எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது. கதை சொல்லும் நேர்த்தியில் பாரதிக்குமாரின் சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன. பாரதிக்குமார் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர். பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர் சென்னை11 வெளியிட்டுள்ளது. இந்நூலை தனது சகோதரர் குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும் பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில் அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர், வாசகர்க்கு அறிவிக்கிறார். பின்புலமாகி […]
எஸ்ஸார்சி நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும் விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய மெய்நிகர் அமர்வு மற்றும் கவிதை நேசிப்புக்கூடுகை என்பவை அவை. 121 நவீன விருட்சம் எப்படி வந்துள்ளது என்பதனை இவண்ஆராய்வோம். அழகியசிங்கரின் ’கழுதை’ கவிதை என்னை மிகவும் பாதித்தது. அப்பா மகளைச்செல்லமாகக்கழுதை என்று விளிக்கிறார். படவா படுவி என்று […]
பின்னூட்டங்கள்