. நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம். கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 […]
மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலை பளு அதிகமாகி அதன் செல்கள் ( cells – இதற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை ) அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் ( scars ) நிறைந்துவிடுகின்றன. இவற்றால் கல்லீரலின் வேலையைச் செய்ய இயலாது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலை கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் அல்லது ஆங்கிலத்தில் […]
கலைமகள் வந்தபின்பு நான் மருத்துவமனை உணவகத்தில் உண்பதை நிறுத்திக்கொண்டேன். அம்மா கலைமகளுக்கும் கலைசுந்தரிக்கும் சமையல் கற்றுத் தந்திருந்தார். . அது இப்போது எனக்கு உதவியாக இருந்தது. கலைமகள் என்னுடன் இருக்கும்வரை இங்கே சமையல் செய்யலாம். உணவுப் பிரச்னை ஒரு வகையாகத் தீர்ந்தது. மனைவி இன்னும் மலேசியாவில்தான் .இருந்தாள். இரண்டு வாரத்துக்கு ஒரு கடிதம் வரும். அலெக்ஸ் நன்றாக இருப்பதாக எழுதுவாள். […]
டாக்டர் ஜி. ஜான்சன் 203. எனக்கொரு மகன் பிறந்தான் … மருத்துவமனையில் நடந்துள்ள ஊழல் ஊழியர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அதுபோன்ற இனிமேல் யாரவது செய்தால் சுலபத்தில் பிடிபடுவார்கள் என்ற நிலையும் உருவானது. அந்த வகையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா மிகவும் கண்டிப்பாகவே இருந்தார். ஆனால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனைச் சங்கம் இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக ஒரு தீர்வைச் சொல்லாமல் தள்ளிப்போட்டது. இதனால் டாக்டர் செல்லையா பொறுமை இழந்தார். இதனிடையே […]
டாக்டர் ஜி. ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை சிகிச்சையில் இதுவே முதலிடம் […]
டாக்டர் ஜி. ஜான்சன் ஆஸ்த்மா எனபது சுவாசிக்க குழாய்களின் தொடர் அழைச்சி எனலாம். இதனால் சுவாசக் குழாய்களின் சுருக்கம் காரணமாக மூச்சுத் திணறலும், இருமலும் விட்டு விட்டு உண்டாகும்.நெஞ்சுப் பகுதியில் இறுக்கமும் காற்று வெளியேறும்போது ” வீஸ் ” என்னும் ஓசையும் உண்டாகும். இந்த தொல்லை ஒரு நாளில் சில தடவையோ, அல்லது வாரத்தில் சில நாட்களோ ஏற்படலாம். இது இரவில் அதிகமாகலாம். ஆஸ்த்மா குழந்தைப் பருவத்தில்கூட தோன்றும் நோய். ஆனால் அவர்களுக்கு 12 வயதானபின் இந்த […]
டாக்டர் ஜி. ஜான்சன் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை முழு மூச்சுடன் வேலையில் கவனம் செலுத்தினேன். பகலில் வார்டுகளிலும் வெளிநோயாளிப் பகுதியிலும் நோயாளிகளிடம் கழித்தேன். மாலையில் சில நாட்களில் தாதியர் பயிற்சிப் பள்ளியில் மாணவிகளுக்கு மருத்துவ வகுப்பு நடத்தினேன்.அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் எடுத்தாலும் தமிழிலும் விளக்கம் அளித்து எளிமைப் படுத்தினேன். மருத்துவ நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துச் செல்வேன்.கரும்பலகையில் படங்கள் வரைந்து விளக்குவேன். மொத்தம் நாற்பது மாணவிகள் இருந்தனர். என்னுடைய வகுப்பில் அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பயின்றனர். அவர்களை […]
டாக்டர் ஜி. ஜான்சன் 201. நல்ல செய்தி நாடகத்தை எழுதி, அதை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தபின்பு மருத்துவமனை ஊழியர்களிடையே எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் தாதியர் பயிற்சி மாணவியர்கள் என்னை ஒரு கதாநாயகனாகவே பார்க்கலாயினர். பால்ராஜ் , கிறிஸ்டோபர் ஆகியோருடன் சேர்ந்தபின்பு நான் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களின் மீது இரக்கமும் அன்பும் கொண்டு பழகலானேன். ஒரு மருத்துவர் அவர்களின்மேல் பரிவுடன் இருப்பது அவர்களுக்கு உற்சாகத்தையே தந்தது. அவர்களில் சிலர் தங்களுக்கு உள்ள குறைகளை என்னிடம் […]
டாக்டர் ஜி. ஜான்சன் எஸ் .எல். இ . என்பது ” சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் ” ( Systemic Lupus Erythematosis ) என்பதின் சுருக்கம் இதை பல உறுப்புகளின் அழற்சி எனலாம். இதில் செல்களின் நூக்கிளியஸ் என்பதற்கு எதிராக எதிர்ப்பு சக்தி அல்லது ” எண்டிபாடி ” என்பது இரத்தத்தில் உருவாகும். இது ஒரு வினோதமான நோய்தான். இது பெரும்பாலும் 20 முதல் 40 வ்யதுவரையுடைய பெண்களை அதிகம் தாக்குகிறது. உல கில் சுமார் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 200. நாடக அரங்கேற்றம் டாக்டர் பார்த் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று சுவீடன் திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் மட்டுமே மருத்துவ வெளிநோயாளிப் பிரிவையும் வார்டுகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்கு அது சிரமமாகத் தெரியவில்லை. காரணம் அவர் இருக்கும்போதே நான்தான் முழுதுமாக வார்டுகளிலிருந்தவர்களைக் கவனித்துக்கொண்டேன். ஒருவேளை அவர் வேண்டுமென்றே முழுப் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர் சென்றபின்பு நான் தனியே சமாளிக்க எனக்கு மன தைரியம் வரவேண்டும் என்றும் […]