மொழிபெயர்ப்பு

  பகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய்!   -          இலெ. அ. விஜயபாரதி
நம்பிக்கை

நம்பிக்கை

பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?!   -          இலெ.அ. விஜயபாரதி  

ஒரு பூவும் சில பூக்களும்

  நிழல்  மதி தொலையும் அதிகாலையில் இரவி தொலையும் அந்திமாலையில் நிழல் தொலைத்திருக்கும்… இவ்வுலகம்!   ஒரு பூவும் சில பூக்களும் காதலின் காதோரத்தில் கவிதை பாடிக்கொண்டிருந்தது ஒற்றை ரோஜா! கட்டிலின் கால்களில் மிதிபட்டு கிடந்ததோ மல்லிகை பூக்கள்!! - இலெ.அ.…