன. மனித வாழ்வில் முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்களைப் […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தொடக்ககால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவினை மட்டுமல்லாது தானே உணவினை உற்பத்தி செய்யும் முறையினையும் மேற்கொண்டான். கால ஓட்டத்தில் தேவைக்கேற்ப பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்றனர். இவ்வாறு பழங்காலத்தில் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆணாதிக்கச் சமுதாயம் தன்பாலியல்வேட்கைப் போதாமையை நிறைவு செய்ய உருவாக்கிக்கொண்டதே பரத்தமை என்னும் ஒழுக்கமாகும். செவ்விலக்கியங்கள் இப்பரத்தையரையும் அவர்தம் செயற்பாடுகளையும் தெளிவுற விளக்குகின்றது. இப்பரத்தையர்கள் போகப் பொருளாகக் கருதப்பட்டனரேயன்றி அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாகச் சமுதாயத்தால் கருதப்படவில்லை. இதனைச் செவ்விலக்கியங்கள் தெளிவுறப் […]