ஜோகூர் லாபீஸ் எஸ்டேட் அக் காலத்தில் மலாயாவில் மிகப் பெரிய செம்பனைத் தோட்டமாகும். காலனித்துவ ஆட்சியின் போது அத் தோட்டம் ” சாக்பின் ” எனும் பிரான்சு நிர்வாகத்தில் இயங்கியது. ச்சா ஆ முதல் லாபீஸ் வரை பெரும் பரப்பளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செம்பனை மரங்கள் பசுமையுடன் காட்சி தந்தன. […]
டீ. பி. என்று அழைக்கும் நோயைத்தான் தமிழில் காச நோய் என்கிறோம். டீ. பி. என்பது ட்டியூபெர்குலோசிஸ் ( Tuberculosis ) என்பதின் சுருக்கமாகும். இது டீ. பி. நுண்கிருமியால் ( Mycobacterium Tuberculosis ) உண்டாகிறது. இந்த கிருமி காற்றினால் பரவுவது. அதனால் வியாதியால் பாதிக்கப்பட்டவர் பொது இடங்களில் இருமினால் சுற்றிலும் இருக்கும் பலருக்கும் தோற்று உண்டாகும். வீட்டில் ஒருவர் இருமிக்கொண்டிருந்தால் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும். வியாதி உள்ளவர் இருமி சளியை வீதியில் துப்பினால் […]
ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் ஓர் இலட்சியத் தமிழ் மாணவனாகத் திகழ வேண்டும் என்ற வாஞ்சையுடன் செயல்படலானேன். இப்படி ஆக வேண்டுமெனில் நிறைய தமிழ் நூல்களைப் படித்தாக வேண்டும். தமிழின் இனிமை என்னை மயக்கியது. அதோடு தமிழில் எழுதுவது மிகவும் பிடித்தது! திருக்குறள், புறநானூறு, அகநானூறு ஆ கியவற்றை வாங்கினேன். அவற்றில் திருக்குறள் மிகவும் கவர்ந்தது.ஒவ்வொரு குறளும் சுருக்கமாக இரண்டே […]
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன். தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் படிக்க என்னுடைய தமிழ்ப் பற்றும், திராவிட உணர்வும் மேலோங்கியது. தமிழ் மக்கள் எவ்வளவு அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்பதைக் கண்டு வியந்து போனேன். தங்களுடைய எழுத்தாற்றல் மூலமாக எவ்வாறு இளைய தலைமுறையினரை பகுத்தறிவுப் பாதையில் கொண்டுச் செல்ல திராவிட இயக்கம் முயன்று வருவதையும் உணரலானேன். […]
ஒரு காலத்தில் இப்பகுதியில் கொசுக் கடியால் மலேரியா காய்ச்சல் பரவி ஆயிரமாயிரம் பேர்கள் இறந்து போக நேர்ந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அயரா உழைப்பால் மலேரியா இன்று முன்னேறி வரும் நாடுகளில் ஓரளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் இடத்தை இன்று டெங்கி காய்ச்சல் பிடித்து வருகிறது என்றால் அது மிகையன்று. இன்று கொசுக்கடியால் வைரஸ் தொற்று உண்டாகும் வியாதிகளில் டெங்கி காய்ச்சல்தான் முதலிடம் வகிக்கிறது. உலகின் வெப்பப் பிரதேசப் பகுதிகளில் வருடத்தில் 500 – […]
ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியில் கோவிந்தசாமி மாணவன். இவர்கள் மூலமாக முதலில் எங்கள் நான்கு பள்ளிகளுக்கிடையில் சிறப்பான பட்டிமன்றம் நடத்தி சரித்திரம் படைத்தோம். அதன் செய்தியை தமிழ் முரசில் வெளியிட்டோம். அதைப் பார்த்த மற்ற ஆங்கிலப் பள்ளி தமிழ் மாணவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவ்வாறு மாணவர்களிடையே […]
” கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை. தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புங்கள். ” வை. திருநாவுக்கரசு சொன்னது எனது வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை உண்டு பண்ணியது. நான் வீடு திரும்பியபோது அவர் சொன்னது பொன்மொழியாக செவிகளில் ரீங்காராமிட்டது. நான் ஏன் ஓர் எழுத்தாளனாக உருவாகக் கூடாது என்ற எண்ணம் மனதில் எழுந்தது. எழுத்தாளனாக வேண்டுமெனில், தமிழ் மொழியில் புலமை வேண்டும். நிறைய .தமிழ் நூல்கள் படிக்க வேண்டும். விடா முயற்சியுடன் பொறுமையுடன் எழுத வேண்டும். பள்ளியின் […]
ஆஸ்த்மா நோய் என்பது இன்று வளர்ந்து வரும் நாடுகளில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக பெருகிவரும் தொழிற்சாலைகளும், வாகனங்களும், அதனால் உண்டாகும் சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கெடும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. வளர்ந்துவரும் நாடுகளில் ஆஸ்த்மா 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாகி வருகிறது. அங்குள்ள ஜனத்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப் படுகின்றனர். மக்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தைக் கடைப் பிடிப்பதால் இந்த வியாதி இன்னும் அதிகமாகத் தோன்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும் […]
வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது. தேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் தொண்டை வலி நம் அனைவருக்குமே எப்போதாவது வந்திருக்கலாம். அப்போது தொண்டையைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் ” டான்சில் ” வீங்கியுள்ளது என்று கூறியிருக்கலாம். ” டான்ஸில் ” என்பதை தொண்டைச் சதை எனலாம். தொண்டையின் இருபுறமும், உள்வாயில் நாக்கின் அடியில் இவை அமைந்துள்ளன. நிணத்திசுக் கோளங்களான இவை, உடலின் தடுப்புச் சக்தியின் உறுப்புகள். இவை ‘ லிம்ப் ‘ எனும் நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் […]