டாக்டர் ஜி. ஜான்சன் பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். பனம்பழம் எப்போதும் கிடைக்காது. வருடத்தில் சில மாதங்களில்தான் அது கிடைப்பதுண்டு. அப்போதுதான் கிராமங்களில் நொங்கு, பதநீர் எளிதில் கிடைக்கும். பனை மட்டைகளில் மடித்து நொங்கு விற்பார்கள். மண்பானைகளில் பதநீர் கொண்டுவருவார்கள். பனம்பழம் அப்படி கொண்டு வந்து […]
மருத்துவக் கட்டுரை கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும் நோய் உண்டாகிறது. இது நோய்க் கிருமிகளால் உண்டாவது அல்ல. முழுக்க முழுக்க மது அருந்துவதால் மட்டுமே ஏற்படுவது. மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த […]
டாக்டர் ஜி. ஜான்சன் நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாழாகியவண்ணமுள்ளன. தற்போது இளம் வயதிலேயே குடிக்க பழகிக்கொண்டு எதிர்காலத்தையே வீணடிக்கும் பல இளைஞர்களும் பெருகி வருகின்றனர். இவர்கள் குடி போதையில் தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாகின்றனர். கொலை, தற்கொலை, விபத்து கொள்ளை, […]
டாக்டர் ஜி. ஜான்சன் அப்போது எனக்கு வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மணி அடித்ததும் நாங்கள் பைகளையும் சிலேட்டுகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வீடு திரும்ப அவ்வளவு ஆர்வம் எங்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு. நான் எப்போதும் கலியபெருமாளுடன்தான் வீடு செல்வேன். அவனை கிராமத்தில் எல்லாருமே ” மண்ணாங்கட்டி ” என்றுதான் கூப்பிடுவார்கள். அப்போது அதன் காரணம் எனக்குத் தெரியாது. நானும் அவனை அப்படிதான் அழைப்பேன். அவனும் அது பற்றி கவலைப் படுவதில்லை. […]
டாக்டர் ஜி. ஜான்சன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை. ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற […]
டாக்டர் ஜி.ஜான்சன் என்னுடைய ” உடல் உயிர் ஆத்மா ” நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் கவிஞர் முருகதாசனும் ஏற்பாடு செய்து தமிழ் முரசில் செய்தியும் வெளியிட்டனர். நூல் ஆய்வை என்னுடைய பள்ளித் தோழரும் பால்ய நண்பரும் எழுத்தாளரும் விமர்சகருமான இராம. கண்ணப்பிரான் செய்ய ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்து மண்டபத்தில் விழா […]
டாக்டர் ஜி. ஜான்சன் தரங்கம்பாடி கடல் எப்போதுமே இறைச்சலுடன்தான் காணப்படும். அந்த அலைகளின் ஓசை யாரோ ஒரு பண்டைய புலவனின் காதிலோ அல்லது சோழ மன்னனின் செவியிலோ கீதமாகக் கேட்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அந்தப் பகுதிக்கு தரங்கம்பாடி என்று அழகான தூய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும். தரங்கம்பாடி என்பதற்கு ” பாடும் அலைகள் ” என்பது பொருளாகும். அதன் அலைகள் தொடர்ந்து வந்து கரையோரத்தில் உள்ள பாறைகள் மீது முட்டி மோதி பெரும் ஓசையுடன் […]
டாக்டர் ஜி. ஜான்சன் Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம். இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே! விஷம் குடித்து அல்லது பாம்பு, தேள் கடித்து விஷம் ஏறி உயிர் போவதையும் அறிவோம். ஆனால் இவை ஏதும் இல்லாமல் இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்கும்? இது வேறு விதமான நஞ்சு. இந்த நஞ்சு […]
டாக்டர் ஜி. ஜான்சன் ஒரு விடுமுறையில் தமிழகம் சென்றிருந்தேன். அப்போது மகாபலிபுரம் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க விரும்பினேன். நான் கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நாவலை விரும்பி திரும்பத் திரும்ப பலமுறைகள் படித்து மகிழ்ந்திருந்ததால் மகாபலிபுரம் மீது அதிகமான ஈர்ப்பு உண்டானது. முன்பே அங்கு நான் சென்றிருந்தாலும் இந்த முறை அங்குள்ள சிற்பக் கலை மீது கவனம் செலுத்த முடிவு செய்திருந்தேன் . முதலில் கடற்கரைக் கோவில் சென்றேன். […]
டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சு படபடப்பு அல்லது மார்புப் படபடப்பு ( palpitations ) என்பது அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பாகும். இது வியாதி இல்லாமலும் ஏற்படலாம், அல்லது இருதயப் பிரச்னையாலும் உண்டாகலாம். கடும் உழைப்பு, கவலை, பரபரப்பு காரணமாகவும் இது ஏற்படலாம். சாதாரணமாக நமது இருதயத் துடிப்பை நாம் அறிவதில்லை. சில வேளைகளில் இருதயம் வேகமாகத் துடிப்பதை நம்மால் உணரமுடியும். இதையே நெஞ்சு படபடப்பு என்கிறோம்.அதிகமான மது , புகைத்தல் , […]