author

தொடுவானம் 39. கடல் பிரயாணம்

This entry is part 11 of 16 in the series 26 அக்டோபர் 2014

                                                                                                           நள்ளிரவு நேரத்திலும் […]

தொடுவானம் 38. பிறந்த மண்ணைப் பிரியும் சோகம்.

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

டாக்டர் ஜி. ஜான்சன் நான் அப்பா பற்றி அதிகம் ஏங்கியபோது எப்படி அவருக்கும் எங்கள் நினைவு வந்தது என்பது தெரியில்லை. ஒரு வேளை மலாயா திரும்பிய பெரியப்பா அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்.எது எப்படியோ அப்பா எங்களை சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார். அன்றிலிருந்து மண்ணாங்கட்டி உட்பட மற்ற பையன்கள் எல்லாரும் என்னிடம் கவலையுடன் பேசினர். இனிமேல் என்னை பார்க்க முடியாமல் போய் விடும் என்றனர்.நான் அங்கு அப்பாவுடன் தங்கி விடுவேன் என்றனர்.இவர்களில் பால்பிள்ளையும் மண்ணாங்கட்டியும்தான் அதிகம் கவலை கொண்டனர்.பால்பிள்ளை […]

தொடுவானம் -37. அப்பா ஏக்கம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

            கிராமத்தில் வானொலி இல்லாத காலம் அது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் ஒரேயொரு கிராமபோன் இருந்தது. எங்கள் வீ ட்டின் பின்புறம் உள்ள சாலை எதிரில் ஒரு செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார்.  அவரிடம் கிராமபோன் இருந்தது. அதிகாலையிலேயே அதிலிருந்து உரக்க பாடல்கள் ஒலிக்கும்.           அதில் அடிக்கடி அவர் திரும்பத் திரும்ப போடும் பாடல் ஒன்று எனக்கு இன்னும் மனதில் உள்ளது. […]

தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

                     குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அன்பு தெரியாமல் வளர்ந்துவிட்டேன். அது கிராமமாக இருந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை என்று கருதுகிறேன். அங்கு அப்பாவுடன் வளர்ந்த பிள்ளைகள் என்னைவிட எந்த  விதத்திலும் சொகுசாக இருந்ததாகத் தெரியவில்லை. விவசாய வேலை காலங்களில் பெரும்பாலான பெற்றோர் நாள் முழுதும் வயல் வெளியில்தான் கழித்தனர். இருட்டிய பின்புதான் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறு பிள்ளைகள் பள்ளி செல்வதும் தெருவில் விளையாடுவதுமாக இருப்பார்கள்.           என்னுடன் விளையாடும் […]

தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

(இளம் வயதில் அப்பா.)           தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் மேன்மை தங்கிய அபூபக்கரின் அரண்மனையில் தோட்ட வேலைகள் செய்துள்ளார். அப்போது சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்த பெரியப்பாவையும் அப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அவர்கள குளுவாங்கில் இருந்துள்ளனர். பெரியப்பா அங்கு லம்பாக் தொட்டத்து தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெரியம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.          அப்பா சிறிது காலம் குளுவாங் அரசு […]

தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

            நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில் இருந்தேன்.           விவசாயக் குடும்பம் என்பதால் குழந்தைப் பருவத்திலேயே வயல் வெளியிலும் களத்து மேட்டிலும் வளர்ந்துள்ளேன். நாற்றாங்காலில் முதன்முதலாக என்னுடைய கைகளில்தான் விதை நெல்லைத் தந்து நாற்றாங்காலில் விதைக்கச் சொல்வார்கள்.           சில நாட்களில் தாத்தா, பாட்டி, அம்மா மூவரும் வயல் வெளிக்குப் […]

தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்

This entry is part 24 of 25 in the series 14 செப்டம்பர் 2014

          நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது.           அந்த ஆலயத்தை ஊர் மக்கள் மாதா கோவில் என்றே அழைப்பர். உண்மையில் அது மாதா கோவில் இல்லை. கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் மாதாவை வழி படுவார்கள். அது சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த ஆலயம் – அற்புதநாதர் ஆலயம். […]

தொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை

This entry is part 12 of 26 in the series 7 செப்டம்பர் 2014

            சிலர் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்றும் சித்திரைதான் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு. இவர்கள் இனத்திற்கும் மதத்திற்கும் வேற்றுமை தெரியாதவர்கள்.           சித்திரை இந்து மதத்தினரின் புத்தாண்டு. ஆனால் எல்லா தமிழர்களும் இந்துக்கள் இல்லை. தமிழர்களில் இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்த்துவர், புத்த மதத்தினர், மதங்களை நம்பாத நாத்திகர்கள் கூட உள்ளனர். மதச் சடங்குகள் கொண்ட சித்திரைப் புத்தாண்டை எப்படி இந்துக்கள் அல்லாத […]

தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

         கறவைப் பசுக்களுக்கு பசும்புல் தந்தால் நிறைய பால் சுரக்கும்.          பாட்டிதான் பால் கறப்பார். சில நாட்களில் அம்மாவும் கறப்பதுண்டு. வேறு ஆட்கள் கறக்க முயன்றால் காலால் உதைத்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய்  எடுக்கும் பொறுப்பும் பாட்டியுடையதுதான். அப்படி எடுக்கும் போது என்னை வெண்ணெய் உருண்டைகளை உண்ணச் சொல்வார். வெண்ணெய் உருக்கி நெய் எடுப்பார். நெய் மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.அதோடு முருங்கைக் கீரையைச் சேர்த்து உருக்கினால் அதன் மணமும் சுவையும் தனி!       […]

தொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை

This entry is part 1 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

டாக்டர் ஜி. ஜான்சன்            தாம்பரம் புகைவண்டி நிலையம் சென்னை நகருக்கு நுழைவாயில் எனலாம். தெற்கிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் அனைத்து புகைவண்டிகளும் இங்கே நிற்கும். தாம்பரத்திலிருந்து சென்னை வரை செல்ல மின்சார இரயில் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.           அத்தை மதிய உணவும் இரவு உணவும் மிகவும் சுவையாக தயார் செய்திருந்தார். வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து அறுத்து குழம்பு வைத்திருந்தார்.   […]