தமிழாய்வுத் துறைத்தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1 மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது குண்டலகேசியாகும். காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியமாக குண்டலகேசி திகழ்கின்றது. இக்காப்பியம் முழுமையும் கிடைக்கவில்லை. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை, சிஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரை, நீலகேசி இவற்றிலிருந்து தற்போது கிடைத்துள்ள பாடல்கள் பத்தொன்பது மட்டுமே ஆகும். விருத்தப்பாவால் அமைந்துள்ள இக்காப்பியத்தை குண்டலகேசி விருத்தம் என்றும் கூறுவர். புத்தமதக் கதையைக் கூறும் தேரி […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1. Mail: Malar.sethu@gmail.com சங்க காலத்தில் உழவே முதன்மையான தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏனைய மக்களைவிட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், கடையர், கடைசியர் என்னும் சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் சொற்களாகும். கடையர் என்பார் வயல்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் என்று கருதலாம், இவர்கள் நிலமற்ற எளிய மக்களாக இருத்தல் வேண்டும். இவர்களின் வாழ்க்கையை பெரும்பாணாற்றுப்படை(206-246), மதுரைக்காஞ்சி(246-270), மலைபடுகடாம்(10-105) முதலிய […]
முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் துறைத்தலைவர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail:Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் தகுதி வாய்ந்தது முத்தொள்ளாயிரம்;. வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட முத்தொள்ளாயிரம்; சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலாசிரியர் இந்நூலை யாத்துள்ளார். அகம் புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. […]
முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் துறைத்தலைவர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். தங்களின் புலமையாற்றலால் பல புதுமைகளைப் படைத்த பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். இவ்வாறு திகழ்ந்த மகளிரின் வாழ்க்கையை சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில் முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது. ஆனால்…. கூந்தலோ, பிறக்கும்போதே பெண்ணுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து…. அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் தனிச் சிறப்பு […]
முனவைர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இவ்விலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் சமுதாயச் சிந்தனைகளை உள்ளடக்கிய இலக்கியப் பெட்டகங்களாகவும் ஒளிர்கின்றன. இவ்விலக்கியங்கள் இயற்கையாக இறைவனைக் காண்பதோடு மட்டுமல்லாது இறைவனாக இயற்கையைக் காண்கின்றது என்பது நோக்கத்தக்கது. ஒன்பதாம் திருமுறையானது இறைவனைப் பாடுவதோடு மட்டுமல்லாது சூழலியல் சிந்தனைகளையும் வழங்குகின்றது. ஒன்பதாம் திருமுறை […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 52.அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த ஏழை…… (நிறைவுப் பகுதி) வாங்க…வாங்க…இப்பத்தான் ஒங்களப் பத்தி நெனச்சேன் …அடுத்த நிமிஷத்துல நீங்களே வந்து நிக்கறீங்க… என்னங்க அது கையில ஒரு புத்தகத்த வச்சிப் படிச்சிக்கிட்டு வர்ரீங்க…இங்க கொடுங்க நான் பாத்துட்டுத் தர்ரேன்…என்னது நீங்களே படிச்சிச் சொல்றீங்களா… சரி… […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 51. நீக்ரோ இன மக்களின் நம்பிக்கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏழை….. “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்” அட என்னங்க வரும்போதே பாடிகிட்டு வர்ரீங்க…என்ன போன வாரம் கேட்ட கேள்விக்குரிய விடையக் கண்டுபிடுச்சுட்டீங்களா…என்னது இல்லையா…அப்பறம் என்னங்க […]