முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மரணத்தை வென்ற மகா கவிஞர்கள் மரணம் மனிதன் பயப்படும் ஒரு சொல். மரணித்தல் மனிதன் விரும்பாத ஒன்று. மரணம் தங்களுக்கு வரக்கூடாது என்று தடுக்க நினைக்கும் மனிதர்களே இங்கு அதிகம். ஆனால் தங்களுக்கு நேரப்போகும் மரணத்தை எண்ணி எந்தவிதக் கவலையும் கொள்ளாதவர்களாக மகாகவியும் மக்கள் கவியும் விளங்கினர். மரணத்தை முகமலர்ச்சியுடன் ஏற்கத் துணிந்தவர்கள் இக்கவிஞர்கள். மகாகவி பாரதியார் மரணத்தை வெல்வதற்கு மக்களுக்கு வழி கூறுகிறார். அனைவரும் இறந்தாலும் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பிறவிகளில் உயர்ந்த பிறவி மனிதப் பிறவியாகும். புல்லாகிப் பூடாகி புழுவாகி, மரமாகி பல்மிருகமாகி, பேயாகி, கணங்களாகி மனிதராகப் பிறந்திருக்கும் பிறப்பே உயர்வானது. இம்மனிதப் பிறவியில் செய்யும் செயல்களைப் பொறுத்தே அடுத்த பிறவி என்பது அமைகிறது. நல்லது செய்கின்றபோது பிறவி முடிந்து இறைவனோடுமனிதன் இணைந்து விடுகின்றான். தீயது செய்கின்றபோது அவனது பிறவிப்பிணி முடியாது மீளவும் தொடர்கிறது. அதனால்தான் ஔவையார், ‘‘அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது’’ […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உணர்ச்சிகளில் மிகவும் நுட்பமானதும் குறிப்பிடத் தகுந்ததுமாகவும் விளங்குவது வெட்கம் என்ற உணர்ச்சியாகும். செய்யத் தகாத செயல்களைச் செய்ய நேரிடுகின்றபோதோ பிறர் செய்கின்ற போதோ அவ்வாறு செய்பவர்களைப் பார்த்து, ‘‘உனக்கு வெட்கமில்லை’’ என்றோ, ‘‘நான் இதுக்காக வெட்கப்படுகிறேன்’’ என்றோ கூறுகின்றனர். வெட்கம் என்றால் என்ன? பழிபாவங்களுக்கு நாணுதலே வெட்கமுறுதல் எனும் உணர்வாகும். ஆனால் பெண்களுக்கே உரிய வெட்கம் என்பது போன்றதே என்றாலும் இதிலிருந்து சற்று வேறுபட்டதாக அமைந்துள்ளது. தலைவனும் தலைவியும் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மண்ணின் மணம் பரப்பிய கவிஞர்கள் பாட்டு பாரதியின் கையிலும், பட்டுக்கோட்டையின் கையிலும் பண்பட்ட கருவியாக விளங்கியது. அக்கருவியை அவர்கள் கையாண்ட முறைமை இருவருக்கும் இலக்கியப் பெருமையை ஈட்டிக் கொடுத்தது. கவிஞர் இருவரின் கவிதைகளும் மெருகேறி நின்றமைக்குக் காரணம் அவர்களது பாடல்கள் நாட்டுப்புறத் தன்மையின் மீது வேர் கொண்டு நின்று மண் மணம் பரப்பியதே ஆகும். நாட்டுப்புற இலக்கியத்தின் சாயலையும் சார்பையும் தன்மயமாக்கிக் கொண்டு, […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களும் பறவைகளும் மனித வாழவியலில் வேரூன்றி, சமுதாயச் சூழலில் செல்வாக்குக் கொண்டு, பயனுடைய பாடல்கள் பலவற்றை மகா கவியும், மக்கள் கவியும் படைத்தார்கள். தனக்காக மட்டுமே எழுதிக் கொண்ட தன்மைக் கவிஞர்களாகாது, தம் கவிதைகள் அனைத்தையும் பிறருக்காகப் படைத்தவர்கள் இக்கவிஞர்கள். வோழும் உயிர் அனைததையும் தானாகக் கருதிய உயிரொருமைப்பாட்டு உணர்வினர் கவிஞர்கள் என்பர். இத்தகைய உணர்வால் பாரதியும் பட்டுக்கோட்டையும், மனித வாழ்வின் ஏற்றங்களைப் பற்றி சிந்தித்த […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள் இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் பல பெரியார்களின் பெயர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருபெருங் கவிஞர்களின் வாழ்வில் பங்கு கொண்ட அத்தகைய பெரியார்களின் வாழ்வு வாராற்றுச் சுவடுகளாக அமைந்து அவ்வக் கால வரலாற்றை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளன. மகாகவியின் வரலாற்றோடு பல பெரியார்களுடைய பெயர்கள் இணைந்துள்ளன. அவர்கள் பல துறைசார்ந்த பெருமக்களாவர். அவர்களுள் சிலர் பாரதியின் கவிதையாக்கத்திற்கு ஊக்கம் நல்கினர். சலர் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com புதுநெறி காட்டிய கவிஞர்கள் நல்ல சிந்தனையிலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்கும் சிறந்த குறிக்கோளை உடையவர்கள்தான் சிறந்த கவிஞராகத் திகழ முடியும். சிறந்த கவிஞன் தன்னுடைய உயிர்-மூச்சு-உழைப்பு-தொழில் எல்லாம் கவிதைதான் என்று எண்ணுவான். கருத்துக்கள் செறிந்த கற்பனை வானில் எவரும் எட்டிப்பிடிக்க முடியாத மிக உயர்ந்த நிலையில் சிறகடித்து வட்டமிட்டுத் திரிவான். அவன் பழைமைகளைப் பார்ப்பான். இருக்கின்ற உண்மைகளை உணர்வான். எதிர்காலததில் எழவேண்டிய புதுமைகளை உணர்த்துவான். செய்ய […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்கள் காண விரும்பிய பாரதம் மகா கவியும் மக்கள் கவியும் பாரதம் அனைத்துத் துறைகளிலும் உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினர். எவ்வாறெல்லாம் பாரதம் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தமது பாடல்களில் குறித்து வைத்தனர். பாரத நாட்டைப் பற்றி பல்வேறு கனவுகளைக் கொண்டிருந்ததற்கு இருகவிஞர்களின் பாடல்களே சான்றுகளாக அமைந்துள்ளன. பாரதி இந்தியாவைப் பற்றி பற்பல கனவுகள் கண்டு அவற்றையெல்லாம் பாடல்களாகப் பாடி […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com குழந்தைகளுக்குப் பாடிய குழந்தைக் கவிஞர்கள் குழந்தைகளே நாட்டின் எதிர்காலச் சிற்பிகள். அவர்களால் தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் நல்ல வலிமையான நாட்டை உருவாக்குவர். குழந்தைகளை வைத்தே ஒரு நாட்டின் தலையெழுத்து அமைகிறது. ஒரு சமுதாயத்தில் குழந்தைகளை மாற்றிவிட்டால் பின்பு அந்தச் சமுதாயக் கட்டுக்கோப்பே கலகலத்துவிடும். இதனை உணர்ந்துதான் மகாகவியும் மக்கள் கவியும் குழந்தைகளுக்காக எழுதினர். குழந்தைகளின் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்மையைப் போற்றிய கவிஞர்கள் பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. ஆனாலும் பெண்விடுதலைக்குக் குரல் கொடுத்த உன்னதக் கவிஞராகப் பாரதியார் விளங்குகிறார். தாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பாடல்கள் பாடினார். பெண்கள் அடிமைகள் அல்லர். அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவர்கள் மனிதரில் ஒரு கூறு. அவர்கள் உயர்ந்தால் தான் நாடு உயரும் என்று உணர்ந்து அதனைச் சமுதாயத்திற்கு உணர்த்தியவர் […]