author

தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை

This entry is part 1 of 9 in the series 29 அக்டோபர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை திருப்பத்தூரில் முதல் காலை. வீட்டு முற்றம் வந்து நின்றேன். குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று வீசியது. அப் பகுதியில் ஏராளமான சவுக்கு மரங்கள், கற்பூரத்தைலமரங்கள், .தென்னை மரங்கள் காணப்பட்டன. இடது பக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. எதிரே வலது பக்கத்தில் இரண்டு வீடுகள் ஒன்றாக சேர்ந்திருந்தன. வீடுகளின் முன் நேர்த்தியான பூந்தோட்டங்கள் காணப்பட்டன. மரங்களில் குருவிகள் கீச்சிட்டன. . குயில்கள் கூவின. பச்சைக் கிளிகள் பறந்து மகிழ்ந்தன. […]

தொடுவானம் 192. திருப்பத்தூர்

This entry is part 4 of 5 in the series 22 அக்டோபர் 2017

(சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை)           மகப்பேறும் மகளிர் இயல் நோயும் பிரிவில் நான் சேர்ந்துவிட்டேன். அங்கு வெளிநோயாளிப் பிரிவு, பிரசவ அஅறை, அறுவை மருத்துவக் கூடம், வார்டு என்று மாறி மாறி சென்றுகொண்டிருந்தேன். பிரசவ அறையில் இருந்தபோதெல்லாம் மேரியின் நினைவு வரும். அதை கலைந்துபோன கனவாக எண்ணி மறக்க முயன்றேன்.           பிரசவ அறையில் பயிற்சி மருத்துவர்கள் பிரசவத்துக்காக ஏற்பாடுகளை செய்துவிட்டு என்னை அழைப்பார்கள். நான் […]

தொடுவானம் 191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்

This entry is part 2 of 11 in the series 15 அக்டோபர் 2017

191. சீனியர் ஹவுஸ் சர்ஜன் நிதானமாக செயல்படலாம் என்ற முடிவுடன் வேலூரில் இருந்த எஸ்தர் என்னும் உறவினர் வீட்டில் தங்கினேன்.அவர் அண்ணிக்கு நெருங்கிய உறவினர். என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவருடைய கணவர் வில்சன் வேலூரில் பணி புரிந்தார். அவர்களுக்கு மூன்று பெண்களும் ஒரு மகனும் இருந்தனர்.சிறிய வீடுதான். அதில் ஒரு அறையில் நான் தங்கினேன்.நான் கல்லூரியில் படித்தபோது இங்கே அவ்வப்போது வருவதுண்டு. அன்று காலையிலேயே மருத்துவமனை சென்றேன். இயக்குனர் டாக்டர் எல்.பி.எம். ஜோசப்.. அவரிடம்தான் […]

தொடுவானம் 190. தெம்மூரில் தேன்நிலவு

This entry is part 3 of 5 in the series 8 அக்டோபர் 2017

            திருமணம் ஆனபின்பு ஒரு வாரம் கிராமத்தில்தான் இருந்தோம். அண்ணனும் அண்ணியும் , அத்தையும், அவரின் கடைசி மகன் அகஸ்டியனும் ஒரு வாரம் தங்கியிருந்தனர். தேன்நிலவை நாங்கள் இருவரும் தெம்மூரில்தான் கொண்டாடினோம்! கிராமத்துச் சூழல் இனிமையாகத்தான் கழிந்தது. செலவுகள் இல்லாத நிறைவான தேன்நிலவு!           மண் சுவர் வீடாக இருந்தாலும் குளுகுளுவென்றுதான் இருந்தது. இயற்கைச் சூழல் இதமாக இருந்தது. தென்னங் காற்றும், வேப்பங் காற்றும் […]

தொடுவானம் 189. திருமணம்

This entry is part 8 of 10 in the series 1 அக்டோபர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 31. 8. 1973. என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் என் திருமணம் நடந்தது. அது ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகவே நடந்தேறியது. நான் பிறந்து சிறு வயதில் வளர்ந்த தெம்மூர் கிராமத்தில் அற்புதநாதர் ஆலயத்தில் திருமணம் நடந்தது. கிராமச் சூழலுக்கேற்ப எங்கள் வீட்டுமுன் போடப்பட்டிருந்த பந்தலில்தான் வரவேற்பும் நடந்தது. ஒரு டாக்டருக்கும் மலேசிய மணப்பெண்ணுக்கும் நடக்கும் ஒரு திருமணத்துக்கான ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையான முறையிலேயே எங்களில் திருமணம் நடந்தேறியது. […]

தொடுவானம் 188. திருமண ஓலை

This entry is part 11 of 13 in the series 24 செப்டம்பர் 2017

            தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். அன்று இரவு தடபுடலாக மீன், இறால் நிறைந்த இரவு உணவு தயார் செய்து வைத்திருந்தார். அன்று இரவே திருமணம் பற்றி பேசினோம். பெண் தரங்கம்பாடியிலேயே இருப்பது என்று முடிவு செய்தோம் . திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்  கொடுத்தபின்பு திருமணத்தின் முதல் நாள் இரவு பெண்ணை வீட்டுக்கு அழைப்பது என்றும்  முடிவு செய்தொம். இடையில் நான் […]

தொடுவானம் 187. கடல் பிரயாணம்

This entry is part 9 of 10 in the series 17 செப்டம்பர் 2017

சிங்கப்பூர் துறைமுகம் காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது. பிரம்மாண்டமாக ” ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ” காட்சியளித்தது. சாமான்களை சுமை தூங்குபவர்கள் கவனமாக படிகளில் ஏறி கப்பலுக்குள் கொண்டுசென்றனர். அவர்களை பிரயாணிகள் பின்தொடர்ந்தனர். பிரயாணிகள் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். விமானத்தில் அப்படி முடியாது. எடை கட்டுப்பாடு இருந்தது.நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பெட்டிதான் கொண்டு சென்றோம்.           எங்களை வழியனுப்ப கோவிந்,  பன்னீர்,  ஜெயப்பிரகாசம்,  சார்லஸ் ஆகியோர்   வந்திருந்தனர்.எல்லாரிடமும் கைகுலுக்கிவிட்டு எங்களுடைய […]

தொடுவானம் 186. நண்பர்களிடம் பிரியாவிடை

This entry is part 1 of 12 in the series 10 செப்டம்பர் 2017

            என்னைக் கண்டதும் நண்பர்கள் இருவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அன்று மாலையில் நாங்கள் மூவரும் சீனர் உணவகத்தில் அமர்ந்துகொண்டோம். பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். அதைப் பருகியது இதமாக இருந்தது. கோவிந்த் தேநீர் அருந்தினான்.           நான் கண்ட கனவு பற்றி கூறினேன்.           ” நீ இதைப் பற்றியே எண்ணிக்கொண்டு படுக்கச் சென்றதால் இத்தகைய கனவு […]

தொடுவானம் 185. கனவில் தோன்றினார் கடவுள்

This entry is part 5 of 10 in the series 3 செப்டம்பர் 2017

          அனைத்து வழிகளும் மூடப்படட நிலை. நான் பெரும் கனவுடன் படித்து முடித்த மருத்துவப் படிப்பு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படவில்லை. சிங்கப்பூரில் இந்தியப்  பட்டங்கள் அனைத்துமே செல்லாது என்று சட்டம் இயற்றி ஆறு மாதங்கள் ஆகிறது. தேசியச் சேவையில் சேர்ந்தாலும் அங்கு இராணுவ மருத்துவராகப் ( கேப்டன் ) பணியாற்ற முடியாது. மலேசியாவில் என்னுடைய மருத்துவப் பட்டம் அங்கீகரிக்கப்பட்டாலும், நான் சிங்கப்பூரின் குடிமகன் என்ற ஒரே காரணத்தினால் எனக்கு அங்கும் வேலை […]

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

This entry is part 4 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864 இல் தொகையைச் செலுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நூல் அனுப்பி வைப்பேன். தொடர்பு கொள்ளவேண்டிய எண்: மலேசியா . … 017 7424200. Email: drgjohnsonn@gmail.com நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.