டாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு ஆலயம் நிறைந்திருந்தது. அனைத்து இருக்கைகளிலும் சபையோர் அமர்ந்திருந்தனர். பலர் உள்ளே இடம் இல்லாத காரணத்தால் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். சாதாரண ஞாயிறு காலை ஆராதனைகளின்போதே ஆலயம் நிரம்பிவிடும். தேர்தல் என்பதால் வாக்களிக்க சபை உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். நாங்கள் அனைவரின் வீடு தேடிச் சென்று அவர்களை வாக்களிக்க வரச் சொல்லியிருந்தோம். பணி காரணமாக ஆலயத்துக்கு வரமுடியாதவர்கள்கூட அன்று அங்கு காணப்பட்டனர். ஆலயத் தேர்தலில் நிச்சயமாக புது […]
டாக்டர் ஜி. ஜான்சன் . நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் […]
கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட எனக்குக் கிடைத்தது. நண்பர்கள் பாலராஜ், கிறிஸ்டோபர் இருவருடன் மாலையில் சமாதானபுரம் தாண்டிய காட்டு மேட்டுக்குச் சென்றேன். அங்கு சாய்ந்து கிடந்த மரங்களின்மேல் அமர்ந்து கொண்டோம். அப்போது பால்ராஜ் ஆலய தேர்தல் […]
நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம். கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் புகுந்த நகம். கால் […]
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சை செய்துகொண்டால் நல்ல குணம் கிடைக்கும். இல்லையேல் நிரந்தர பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரும். முதலில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.அப்படி வைத்துக்கொண்டால் கண்கள் […]
தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும். என்னுடைய முடிவை பன்னீரிடம் சொன்னேன். அவன் கலைமகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு என்னை சிங்கப்பூரிலேயே இருக்கச் சொன்னான். எனக்கு அது உகந்ததாகப் படவில்லை. திருமண ஆசை காட்டி […]
தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை ” கிரேம்ப் ” என்பர். உண்மையில் இதை தசைகளில் உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு. இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை நார்ச் சுரிப்பு, தசை மரத்தல், சூரை பிடித்தல், தசை இசிவு, பிடியிருக்கம் என்ற பெயர்களில்கூட இது அழைக்கப்படுகிறது. கடுங்குளிரினால் அல்லது மட்டுமீறிய தளர்ச்சியினால் உண்டாகும் தசைநார் பிடிப்பு இது எனலாம். தசைப் பிடிப்பு என்பது […]
சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு பயம்! என் வரவை எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமி காணப்பட்டான். நான் நடு அறையில் மருத்துவ நூல்களுடன் தஞ்சம் கொண்டேன். காலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை செல்வேன். அப்போது வெள்ளை […]
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து சிறுநீரகக் குழாய்களின் வழியாக சிறுநீர்ப் பையில் வந்து சேர்ந்தபின் வெளியேறுகிறது. இதில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிருமித் தோற்று உண்டாகலாம். இது இரு பாலரிடையேயும் காணப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இது அதிகம் காணப்படும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரில் தொற்று உண்டாவது மிகவும் சுலபம். அதிலும் மணமாகி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு இது மிகவும் எளிதாக உண்டாகும். ஆண்களுக்கு 50 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இது உண்டாவது மிகவும் குறைவு. இரு […]
பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற சந்தேகம் அவனுக்கு. நான் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. பன்னீர் எங்களை திசை திருப்பும் வகையில் மருத்துவத் தேர்வு பற்றி பேசினான். என்ன பாடங்கள்கள் தேர்வில் கேட்பார்கள் என்றான். […]