February 13, 2012
டிக்கெட் எடுத்திட்டியா டிபன் எடுத்திட்டியா தண்ணி எடுத்திட்டியா தலகாணி எடுத்திட்டியா பூட்டு செயின் எடுத்திட்டியா போர்வை எடுத்திட்டியா போன் எடுத்திட்டியா ஐபாட் எடுத்திட்டியா… அலாரம் வெச்சுட்டியா…. கேள்விகளால்…
January 29, 2012
மாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன். அழுக்கடைந்த குடிப்பக மூலையில் ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில்…
January 8, 2012
மண்டப முகப்பில் கும்பிடுகளை உதிர்த்து மணமேடை நிழற்பட பதிவு வரிசையைத் தவிர்த்து பசியாத வயிற்றுக்கு பந்தியில் இடம் பிடித்தேன் சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட இடது பக்கயிருக்கைக் கிழவியின்…
December 4, 2011
விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு படிப்பு பணி தொழிலென எதையும்…
November 20, 2011
கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது ஒரு மண்புழு போல நள்ளிரவு…
November 7, 2011
ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று பள்ளங்களில் பதுங்கி நிரம்பி பாறைகளில் தாவிப்படிந்து சரிந்து விழுந்து குதித்து வழிந்து தன்னைத் தாய்மையாக்கி தன்னையே ஈன்றெடுத்து தன்னுள்ளே தன்னைச் சலித்து தன்னைத்…
October 30, 2011
சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின்…
September 4, 2011
நீள் பயணங்களில் நெரியும் சனத்திரளில் பாரம் தாங்கமுடியாமலோ பத்திரமாய் உறங்கட்டுமெனவோ நம் மடிமீது வலிய இறுத்தப்படும் குழந்தையின் எப்போதாவது இதமாய் உந்தும் பிஞ்சுப்பாதம் இதழ்வழியே தவழ்ந்து ஈரமூட்டும்…
August 21, 2011
துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி…
August 7, 2011
உங்களைவிட சக்தி வாய்ந்த அதிகாரத்தால் நிர்பந்திக்கப்பட்டு, உங்களுக்கு சற்றும் ஒப்புதலில்லாத உறுத்தல் நிறைந்த ஒரு அநியாயத்தைச்செய்ய நேர்ந்தால் அந்த உறுத்தலோடு எத்தனை நாட்கள் உங்களால் நிம்மதியாக உறங்கிட…