தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அச்செயல் செம்மையாகச் செய்து முடிக்க முடியுமா? முடியாதா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள சகுனம் பார்த்தல் என்ற நம்பிக்கை இன்றளவும் பயன்பட்டு வருகின்றது. இது முற்காலத்தில் புறத்துறைகளுள் ஒன்றாக வைத்து எண்ணப்பட்டது. ஆநிரை கவரச் செல்பவர்கள் விரிச்சி கேட்டே தமது பயணத்தைத் தொடங்கினர். இச்செயலே பின்னர் சகுனமாக வளர்ச்சி பெற்றது. இச்சகுனம் நற்சகுனம், தீயசகுனம் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com செல்வம் மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும், ‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247) என்று செல்வத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வத்தைப் பெருக்கிப் பிறருக்கு உதவி செய்வோர் யானை மீது செல்வர் என்ற நம்பிக்கையும், ஆலமரங்கள் கெட்டாலும் அவற்றை விழுதுகள் தாங்கும்(495,497498) அதுபோல முதுமையில் உடல்வலிமை கெட்டாலும் இளமையில் அவர்கள் சேர்த்த […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன. வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்குமானால் ஓய்வின்றி மனிதன் உழைப்பான். ஒரு சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கைகள் அச்சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் வளர்ச்சி நிலையையும் அறிவதற்குப் பெரிதும் உதவி செய்யும். சிந்தாமணியில் பலவகையான […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com நாடகக்கலை பற்றிய குறிப்புகள் 17 இடங்களில் சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன.அக்காலத்தில் நாடக நெறி உணர்ந்த புலவர்கள் பலர் இருந்தனர்(672). நாடக நூல்களும் பல இருந்தன(673). நாடக நூல்களில் குறிப்பிடப்படும் நெறிப்படி பெண்கள் ஆடுவதற்கு வந்தனர். தாளத்திற்கு ஏற்பவும் தண்ணுமை, முழவு, குழல் முதலிய இசைக்கருவிகளின் இசைக்கு ஏற்பவும் பெண்கள் நடனமாடினர்(1253). அக்காலத்தில் இசையோடு இணைந்த கூத்தாகவே பெரும்பான்மையான நாடகங்கள் விளங்கின. […]
, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதனின் உள்ளத்தைத் தன் வயமாக்கி இன்பம் தந்ததோடு மட்டுமல்லாது தான் உணர்ந்து மகிழ்ந்ததை பிறரும் உணர்ந்து மகிழ அவ்வாறே வெளிப்படுத்தும் ஆற்றலே கலை எனப்படும், இக்கலைகள் ஓவியம், சிற்பம், காவியம் எனப் பலவகைகளில் வெளிப்படும். இவ்வாறு வெளிப்படும் கலைகளை 64 வகையாகப் பிரித்தனர். புத்தர் வரலாற்றைக் கூறும் லலிதவிஸ்தரம் எனும் நூலிலும், சமண நூல்களிலும், இந்து சமய நூல்களிலும் அறுபத்து நான்கு கலைகள் […]
, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றனர். சீவகசிந்தாமணிக் காப்பியமானது கட்டடத் தொழில், நகைத் தொழில்,தச்சுத் தொழில், வேட்டையாடுதல், மருத்துவம், ஆநிரை காத்தல் ஆகிய தொழில்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. கட்டடத்தொழில் கட்டடங் கட்டுபவர் ஒன்று கூடி கட்டடங்களைக் கட்டினர். பதினாறாயிரம் கட்டடத் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com செல்வம் என்பது உயர்ந்தது. இதனைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான இன்பத்தையும் மேலுலக வாழ்க்கைக்குத் தேவையான வீடுபேற்றையும் அடையலாம். ஆலமரம் அழிந்தாலும் அதனை விழுதுகள் தாங்குவது போல தாங்கள் சேர்த்து வைத்த செல்வம் முதுமைக்காலத்தில் தங்களைத் தாங்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பெருங்செல்வத்தையும் பெருஞ்செல்வர்களையஙம் உருவாக்கும் தொழிலாக வணிகம் விளங்குகின்றது. சீவகசிந்தாமணியில் வணிகம் பற்றிய பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. சிந்தாமணியில் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதன் தனது வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் இயற்கையாகக் கிடைக்காதபோது அவற்றைச் செயற்கையாக உருவாக்க முயன்ற முயற்சியே தொழில்களாகும். மனிதன் பல்வேறு தேவைகளின் அடிப்படையில் பலவகையான தொழில்கள் உருவானது. இவ்வகையில் உருவான தொழில்களைச் செய்வோர் அத்தொழில்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டனர். இதுவே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றம் பெற்றன. சீவகசிந்தாமணியில் உழவு, வணிகம், நெசவு, கொல்லு, தச்சு உள்ளிட்ட பலவகையான தொழில்கள் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மக்கள் தங்கள் வேலைகளைச் செய்த பின்னர் எஞ்சிய நேரத்தை இனிமையான பொழுதுகளாக்கப் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டனர். பொழுபோக்கு நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு வலிமையையும் சேர்க்க வல்லவையாகும். சீவகசிந்தாமணியில் நீர்விளையாட்டு, பந்தடித்தல், ஆழி இழைத்தல், கழங்காடல், கூடல் இழைத்தல் ஆகிய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. நீர் விளையாட்டு கோடைக்காலத்தில் வெயிலின் வெம்மையைத் தணித்துக் கொள்வதற்கு நீர்நிலைகளுக்குச் சென்று […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com உடலும் உள்ளமும் சோர்வடைந்த மக்கள் ங்களின் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காகவும் உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி முன்பைவிடத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்கு உதவும் தூண்டுகோல்களாக விழாக்கள் விளங்குகின்றன. இவ்விழாக்களைச் சமய விழாவென்றும் சமுதாய விழாவென்றும் குடும்ப விழாவென்றும் மூவகையாகப் பகுக்கலாம். சீவகசிந்தாமணியில் பெயர்சூட்டுவிழா, திருமணவிழா, முடிசூட்டுவிழா ஆகிய குறிப்பிடத்தக்க விழாக்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. பிற விழாக்கள் பலவாறு சிந்தாமணியில் இடம்பெற்றிருந்தாலும் இம்மூவகை […]