author

தொடுவானம் 154. இறுதித் தேர்வுகள்.

This entry is part 1 of 13 in the series 22 ஜனவரி 2017

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன்           154. இறுதித் தேர்வுகள்.           ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் வந்தன. தேர்வு என்றாலே யாருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். அதை ஆவலோடு யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் என் நிலைமையே வேறு. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடன் ஒரு மருத்துவன் ஆகவேண்டும் என்ற ஆவலே அதற்குக் காரணம். திருப்திகரமாக தேர்வுக்கு தயார் செய்திருந்தேன். பாட நூல்களை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்கவில்லையென்றாலும் வரக்கூடிய […]

தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

This entry is part 11 of 14 in the series 15 ஜனவரி 2017

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள் தங்கி, பின்பு  இருவராகி, இறுதியில் தனி அறையில் தங்கியதும் இனிமையான அனுபவமே. இப்படி கடந்த ஆறு ஆண்டுகள் வாழ்க்கையின் இளமையான பருவத்தை விடுதிகளில் தனியாகக்  கழிப்பதும் நல்லது என்றே தோன்றியது. நாம் இனி என்றுமே […]

தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

This entry is part 10 of 12 in the series 8 ஜனவரி 2017

நான் கவிஞன்  இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக என்னுடைய கல்வியைத் தொடர்ந்ததால் ஆங்கிலக் கவிதைகளை நிறைய படித்து இரசித்துள்ளேன். அவை பெரும்பாலும், ” The Golden Treasury ” என்னும் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்துதான் என்று கூறலாம். உலகப் புகழ்மிக்க இந்த நூலைத் தொகுத்தவர் Francis Turner Palgrave என்பவர். […]

தொடுவானம் 149. கோர விபத்து

This entry is part 5 of 13 in the series 18 டிசம்பர் 2016

                    தெம்மூரிலிருந்து நிறைவான மனதுடன் தரங்கம்பாடி புறப்பட்டேன்.           சீர்காழி, திருநகரி, பூம்புகார் வழியாக குறுக்குப்பாதையில் பேருந்து கடற்கரை ஓரமாகச் சென்று தரங்கம்பாடி அடைந்தது. வழக்கம்போல் அந்த ஊர் பரபரப்பு இன்றி அமைதியாக காட்சி தந்தது. கடற்கரையில் பெரும் இரைச்சலுடன் அலைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கரையை நோக்கி பாய்ந்து உடைந்து மறைந்து போயின. அலை அலையாய் அப்படி வந்தாலும் அவற்றின் முடிவு  அப்படிதான்.          நேராக அண்ணி வேலைசெய்யும் புளுச்சாவ் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன். அவர் […]

தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

This entry is part 14 of 17 in the series 11 டிசம்பர் 2016

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்! கிராம மக்களுக்கு அதுவே முக்கியமானது. விளைச்சல் நன்றாக இருந்தால்தான் நல்ல மகசூல் கிட்டும். நிலத்தில் போட்டுள்ள பணத்துக்கு மேலாக இலாபம் கிடைக்கும். நிலங்கள் இல்லாதவர்களுக்கும் அறுவடை காலத்தில் தொடர்ந்து வேலையும் கூலியும் கிடைக்கும். ஆனால் எல்லா வருடமும் இத்தகைய மகிழ்ச்சியைக்  காண […]

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

This entry is part 15 of 22 in the series 4 டிசம்பர் 2016

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது என்று வாழ்நாளைக் கழித்தவர்கள் எங்கள் முன்னோர்கள். இந்த நிலை எங்களுக்கு மட்டுமல்ல. சங்க காலத்திற்குப் பின் தமிழக கிராம மக்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்திருக்கவேண்டும். சொந்த நிலங்கள்  வைத்திருந்தவர்கள் அவற்றில் சாகுபடி செய்தனர். நிலம் இல்லாதவர்கள் அடுத்தவர் நிலங்களில் கூலி வேலை […]

தொடுவானம் 146. காணி நிலம் வேண்டும்…

This entry is part 19 of 23 in the series 27 நவம்பர் 2016

தேர்வுகள் நெருங்கிவிட்டது. இரவு பகலாக கண்விழித்து படிப்பில் கவனம், செலுத்தினோம். வரக்கூடிய வினாக்கள் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பாடநூல்களில் முக்கிய வரிகளைக் கோடிட்டு வைத்தோம். வெள்ளைத் தாள்களில் குறிப்புகள் எழுதிக்கொண்டோம். மனப்பாடம் செய்ய வேண்டிய குறிப்புகளை சிறு சிறு அட்டைகளில் எழுதி சட்டைப் பயில் வைத்துக்கொண்டு கல்லூரி பேருந்தில் மருத்துவமனை செல்லும் வேளையிலும், உணவு அருந்தும்போதும் வெளியில் எடுத்து பார்த்துக்கொள்வோம். தேர்வுகள் வந்தன. எழுத்துத் தேர்வுகளை கல்லூரியிலேயே எழுதினோம். நான் நன்றாகத்தான் […]

தொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

This entry is part 14 of 19 in the series 20 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன் நான்காம் ஆண்டில் இருந்தபோது எனக்கு ஓர் ஆசை உண்டானது. வேலூர் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நிறைய மலையாளிகள் இருந்தனர். அவர்களில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,,மாணவ மனைவிகள் அடங்குவர். அதுபோன்றே சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தாதியரும், தாதியர் பயிற்சி மாணவிகளும் இருந்தனர். இவர்கள் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினர். எனக்கு அவர்கள்போன்று பொங்கல் தினத்தைக் கொண்டாடவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அதை நான் தனிப்படட முறையில் தமிழ் […]

தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

This entry is part 6 of 17 in the series 13 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர் மிகவும் சாதுவாச்சே என்று கூறினான். அதனால்தான் என்னுடைய முறுக்கு மீசையைக் கண்டு பயந்துவிட்டார் போலும். அதோடு அவரை நான் பார்த்த பார்வை அப்படி இருந்திருக்கலாம் என்றும் கூறினேன். பரவாயில்லை, கூடுதல் வகுப்புத்தானே, அதனால் பாடத்தில் […]

தொடுவானம் 143. முறுக்கு மீசை

This entry is part 9 of 14 in the series 6 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை மட்டும் செய்தேன். பெண்கள் விடுதிவரை அமர்ந்திருந்தேன். கல்லூரி முதல்வரின் அலுவலகம் பெண்கள் விடுதி அருகேதான் இருந்தது. பெண்கள் அனைவரும் இறங்கியபின் நான் கடைசியாக வெளியேறினேன். அவர்கள் விடுதிக்குள் நுழையும்வரை நான் காத்திருந்தேன்.பின்பு கல்லூரி முதல்வர் […]