டாக்டர் ஜி.ஜான்சன் ” டாக்டர்! தூங்கி எழுந்து பார்த்தேன்! என் கால் விரல்களில் இரண்டைக் காணவில்லை! ” சண்முகம் அவ்வாறு கூறி அழுதான். இது போன்ற விநோதமும் மாயமும் கொஞ்ச நாட்களாகவே அங்கு நடந்தது. அது செங்கல்பட்டு லேடி வில்லிங்டன் தொழுநோய் மறுவாழ்வு இல்லம். இது அன்றாட நிகழ்வு என்பதால் இது பற்றி யாருமே அக்கறை கொள்ளவில்லை. ஆனால் டாக்டர் காக்ரென் (.Dr. Cochrane ) அப்படியில்லை. அவரை அது பெரும் […]
டாக்டர் ஜி.ஜான்சன் மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே. தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது […]
டாக்டர் ஜி,ஜான்சன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் போது மருத்துவ விடுப்பு தருவது பெரும் பிரச்னையாகும். அதில் குறிப்பாக திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் மருத்துவ விடுப்புக்காக ” நோயாளிகள் ” அலை மோதுவதுண்டு. வார இறுதி விடுமுறையுடன் இன்னும் ஒரு நாள் சேர்த்துக்கொள்ள இந்த முயற்சியாகும். இதனால் திங்கள் அன்றும் வெள்ளி அன்றும் மருத்துவர்களுக்கு வேலை அதிகம் என்பதோடு யாருக்கு விடுப்பு தருவது யாருக்கு மறுப்பது என்பதில் சிரமம் உண்டாகும். கலையில் சுமார் நூற்று ஐம்பது வெளி நோயாளிகளைப் […]
டாக்டர் ஜி.ஜான்சன் தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன் திணறிக்கொண்டு விழித்து எழுந்து விடுவர்.தேவையான கார்பன்-டை -ஆக்ஸ்சைடு இல்லாதிருத்தல் , சுவாச மையத்தில் தூண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும். தூக்க மூச்சடைப்பு நடுத்தர வயதுடைய , உடல் பருமன் அதிகமுள்ள ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும். மொத்த ஜனத்தொகையில் 1 முதல் […]
டாக்டர் ஜி.ஜான்சன் புருநோவுக்கு வயது பத்து . எங்கள் வீட்டில் பிறந்தது. அதன் தாய் ஸ்நோவி..சமீபத்தில்தான் காணாமல் போனது.இரண்டுமே ஒரு அடிக்குக் குறைவான உயரம் உடையவை. ஸ்பிட்ஸ் ( spitz ) ரகத்தைச் சேர்ந்தவை.வெண் பனி நிறத்தில் தாயும் , சாம்பல் நிறத்தில் மகனும் விளையாடுவதும், சண்டைப் போடுவதும் எங்களுக்கு நல்ல பொழுது போக்காகும். பால் மறந்த புருநோவுக்கு அதன் தாயும் மறந்துபோனது.இது பற்றி நான் தீர பல நாட்கள் யோசித்து முடிவு தெரியாமல் […]
டாக்டர் ஜி.ஜான்சன் கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் பிரதான வீதியில்தான் நான் பணிபுரியும் குவாலிட்டாஸ் ( Qualitas ) கிளினிக் உள்ளது. இது மலாய்காரர்கள் நிறைந்துள்ள பகுதி. சுற்று வட்டாரத்தில் பெல்டா செம்பனைத் தோட்டங்கள் ( FELDA oil palm estates ) நிறைய உள்ளன. நல்ல வசதியுடன் மலாய்க்காரர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கரங்களில் பணம் புரள்வது இங்கு கண்கூடு! என் கிளினிக் இருக்கும் வரிசையில் இரண்டு உணவகங்களும், பக்கத்துக்கு வரிசையில் […]
டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம். ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. இந்த கொசு வகையின் பெயர் ஏ .எஜிப்டி ( A .aegypti ) […]
டாக்டர் ஜி.ஜான்சன் நம்பிக்கை என்பது அவரவரைப் பொருத்தது. ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் தெரியலாம்.சில வேளைகளில் இந்த மூடத்தனத்திலும் ஓர் உண்மை புதைந்திருப்பதையும் கண்டு வியந்துள்ளேன். இது நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவ்வப்போது நினைவில் வந்து போகும் பொது நான் சிரித்துக்கொள்வேன். என் பால்ய நண்பன் செல்வன். என்னைவிட இரண்டு வயது இளையவன். பட்டதாரி. நிறைய ஆங்கில நூல்களை படிப்பவன். ஆங்கில எழுத்தாளன். நல்ல சிந்தனையாளன். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்துவன்.திருமணம் […]
டாக்டர் ஜி.ஜான்சன் கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி மண்ணீரலைத் தொட்டுக் கொண்டிருக்கும்.இது சுமார் 18 செ .மீ . நீளமும்,, சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் ( Insulin ) என்ற இயக்கு நீரும் ( hormone ) […]
டாக்டர் ஜி.ஜான்சன். இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறி பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். மருத்துவர் இதை ஒவ்வாமை ( allergy ) என்று சொல்லி […]